தீர்மானத்தின் வல்லமை 55-10-07 யாவும் கைகூடிடும், நம்பிடுவாய்; நம்பிடுவாய், நம்பிடுவாய், யாவும் கைகூடிடும், நம்பிடுவாய். 1. தலைகளை சற்றுநேரம் நாம் நம்முடைய வணங்குவோமாக. எங்கள் பரலோக பிதாவே, பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு எங்களுடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், இன்றிரவு உமக்கு நன்றி செலுத்துகிறோம். இயேசு எப்படி இவ்வுலகிற்கு வந்து பாவிகளாகிய நமக்காக மரித்து, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, இன்றிரவு மாட்சிமை பொருந்தியவரின் வலதுபாரிசத்தில் அமர்ந்திருந்து, நம்முடைய அறிக்கையின்பேரில் பரிந்து பேசும்படியாக என்றென்றுமாக ஜீவித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இன்றிரவு நம்முடைய எல்லா பாவத்தையும், குற்றங்களையும், மீறுதலின் பாவத்தையும், புறக்கணித்தலின் பாவத்தையும், நம்முடைய பரலோக பிதாவுக்கு எரிச்சலுண்டாக்குகிறபடி நாம் செய்த, பேசின அல்லது சிந்தித்த எதுவாக இருந்தாலும் அறிக்கையிட்டு, நாம் தாழ்மையுடன் கர்த்தராகிய இயேசுவிடம் வந்து, நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அவருடைய இரத்தத்தை வேண்டுகிறோம். கர்த்தாவே, அப்படி செய்ய வேண்டுமென்று நாங்கள் எண்ணவில்லை, எங்களை மன்னியும். எங்கள் இருதயங்களை நீர் அறிவீர். 2. மேலும் இன்றிரவு இங்குள்ள ஒவ்வொருவரையும் நீர் உமது பரிசுத்த பிரசன்னத்தால் பரிசுத்தப்படுத்த நாங்கள் ஜெபிக்கிறோம். உமது மகத்தான மாண்புறு பிரசன்னம் ஒவ்வொருவரையும் பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கட்டும். மேலும் தேவனுடைய மகிமைக்காக மகத்தான அடையாளங்களும் அற்புதங்களும் நிகழட்டும். இதைச் செய்வதன் மூலம் தேவனை விட்டு அந்நியர்களாகிய பாவியாகிய புருஷனும், ஸ்திரீயும் இனிமையாகவும் பணிவுடனும் வந்து சிலுவையின் அடியில் பணிந்து, இந்த நோக்கத்திற்காக மரித்தவருக்கு தங்கள் ஜீவனை கொடுக்கட்டும். இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 3. நாங்கள் கன்வென்ஷன் மற்றும் எழுப்புதல் கூட்ட நிறைவுக்கு ஏறக்குறைய முந்தைய நாளான இன்றிரவு இங்குள்ள லேன் டெக் உயர்நிலைப் பள்ளியில் (Lane Tech High School) மறுபடியுமாக இருப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். கர்த்தர் நமக்காக நாம் அவரிடம் கேட்டதை விட அதிகமாகவும், அபரிமிதமாகவும் செய்ததற்காக நன்றி, அவர் ஏற்கனவே செய்துவிட்டார். மேலும் இப்போது, நான் வந்ததிலிருந்து ஒவ்வொரு மாலையும், ஓர் இரவு, வியாதியஸ்தர்களுக்காக ஜெப வரிசை இருக்குமென நான் உங்களுக்கு வாக்குறுதி அளித்து வருகிறேன். தேவனுக்கு சித்தமானால், இன்றிரவு நாம் அதைச் செய்வோம். மேலும், ஆரம்ப நாட்களில் நான் வியாதியஸ்தர்களுக்காக மாத்திரம் ஜெபிக்க ஆரம்பித்தபோது எனக்கு உதவி செய்ய சகோதரன் மூர் (Brother Moore) மற்றும் சகோதரன் பிரவுன் (Brother Brown) ஆகியோர் இருந்தனர், அவர்கள் திரைக்கு பின்னால் நின்றுகொண்டு அந்த மணி வேளைக்காக காத்திருக்கிறார்கள். நான், "என்னவாயினும் பரவாயில்லை- நான் அந்த ஆவியைப் பகுத்தறிய தொடங்கினால், நீங்கள் மேடைக்கு வந்து, எப்படியாயினும் ஜனங்களை அழைக்கவும். ஏனென்றால் அவர்களுக்காக ஜெபிப்பதாக நான் அவர்களுக்கு உறுதியளித்திருக்கிறேன்" என்று சொன்னேன். நாம் அப்படிச் செய்தால் இன்றிரவு நம் தேவன் மகத்தான காரியங்களைச் செய்வார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். 4. நான் வேதாகம கல்லூரில் பயின்ற வேத பண்டிதன் அல்ல, உங்களுக்கு அது தெரியும். என்னிடம் அதற்கான கல்வியறிவு இல்லை. எனக்கு ஒரே ஒரு காரியம் தெரியும், அது நான் நான் தேவனுடைய கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். நான் அவரை என் முழு இருதயத்தோடு நேசிக்கிறேன் என்பதை நான் அறிவேன். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை நான் அறிவேன்; ஏனெனில், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, இன்றிரவு உயிரோடிருக்கிறார், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார் என்பதற்கு நான் அவருடைய சாட்சிகளில் ஒருவனாக இருக்கிறேன். நான் எனது உடனுழைப்பாளர்கள், மேலாளர், திரு. மூர் மற்றும் சிலருடன் பேசிக் கொண்டிருந்தேன், இன்று நாங்கள் கீழே இருந்தபோது... இன்று மதியம், இன்னும் சொல்லப்போனால் இன்று காலை, நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை மற்றும் அதைச் சுற்றிலும் பார்வையிட்டேன். அப்படி இருப்பது, இன்றிரவு எனக்கு அந்த ஆவியைப் பகுத்தறிதலுடன் இருக்க வேண்டியதில்லை என்று எனக்குத் தெரியும், ஏன், நான் ஒரு - ஒரு அருமையான நேரத்தைக் கொண்டிருந்து, இரவு உணவிற்கு இறைச்சித்துண்டத்தை சாப்பிடலாமென்றும் எண்ணி சற்றே என்னை தளர்த்திக்கொண்டேன். எனவே நீங்கள்... இது போன்ற கூட்டங்களுக்கு நான் வரும்போது சாப்பிடுவதில்லை. நீங்கள் பாருங்கள், எனக்கு - நீங்கள் சரியாக சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் (பாருங்கள்?), அதாவது பரிசுத்த ஆவியின் அந்த ஒவ்வொரு சிறிய எச்சரிக்கையும், பிடிக்க நீங்கள் தயாராக இருப்பதற்க்காக இரத்தம் வயிற்றில் இல்லாமல், ஆனால் மூளையில் இருக்க வேண்டும். ஏனெனில் பிசாசு ஒரு வலிமைமிக்க சாமர்த்தியசாலியாகையால், கர்த்தராகிய இயேசுவுக்காக நீங்கள் உங்களால் இயன்றவரை சிறந்தவராக இருக்க வேண்டும். அப்போது... 5. எனவே இன்று காலை நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, "நீங்கள் ஓய்வெடுத்து வெளியே செல்வது நல்லதல்லவா?" என்று கேட்டார்கள். நான் சொன்னேன், "ஓ, என்னே, இது அற்புதமானது." ஜார்ஜியாவில் ஒரு வாலிப சகோதரனை நாங்கள் சந்தித்தோம், அங்கே அவருடன் நாங்கள் ஒரு சந்திப்பை நடத்தினோம், சகோதரன் பால்மர் (Brother Palmer), மிக அருமையான நபர், அவரையும் இன்னும் சில ஊழியக்காரர்களையும் இன்று காலை அங்குள்ள நீர்வாழ் பொருட்காட்சிச்சாலையில் சந்தித்தோம், அதற்காக நன்றி செலுத்துகிறேன். நான் அருங்காட்சியகத்திற்கு வரும்போது, மீண்டும் வெளியேற்றப்பட போகிறேன் என்று நினைத்தேன். ஆ, நான் உள்ளே நுழைந்த போது என் நியாயமான கடுங்கோபம் சற்றே எழுந்தது. ஒரு ஒரு மனிதன், இரண்டரைக்கோடி ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது ஆதாமும் ஏவாளும் எங்கே இருந்தார்கள்? இது வெறும் முட்டாள்தனம்; அது தான் பிசாசு, முற்றிலுமாக. நான் சற்றே அங்கே எழுந்து, எனக்கு ஒரு உரையை எடுத்துக்கொண்டு, இன்றிரவு லேன் டெக்கிற்கு (Lane Tech High School) அவர்களை வரச் சொல்லி, அந்த பொருள் தவறானது என்று நாங்கள் அதை தெளிவுபடுத்துவோம். 6. நம் குழந்தைகள் அப்படிப்பட்டதான அடிமுட்டாள்தனத்தை கடந்து செல்வது வெட்கக்கேடானது. அது ஒரு முற்றிலுமான பொய்; அதில் ஒரு துளி கூட உண்மை இல்லை. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் தேவன் முதல் மனிதனாக ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டிக்கும் வரை மனிதன் இருக்கவில்லை. அது சரி. நீங்கள் ஒரு தவளையில் இருந்து வெளியே வந்தீர்கள், அல்லது ஒருவித குரங்கு அல்லது அது போன்று ஏதாவது, அது போன்ற எந்த ஒரு காரியமும் இல்லை. அது பொய், அதில் ஒரு வார்த்தை கூட உண்மை இல்லை. அது தேவனுக்கு எதிரானது.... அதுதான் கடைசி நாட்களில் பிசாசு. நான் போதித்துக் கொண்டிருந்ததைப் போலவே, மோசேக்கு முன்பாக.. ஏன் காயீனுக்கு முன்பாக, தேவன் காயீன் (ஆபேல் - தமிழாக்கியோன்) மூலம் நீதியுள்ள சந்ததியைக் கட்டமைக்கப் போகிறபோது. அதை தகர்த்துப்போட சாத்தான் எப்படி வேலை செய்தான் பாருங்கள்? மோசேயின் நாட்களில், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அந்த வரவிருக்கிற ஒருவரைப் பிடிப்பதற்காக அவன் எல்லா குழந்தைகளையும் மூழ்கடித்தான். 7. கிறிஸ்துவின் நாட்களில், ஏன், பின்பு, அதைத் தடுக்க முயற்சித்து, இரண்டு வயது முதல், அனைத்து குழந்தைகளையும் அவன் கொன்றான். இது போன்ற முட்டாள்தனங்களால், இளைய தலைமுறையினரிடமிருந்து விசுவாசத்தை உடைக்க சாத்தானின் இன்றைய தந்திரங்களில் இதுவும் ஒன்றாகும். டார்வினுடைய நெறிமுறைகளில் ஒன்றையும் நான் நம்பவில்லை. இல்லை, ஐயா. இது ஒவ்வொருவரின் தவறு, அவன்... அதில் வில்லியம் ஜென்னிங் பிரையன்ட்டின் இடத்தை சிறிது எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். நல்லது, நான் - அவன் சொல்வது தவறு, முற்றிலும் தவறு. அவன் சொல்வது சரி என்றால், தேவன் சொல்வது தவறு. எனவே இதுதான் உண்மை, இங்கே உண்மை இருக்கிறது. கடந்த முறை நான் அங்கு சென்றபோது அவர்கள் என்னை வெளியேற்றினர், ஏனென்றால் அங்கு நல்ல கூட்டம் இருந்தது. எனக்கு நிச்சயமாக ஒரு நல்ல பொருள் கிடைத்தது, நான் நிச்சயமாக அதில் ஆராய ஆரம்பித்தேன். எனவே, எனவே, நான் நம்பவில்லை.... ஏதாவதொன்று சரியாக இருக்குமானால், அது சரிதான்; அது தவறானதென்றால், தவறுதான். மேலும் அந்த காரியம் அது தேசத்திற்கு ஒரு சாபக்கேடு. எனவே அப்படி ஒரு காரியம் இருப்பதாக நான் நம்பவில்லை. மேலும் எந்த கடற்காளானிலிருந்தோ (sponge), அல்லது குரங்கிலிருந்தோ அல்லது அது எதுவாயினும் ஒருபோதும் மனிதன் அதிலிருந்து தோன்றியதாக நான் நம்பவில்லை. அது வந்து.... தேவன் மனிதனைத் தம்முடைய சாயலில் உண்டாக்கினார், அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது. அவ்வளவுதான். 8. அந்த கற்பனைக் கதைகள் எப்படி ஆரம்பித்தன என்பது வேடிக்கையாக இல்லையா? ஜனங்கள் அதை நம்புகின்றனரா? ஆம் ஐயா. புனைகதையை விட உண்மை மிகவும் விசித்திரமானது, இல்லையா? அது சரி. இங்கே சிறிது காலத்திற்கு முன்பு நான் சுவிட்சர்லாந்தில் இருந்தேன், வில்லியம் டெல் தனது பையனின் தலையில் இருந்த ஆப்பிளை சுட்டார் என்று எனது பள்ளி புத்தகங்களில் எனக்கு கற்பிக்கப்பட்டது. நீங்கள் அந்த சம்பவத்தைப் படித்திருக்கின்றீர்கள். நான் அங்கு சென்ற போதோ, அது ஒரு பொய்யாக இருந்தது; அது ஒருபோதும் செய்யப்படவில்லை. அதை அங்குள்ள வரலாற்றில் அறிக்கையிட அப்படி ஒரு காரியம் எதுவும் இல்லை. இது ஒரு புனைகதை. 9. நானும் சகோதரன் மூரும் ஒரு முறை பிரான்சில் உள்ள ஒரு குறிப்பிட்ட சபைக்குச் சென்றோம். நாங்கள் மேலே சென்று கொண்டிருக்கும்போது, வழிகாட்டி எங்களிடம் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தார், ஓ, இந்த சபை, அங்கு ஹூகுனோட்டுகளின் (Huguenots) படம் இருந்தது; அவர்கள் எங்கள் சகோதரர்கள். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று, அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தார்கள். அங்கே அவர்களை அவர்கள் தெருக்களில் கொன்று குவித்தனர்.... பின்னர் நாங்கள் மலை மீது ஏறத் தொடங்கினோம். மலையின் மேல் ஏறி ஒரு சபைக்கு மிக அருகில் சென்றோம், "ஷ்ஷ்". ஓ, மலை உச்சியில் சத்தமாக பேசுவது கொடிய பாவமாகும். அதைப் பற்றிய கதையைச் சொல்ல தொடங்கினர். சில நூறு ஆண்டுகளுக்கு முன், பரிசுத்தவான் என்று கருதப்பட்ட ஒருவன், எப்படியோ அங்கு சண்டையில் அகப்பட்டுக்கொண்டு, தனது தலை துண்டிக்கப்படப்பட்டான். ஆகவே தான் அங்கே மரிக்க வேண்டாம் என்று தீர்மானித்தான், எனவே அவன் தன் தலையை எடுத்து, தன் தோளின் கீழ் வைத்துக்கொண்டு, ஏறத்தாழ ஐந்து மைல் தூரம் மலைமேல் நடந்து, அவர்கள் அங்கு மேலே ஒரு சபையை கட்டுவதற்காக அங்கே மரித்தான். சாமானிய நாகரிக ஜனங்கள் இப்படிப்பட்ட அடிமுட்டாள்தனத்தை நம்புவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா, ஊஹும். நான் உரக்கச் சொன்னேன்... அவர்கள் என்னை வெளியேற்றாதது ஆச்சரியமாக உள்ளது. நான் சொன்னேன். "அது விசுவாசத்தினால் மட்டுமே, இல்லையா?" நான் இப்போது உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், என் விசுவாசம் அதற்கு மிகவும் பலவீனமாக உள்ளது. நான் அதை விசுவாசிக்கவில்லை, இல்லை, ஐயா. ஓ, இல்லை, பாருங்கள். 10. நான் வேதாகமத்தை அப்படியே விசுவாசிக்கிறேன், அதுவே இதை உறுதிப்படுத்துகிறது. வேதாகமம் என்ன கூறுகிறதோ அதுதான் உண்மை, அது - அவ்வளவுதான். அதன்படியே நான் ஜீவிக்கிறேன். அதன்படியே நான் மரிக்க விரும்புகிறேன். அதன்படியே மரித்தவர்கள், அதன்படியே பரலோகத்துக்குப் போனார்கள், ஆகவே அங்கேதான் நான் போக விரும்புகிறேன். எனவே, நாம் இந்த பழைய சம்பவத்துடன் தரித்திருப்போம். அவர் அற்புதமானவர், இல்லையா? இப்போது இன்றிரவு, இஸ்ரவேல் புத்திரரின் யாத்திரை சம்பவத்தை பற்றி நாம் பார்த்ததை, சற்று தொடர்ந்து கொஞ்சம் பேசப்போகிறேன். பின்னர் நாம் விரைவாகச் சென்று, ஜெப அட்டைகளை வைத்திருக்கும் நபர்களை மேடைக்கு அழைத்து வந்து அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிப்போம். மேலும் தேவன் சுகமாக்குவார் என்று நான் விசுவாசிக்கிறேன். 11. இங்கே எத்தனை பேர் என்னை நேசிக்கிறீர்கள்? உங்கள் கரங்களைப் பார்க்கட்டும். நான் ஒன்றை சோதிக்க விரும்புகிறேன். நன்றி. நான் - நான் - நானும் உங்களை என் முழு இருதயத்தோடு நேசிக்கிறேன், (பாருங்கள்?). நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். மனிதனுக்குச் சொந்தமான எந்தவித சிந்தனையின் கருத்துக்களையும் நான் எப்போதும் தவிர்த்துவிடுவேன், அல்லது ஒரு மனிதனைப் பற்றிய எதனையும் அது தெய்வீகமான எதுவாயினும் அல்லது..... நான் அதைத் தவிர்த்துவிடுவேன், ஏனென்றால் நீங்கள் கவனிக்க வேண்டும், நீங்கள் பாருங்கள்? சின்னச் சிறிய காரியம், பிறகு அது - அவர்கள் எதையாவது ஆரம்பித்து அது கொள்கையாக (ism-மாக) ஆகி விடுகிறது. கர்த்தர் எனக்குக் கொடுத்த தாழ்மையான ஊழியத்தில் என்னால் முடிந்தவரை அதை தெளிவாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க முயற்சிக்கிறேன். ஆனால் நான் ஆச்சரியப்படுகிறேன், இங்கேதான் என் விசுவாசம் தொடர்ந்து வெறுத்தொதுக்குகிறது. எனக்கு நினைவிருக்கிறது சீயோன் நகரத்திலும் இன்னும் பல இடங்களிலும்.... ஜெபம் செய்ய வரும் ஜனங்களை மட்டும் நான் கவனிப்பதில்லை, ஆனால் கர்த்தருடைய தூதன் என்னிடம் சொன்னதையும் நான் உன்னிப்பாகக் கவனிக்கிறேன். பாருங்கள்? மேலும் நான் இருந்தபோது... முதலில் அவர் என்னிடம் பேசினார், உண்மையில் நான் கவனத்தில் கொள்ளவில்லை; நான் ஒருபோதும் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து அல்லது வேதாகமத்தில் உள்ள எதையும் படித்ததில்லை. ஆனால் அவர், "நீ வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க பிறந்தாய்: தெய்வீக சுகமளிக்கும் வரத்தை பெற்றுக்கொள்" என்றார். சகோதரன் பாக்ஸ்டர் (Brother Baxter) ஒரு முறை என் கவனத்தை ஈர்த்தார், அவர், "சகோதரன் பிரன்ஹாமே, அந்த செய்தியை பயபக்தியுடன் சுமந்துச் செல்லுங்கள் என்று கூறினார்; அவர் உங்களிடம் என்ன செய்ய சொன்னாரோ அதை செய்யுங்கள்" என்றார். பிறகு அவர் சொன்னார்.... அவர்கள் என்னை நம்பமாட்டார்கள் என்று நான் அவரிடம் சொன்னேன், பின்னர் அவர் இந்த மற்ற காரியங்களை என்னிடம் கூறினார். 12. நல்லது, நான் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதற்குப் பதிலாக ஜனங்களுக்கு அடையாளத்தைக் கொடுத்தேன். பரிசுத்த ஆவியானவர் எப்படி என்பதை நான் அதன் மூலமாக கவனித்தேன்.... நாம் செய்ய வேண்டிய சில காரியங்கள் உள்ளன, அதை நாம் செய்யும் வரை தேவனால் செய்ய முடியாது என்று உங்களுக்குத் தெரியுமா? அதை பற்றி உங்களுக்குத் தெரியுமா? அந்த ஊழியம்.... கவனித்து பாருங்கள், நாம் கொடிகள்; அவர்தான் திராட்சச்செடி. ஆனால் திராட்சச்செடி கனிகொடாது; அதன் கொடிகள் தான் கனிகொடுக்கின்றன. அது சரியா? இப்போது, அவர் - அவர் ஊக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறார், ஆனால் நாம் தான் வேலையைச் செய்ய வேண்டும். நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா? நீங்கள் ஒவ்வொரு இரவும் அவரைக் காண்பது போல, இன்றிரவு பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். அவர் உங்களை அறிவார், ஆனால் அவர் நம் மூலமாக மட்டுமே பேசுவார். அது சரியா? நாம் - நம் கரங்கள் அவருடைய கரங்கள்; நம் கண்கள் அவருடைய கண்கள். மேலும் இப்போது, அவர் நமக்கு காரியங்களை கொடுக்கிறார் என்பதை நாம் கவனிக்கிறோம். இப்போது, அங்கே ஒரு நாள் இயேசு நின்று அறுவடையைப் பார்த்துக் கொண்டிருந்தார்..அவர் அறுப்புக்கு எஜமான் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? மேலும் அவர் அறுவடையைப் பார்த்து, "அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள், அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; என்றார்." வேறு விதமாக கூறுவதானால், "செய்ய - செய்யப்பட வேண்டியதை நான் அறிவேன், நீங்கள் அதை என்னிடம் வேண்டிக்கொள்ளுங்கள்." அவர்கள் - அதைச் செய்யும்படி கேட்கும் வரை அவரால் அதைச் செய்ய முடியாது. 13. இங்கே சிறிது காலத்திற்கு முன்பு, நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அந்த நபர் இன்றிரவு அமர்ந்து கொண்டிருக்கலாம். எனக்கு நினைவிருக்கிறது, நான் இங்கே சீயோன் நகரத்தில் இருந்தேன். சீயோன் நகரத்தில் நடந்த கடைசி சீயோன் கூட்டத்தில் இங்கிருக்கின்றவர்கள் யாராவது இருந்தீர்களா? எல்லாம் சரி, ஒருவேளை உங்களுக்கு இது நினைவிருக்கலாம். ஒரு இரவு, வழக்கம்போல, பில்லி பால் மற்றும் சகோதரன் பாக்ஸ்டரும், கீழே இறங்கினார்கள், மேலும் மாலை மூன்று மணிக்கு நான் சென்று ஆவியைப் பகுத்தறியும் ஆராதனை கூட்டம் போன்றதான ஒன்றை நடத்தவிருந்தேன். மனைவியும் மற்றும் அவர்களும் என்னுடன் இருந்தார்கள்; அவர்கள் விடுதியில் மற்றொரு அறையில் இருந்தனர். நாங்கள் நகரத்திலிருந்து பல மைல் வெளியே இருந்தோம். மேலும் நான் இந்த விடுதியில் இருந்தேன், மேலும் நான் - மேலும் நான்- என்னால்- அன்றிரவு என்னால் சபைக்கு செல்ல முடியவில்லை. நான் மிகவும் பாரமாக இருந்தேன், என்னால் நகர முடியவில்லை. இப்போது, அது நூற்றுக்கணக்கான முறை நடந்துள்ளது, ஆனால் இந்த முறை தான் சொல்கிறேன். 14. பிறகு நான், எனக்கு நினைவிருக்கிறது என்னால் என்னால் - போக முடியவில்லை. நல்லது, அவர்கள் என்னை தொடர்ந்து திரும்பவும் வந்து, கூறியதாவது... கதவைத் தட்டினார்கள். நான் வெளியே செல்லவில்லை. பில்லி, வெளியே சென்று கோக் (Coke) குடித்துவிட்டு வந்து மீண்டும் கதவைத் தட்டினான், நான் போகவில்லை. அதனால் அவன் கதவை ஆட்டி அசைத்து, "அப்பா" என்றான். நான் அழுது கொண்டிருந்தேன்; என்னால் அதினின்று மீளமுடியவில்லை. என் இருதயம் உடைந்து கொண்டிருந்தது. நான், "பில்லி, நீ போய் இன்றிரவு நான் வரமாட்டேன், நீங்கள் சென்று பிரசங்கியுங்கள், பாடல்களைப் பாடுங்கள், நான் நாளை இரவு அங்கு இருப்பேன்" என்று சகோதரன் பாக்ஸ்டரிடம் சொல் என்றேன். அவன் "என்ன ஆகிவிட்டது அப்பா?" என்றான். அதற்கு நான், "உனக்கு சொன்னபடியே போய் செய்" என்றேன். அவன் திரும்பி, அங்கே சென்று, மறுபடியும் உட்கார்ந்து, மேலும் இன்னொரு கோக்கை எடுத்துக் கொண்டான். மேலும் நான் சென்று, நாற்காலியில் மண்டியிட்டு, நான், நாற்காலியின் அருகில், நான், தேவனே, இரக்கம் பாராட்டும், என்னால் என்ன செய்ய முடியும்? என்று சொன்னேன், "நான் என்ன செய்தேன்? எங்காவது ஏதாவது தவறு இருக்கிறதா?" என்று சொன்னேன். 15. வாசலுக்கு வெளியே யாரோ ஒருவர் பேசுவதைக் கேட்டேன். அது ஜெர்மன் (மொழி) அல்லது ஏதோ பேசுவது போல, ஓ, வெறுமனே தொலைவில் அரட்டை அடிப்பதுப் போல இருந்தது. நான் எழுந்து, "அந்த நபர் எங்கே? அது யார்? எனக்குத் தெரிந்து இங்கு யாரும் இல்லை" என்று நினைத்தேன். அது சரியாக வாசலில் என் பக்கத்தில் கேட்டது போல் இருந்தது. நல்லது, நான் எழுந்து, நிம்மதியாக, வாசலைக் கடக்கத் தொடங்கினேன், மேலும் நான் அங்கே செல்வதற்கு முன், பேசிக்கொண்டிருந்தது நான் தான் என்று கண்டேன். நான் - நான் மிகவும் வளைந்து கொடுத்து. ஏன், நான் - நான் ஒரு வகையான, நாம் அழைப்பதுபோல், அப்படியே தரையில் பதுங்கினேன், அங்கேயே சற்று மண்டியிட்டேன்; அது பேசுவதை நிறுத்தியது. அது பேசுவதை நிறுத்தியதும்.... இப்போது என் வாழ்நாளில் எனக்குத் தெரிந்தவரை ஒரு முறைகூட நான் அந்நிய பாஷையில் பேசியதில்லை. ஆனால் அது- அது ஏதோ ஒரு பாஷையில் பேசிக் கொண்டிருந்தது; நான் - அது என்னவென்று எனக்குத் தெரியாது. அதனால் நான் - நான் நிஜமாகவே அப்படியே அமர்ந்திருந்தேன், அது என்னை விட்டுப் பிரிந்தபோது, நான் ஒரு படைப்பிரிவை கடந்து, சுவரை தாண்ட முடியும் என்பது போல் உணர்ந்தேன். நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் அவ்வளவு நன்றாக உணர்ந்ததில்லை. 16. நான் வாசலுக்குச் சென்று சுற்றிப் பார்த்தபோது, பில்லி சற்று வெளியே போய்க்கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து உரக்கக் கத்தினேன்; "ஒரு நிமிஷம்" என்றேன். அவன் மீண்டும் வாசலுக்கு வந்து, "அப்பா, உங்களுக்கு என்ன ஆகிவிட்டது? எதற்காக அழுகின்றீர்கள்?" என்றான். "நான் ஒரு நிமிடத்திற்குள் தயாராகிவிடுவேன்" என்றேன். நான் விரைவாக முகத்தை கழுவி, காரில் ஏறி, சென்றேன். அங்கு நடந்ததை பற்றி அவன் ஒன்றுமே சொல்லவில்லை. நாங்கள் உள்ளே நுழைந்தோம், சகோதரன் பாக்ஸ்டர் பியானோவின் அருகில் நின்றுகொண்டு, "அவரது மகிமையிலிருந்து கீழே இறங்கினார்" என்று பாடிக் கொண்டிருந்தார். நாங்கள் உள்ளே சென்றோம், நான் சிறிதளவு பிரசிங்கிக்கத் தொடங்கி, பேச ஆரம்பித்தேன். அங்கே பின்னால் நான் ஒரு சாட்சியைக் கேட்டேன், அது என்னவென்று எனக்குத் தெரியாது, அவர்கள் என்னிடத்தில் சாட்சியைக் கொண்டுவந்தார்கள். இங்கு ட்வின் சிட்டிக்கு அருகில் வசித்து வந்த ஒரு ஸ்திரீக்கு காசநோய் ஏற்பட்டு, பல ஆண்டுகளாக படுக்கையில் இருந்த அவளுக்கு இரத்தக்கசிவு (hemorrhage) இருந்தது. அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, அவளுக்கு இனி இன்னொரு முறை இரத்தக்கசிவு ஏற்படுமானால் அவ்வளவுதான் என்று மருத்துவர் அவளிடம் கூறி இருந்தனர். 17. அதனால் ஆம்புலன்ஸ் அவளை அழைத்து வர துணிய முற்படவில்லை. சில பரிசுத்தவான்கள் அவளுடைய காரைப் பின்புறம் பொருத்தி, அவர்கள் பின்னால் படுத்துக்கொள்ளும்படியாக அவளுக்கு ஒரு இடத்தை சரிசெய்து, அவளை அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தனர். அவள் என் புத்தகத்தைப் படிப்பாள். மேலும் சாலையினுடாக, வந்துக்கொண்டிருக்கையில், மாலையில் தாமதமாக, அவள் பயணித்துக் கொண்டிருக்கையில், கார் குலுங்கியதால், அதிக இரத்தம் வெளியேறியது. மேலும் அவளுக்கு அப்படியே இரத்தப் போக்கு வெளியேற ஆரம்பித்ததனால், அவளுடைய உடல் நிலை மோசமடைந்து கொண்டே வந்தது. நல்லது, அவள் காருக்குள் மரிக்க விரும்பவில்லை. எனவே அவர்கள் காரை நிறுத்தி அவளை புல்வெளியில் சமதளமாக படுக்க வைத்தனர். எல்லா பரிசுத்தவான்களும் அவளைச் சுற்றி நின்று ஜெபித்தார்கள். உடனே இரத்தப் போக்கு நின்றது, அவள் துள்ளிக் குதித்து சாலையில் முன்னும் பின்னுமாக ஓடினாள். என்ன நடந்தது என்று அவளுக்குத் தெரியாது, பரிபூரண சுகமானாள். அவள் சாட்சியளிக்க வந்து அங்கே பின்னால் இருக்கிறாள். மேலும் நான் அதை பரிசீலித்தேன், அந்த ஸ்திரீ மரித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில் தான், அந்த அதே சமயத்தில் தானே அது என் மூலம் பேசியது, இறந்துகொண்டிருக்கும் அந்த ஸ்திரீக்காக பரிசுத்த ஆவியானவர் பரிந்து பேசிக்கொண்டிருந்தார். 18. ஓ, நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று பார்த்தீர்களா? பரிசுத்த ஆவியானவர். நேற்றிரவு பைக்கீரி (Opposum) பற்றிய சம்பவம் நினைவிருக்கிறதா? வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் செய்வது, அது எப்படியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். அநேக முறை தரிசனத்தின் மூலம், அவர் வந்து ஜனங்களுக்காக ஜெபிக்கும்படி செய்வார். ஜனங்கள் வருவதற்கும், ஜெபம் செய்யப்படுவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்காத, அதன் காரணமாகத்தான், நல்லது, அது - அது அநேகந்தரம் தடங்கலாக இருந்ததென்று நான் நினைக்கிறேன். எனவே அந்த நோக்கத்திற்காக கூட்டத்தில் சில இரவுகளை நான் பயன்படுத்த வேண்டியிருந்தால், நான் அதைச் செய்யத் தொடங்க முயற்சிக்கிறேன். இப்போது, கர்த்தர் உங்களை மெய்யாகவே ஆசீர்வதிப்பாராக, மேலும் ஜெபத்தில் தரித்திருங்கள். நாம் இங்கு தேவனுடைய வார்த்தையின் ஒரு சிறு பகுதியை வாசிப்போம், ஏனெனில் அவரது வார்த்தை தவறாது என்பதை நாம் அறிவோம். என்னுடையது தவறும், உங்களுடைய தவறும், ஆனால்.... நாம் சந்திப்புத் திட்டங்களையும் மற்றும் வாக்குறுதிகளையும் மேற்கொள்ளுவது, அதை காத்துக்கொள்வோம் என்ற நம்பிக்கையில், ஆனால் சில நேரங்களில் அவற்றை நம்மால் காத்துக்கொள்ள முடிவதில்லை. ஆனால் அவரால் அதை நிறைவேற்ற முடியாவிட்டால் அவர் ஒருபோதும் வாக்குறுதி அளிப்பதில்லை. மேலும் அவர் எப்போதும் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவார். 19. இப்போது எண்ணாகமம் 13வது அதிகாரம் 30வது வசனத்தை நாம் வாசிப்போம்: அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான். கர்த்தர் தம்முடைய வார்த்தையுடன் இப்போது அவருடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. கடந்த மாலையும், கடைசி இரண்டு மாலைகளும், நாம் யாத்திராகமம் புத்தகத்தைப் பற்றி தேவனுடைய ஜனங்களை வெளியே அழைத்தல் என்பதன் பேரில், ஒரு சிறிய அமர்வில் (session) போதித்து வருகிறோம். ஏனென்றால் இது இந்த நாளில் இன்றியமையாதது என்று நாம் விசுவாசிக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் என் சபையில் ஒரு வருடமும் ஆறு மாதங்களும், யாத்திராகமம் புத்தகத்தைப் போதித்துக் கொண்டிருந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. நான் - நான் ஒரு முறை இரண்டு வருடமளவும் யோபுவிலேயே இருந்தேன். எனக்கு நினைவிருக்கிறது, நான் யோபுவை சாம்பல் குவியலில் சுமார் நான்கு வாரங்கள் வைத்திருந்தேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், சாம்பல் குவியலில் யோபு. தேவன் தம்முடைய பரிசுத்தவானோடு இடைப்படுகின்றதான, ஒரு அவ்வளவு அழகான சம்பவம். எங்கு திரும்புவது என்று தெரியாமல், கடுந்துன்பத்தில், மேலும், எவ்வாறாக அப்படிப்பட்டதான இடங்களை நாம் அடைகிறோம். நான் உச்ச கட்ட முடிவிற்காக ஆராய்ந்து கொண்டிருந்தேன். ஒரு அன்பான சகோதரி, அவளுடைய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக, அவள் என் உணர்வுகளை காயப்படுத்த விரும்பவில்லை, "சகோதரன் பிரன்ஹாமே, நான் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிக்கிறேன், ஆனால் நீங்கள் எப்போது யோபுவை சாம்பல் குவியலில் இருந்து எடுக்கப் போகிறீர்கள்?" ஓ. என்னே. நல்லது, தேவன் அவனை நலமுடன் ஜெயத்தோடு வெளியே கொண்டு வந்தார். 20. இப்போது, நான் அந்த பழைய பொற்கட்டிகளை நேசிக்கிறேன், நீங்கள் நேசிக்கவில்லையா? மேலும், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த யாத்திராகமப் புஸ்தகத்தில் நிச்சயமாக ஒரு வருடமளவும் சில தேடல்களை செய்துள்ளோம், அதிலுள்ள விலையேறபெற்ற இரத்தினங்களை வெட்டியெடுத்து, பிரகாசிக்கச் செய்தோம். அந்த யாத்திராகம புஸ்தகத்தில் உள்ள ஒவ்வொரு விலையேறபெற்றவைகளும் அந்த பிரதான மூலைக்கல்லில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு துண்டேயாகும், அவை கர்த்தராகிய இயேசுவையே சுட்டிக் காட்டுகின்றன என்பதை நாம் கண்டோம். ஓ, மேலும், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் அவருக்குள்ளாக சரீரப்பிரகாரமாக வாசமாயிருந்தது. நம்முடைய எல்லா மீட்பும், நம்முடைய எல்லா இரட்சிப்பும், நம்முடைய எல்லா சந்தோஷமும், சமாதானமும், சகலமும், நம்முடைய எல்லா சுகப்படுத்துதலும், நமக்குத் தேவையான அனைத்துமே யேசு கிறிஸ்துவில் இளைப்பாறுகிறது, அங்கேதான், அவரில் நாம் அனைவரும் ஒன்றாக ஆசீர்வதிக்கப்பட முடியும். முதலில் நாம் எப்படி நினைத்தோம் என்பதைக் கவனியுங்கள் - யாத்திராகமம் புஸ்தகத்தின் கருப்பொருளை எடுத்துக்கொண்டால், நாம் மூன்று முக்கிய வல்லமைகளை காண்கிறோம்: சாத்தானின் வல்லமை (1); விசுவாசத்தின் வல்லமை (2); தேவனின் வல்லமை (3). எப்போதுமே தனது வல்லமையை முதலில் காட்டத் தொடங்குகிறான் என்பதை நாம் கண்டறிந்தோம். சிறிய காரியங்களை கவனிக்கையில், அவைகள் முதலில் கொதிக்கத் துவங்கும். காளான்கள் ஒரே இரவில் வளர்ந்து மறுநாள் இறந்துவிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா. பழைய கருவாலி மரம் வர நீண்ட காலம் பிடிக்கும், ஆனால் அது அங்கு வரும்போது உண்மையில் வேரூன்றி, உறுதியாக நிலை நாட்டப்பட்டிருக்கும். 21. எனவே பிசாசு வழக்கமாக அந்த சிறிய பகட்டான காரியங்களை தொடங்குகிறான், எனவே அதை கவனியுங்கள். அவன் தேவனுடைய அசைவாடுதலைத் துண்டிக்க முயல்கிறான். ஒவ்வொரு முறையும் அவன் அதைச் செய்வான். இன்னும் அவன் அதே பிசாசு, பழைய நாட்களில் அவன் பயன்படுத்திச் செய்த அதே நுட்பங்களை, இன்றும் அவன் அவற்றைப் பயன்படுத்துகிறான். நாம் பழைய ஏற்பாட்டைப் வாசிக்க முடிந்தால், பிசாசின் தந்திரங்களையும், அவன் அதை எவ்வாறு செய்கிறான் என்பதையும் நாம் கற்றுக்கொள்ளலாம். எனவே அவனது வல்லமையை நாம் கண்டோம்.... அவனிடம் வல்லமை இருந்தது, அந்த வல்லமை மரணமாக இருந்தது. ஆனால் அதற்கு மேல் அவனிடம் எந்த வல்லமையும் இல்லை. வெறும் மரணம் அவனது வல்லமையை முடிவுக்கு கொண்டுவருகிறது. பின்னர் மரணத்திற்கு அப்பால், விசுவாசம் உயிர்த்தெழுதலின் தேவனைக் காண்கிறது. விசுவாசம்... பிசாசின் மரணத்தின் வல்லமை முடிந்த பிறகு, அவனும் முடிவுற்றான்; இனி பிசாசால் எதுவும் செய்ய முடியாது. 22. ஆனால் மரணத்திற்குப் பிறகு, விசுவாசம் உயிர்த்தெழுதலைக் காண்கிறது, ஒரு உயிர்த்தெழுதலின் தேவனை. அதுதான் விசுவாசிக்கக்கூடிய (believe) விசுவாசத்தின் (Faith) வல்லமை. உங்களின் இயற்கையான கண்களால் பார்க்க முடியாத இருண்ட மேகத்தின் பின்னால் நின்று கொண்டிருக்கையில், அவன் கேட்கும்போது - ஆனால் உங்களுடன் இருக்கும் விசுவாசம் உயிர்த்தெழுதலின் தேவனை நோக்கி, எல்லா ஞானத்தின் தேவனை நோக்கி உங்களை வழிநடத்துகிறது, நம் பாதையை நிர்ணயித்த, அவரே ஒவ்வொரு சோதனையின் பின்னாலும் நிற்கிறார். ஓ, நான் அதை நேசிக்கிறேன், நீங்கள் நேசிக்கவில்லையா? அதை தெரிந்துகொள்ள பேதுரு ஒவ்வொரு சோதிக்கப்படுதலும் நமக்கு பொன்னைப் பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிறது என்று கூறினான். ஆக அது கிரியைச் செய்கிறது. "தேவனிடத்தில் வருகிற ஒவ்வொரு புத்திரனும் முதலில் சோதிக்கப்படவேண்டும், தண்டிக்கப்படவேண்டும், சிட்சிக்கப்படவேண்டும்." நீங்கள் மறுபடியும் பிறந்த பிறகு உங்களுக்கு சிறு கடுந்துயரம் ஏற்பட்டால், ஏதோ ஓரிடத்தில் சிறு சோதனை உங்களை வருத்தம் கொள்ளச்செய்தால், நீங்கள் மீண்டும் உலகத்திற்கு ஓடுகிறீர்கள், அது முதலாவதாக நீங்கள் பிள்ளையாக இல்லை என்பதை காட்டுகிறது. நீங்கள் தேவனின் பிள்ளையாக இல்லாமல் மாறாக முறைதவறிப் பிறந்த பிள்ளையாக ஆகுகிறீர்கள். ஒரு மனிதன் தன் இருதயத்தை ஒருமுறை கல்வாரி இருதயத்தின் மீதாக நங்கூரமிட்டால், நரகத்தில் உள்ள எல்லா பிசாசுகளும் இனி அவனை அசைக்க முடியாது; அவன் அங்கே இருக்கிறான். கவனியுங்கள், ஏனெனில் சிட்சையை சகிக்காதவன் முறைகேடாக பிறந்த பிள்ளை. அவர் அவனது தகப்பனாக இல்லாத போதும், தேவனை தனது தகப்பன் என்று உரிமை கோருகிறான், ஒவ்வொரு கோட்பாட்டின் காற்றினாலும் அலைக்கழிக்கப்பட்டு, நிலையற்று, நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என அறியாமல், இருமனமுள்ளவர்களாய், அநேக நேரங்களில் இருநாக்குள்ளவர்களாய், நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் அல்லது எதைப் பற்றி பேசுகிறீர்கள் என அறியாமல் இருக்கிறீர்கள் தேவனுடைய ஆவியால் மறுபடியும் பிறந்த ஒரு மனுஷன் அவன் சரியாக எங்கிருக்கிறான் என்பதை அறிந்தவனாய் இருக்கிறான். அது சரி. எதுவும் அவனை கவலையடையச் செய்யாது, ஏனென்றால் அவனுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று வெளியே மேகத்திற்கு அப்பால் இருக்கும் ஒருவரை ஏற்கனவே சாட்சிப் பகர்ந்தாயிற்று. அவன் விசுவாசத்தினால் அவரைக் காண்கிறான். 23. பிறகு அவர்கள் கொண்டு வந்ததை - எப்படி அந்த விசுவாசம் பார்வோனை தோல்வியுறச்செய்தது, எப்படி அந்த பார்வோன் யோசேப்பை சரியாக மாளிகையிலேயே எழுப்பி, அவனுக்கு உணவளித்து, அவனுக்குச் சிறந்ததைக் கொடுத்து, அவனை ஒரு நல்ல வலிமை வாய்ந்த மனிதனாக்கினான், அவன் நூற்று இருபது ஆண்டுகள் வாழ்ந்தான் என்பதை நாம் காண்கிறோம். பிசாசு தேவனுடைய கிரியைச் செய்வதற்காக தேவனுடைய பிள்ளையை வளர்த்து வந்தான். எப்படியாக தேவன் அந்த நேரம் அவன் கண்களை மறைத்து விட்டார். ஏனெனில் அவர் தேவனாக இருக்கிறார். பிறகு நாம் கண்டறிந்தோம் இஸ்ரவேல் புத்திரர்கள், கண்ணியிலிருந்து வெளியே வருவதை, நேற்றிரவு நாம் அவைகளோடு நிறுத்தியிருந்தோம். இன்றிரவு நாம் "தீர்மானத்தின் வல்லமை" பற்றி எடுக்கப் போகிறோம். நேற்றிரவு "தேவனின் வல்லமை", எப்படியாக அவர்கள் இந்த கண்ணிக்குள் வழிநடத்தப்பட்ட போது, அதனுடாக கடந்து செல்ல வழியே இல்லை: இருள், அவர்களுக்கு முன்னால் செங்கடல் இருந்தது; இங்கே இருபுறமும் மலைகள் இருந்தன, பார்வோனின் படையும் வந்து கொண்டிருந்தன, ஆயிரமாயிரமான கவசம் அணிந்திருந்த வீரர்கள் பின் தொடர்ந்து வந்தனர். தேவன் அவர்களை சரியாக கண்ணிக்குள் தள்ளிவிட்டது போலிருந்தது. உங்களுக்குத் தெரியுமா, நாம் கண்டறிந்தோம் அதாவது தேவன் சில நேரங்களில் ஒரு மகத்தான காரியத்தினுடாக நம்மை நடத்தி, பின்னர் தம்முடைய வல்லமையையும் மற்றும் தம்முடைய மகிமையையும் காண்பித்து நம்மை விடுதலையாக்குவார். மோசே தேவனை நோக்கிக் கூப்பிட்டபோது, தேவன் "நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்" என்றார். என்னே, அது ஒரு ஊக்குவித்தல் அல்லவா? "நின்றுகொண்டு." 24. அதன்பின் அவர் அவனை கோலை தன் கையில் எடுத்துக்கொண்டு, கைகளை உயர்த்தி, முன்னோக்கிச் செல்லச் சொன்னதை நாம் காண்கிறோம். அக்கினி ஸ்தம்பம் அவர்களை வழிநடத்திக் கொண்டிருக்கையில், ஒளிவட்ட வடிவில் அவர்களுக்கு முன்னால் இருந்த மகத்தான ஷெகினா மகிமை, அல்லது, அவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த அக்கினி ஸ்தம்பம், திரும்பி அவர்களுக்குப் பின்னால் சென்றது. வந்து கொண்டிருந்த எகிப்தியருக்கு அது இருளானது, ஆனால் இஸ்ரவேலுக்கோ அது ஒளியைக் கொடுத்தது. மேலும் தேவனுடைய இரட்சிப்பின் திட்டமானது, ஒரு மனிதன் தேவனுடைய திட்டத்திற்கு எதிராக தன் இருதயத்தை அடைக்கும் போது, அவன் இருளுக்குள்ளாகிறான். அதை பற்றி உங்களுக்குத் தெரியுமா? தேவனுக்கு ஒரு வழி இருக்கிறது; அது அறிந்து கொள்வதற்கு அப்பாற்பட்டது. ஆனால் ஒரு மனிதன் ஒளியை நிராகரிக்கும்போது, இருளைத் தவிர வேறொன்றுமில்லை. இப்போதும் கூட அதே விதமாகத்தான் இருக்கிறது, இன்றிரவு என்னுடைய பாவி நண்பனே, நீ அன்பை புறக்கணித்தால், நீ நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டும். அதைத் தவிர வேறு வழியே இல்லை. தேவன் முதலில் அன்பை உங்களுக்கு அளித்து, அதை உங்களுக்கு வழங்குகிறார். ஆனால் நீங்கள் அதை புறக்கணித்தால், நியாயத்தீர்ப்பே அன்றி வேறொன்றும் விடப்படுவதில்லை. எனவே தேவனின் அன்பை, இன்றிரவே அதை ஏற்றுக்கொள்ளுங்கள். 25. எனவே நீங்கள் கவனித்தால், இயற்கைக்கு மேம்பட்டது நடப்பதைக் கண்ட இந்த மகத்தான முழு பார்வோனின் சேனை, அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை... அவர்களுடைய இரக்கத்தை அவர்கள் அதைத் தடுத்து நிறுத்திக்கொண்டனர். அதை அவர்கள் நிராகரித்தனர். தேவனுடைய கிரியை நடப்பித்தவர்களையும் கூட அவர்கள் கொல்லத் தொடங்கினர், இந்நாட்களில் ஒன்றில் அமெரிக்காவில் என்ன நடக்கப் போகிறது என்பதற்கான ஒரு அழகான முன்னடையாளமாக உள்ளது. அது சரி. பல ஆண்டுகளாக எல்லா விதமான காரியங்களால் அவர்கள் மேல் குறிச்சொல்லிட முயற்சித்து, மேலும் அவர்களை பித்துப்பிடித்தவர்கள், பரிசுத்த-உருளை, எல்லா விதமான பெயர்களில் அழைப்பதே அவர்களுடைய முழு திட்டம், அவர்கள் அவர்களுடைய வெளிச்சங்களை அவர்களுக்கு தடுத்து நிறுத்திக்கொண்டனர். ஆனால் தேவனுக்கு நன்றி, மகத்தான அக்கினி ஸ்தம்பம் அவரது சபையை சரியாக வழிநடத்துகிறது. "அவர்களை விட்டுவிடு", இயேசு, "குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?" என்றார். அவர்கள்.... 26. இஸ்ரவேலர் கடந்து போகும்படியாக வழியை உண்டாக்கின அதே ஒளி, பார்வோனின் கண்களைக் குருடாக்கியது. உலகம் முழுவதையும் மூழ்கடித்த அதே நியாயத்தீர்ப்பின் தண்ணீர்கள், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவாவைக் காப்பாற்றியது. நீங்கள் கேலி செய்து சிரிக்கும், அதே பரிசுத்த ஆவியானவர், தெய்வீக சுகமளித்தலின் வல்லமை, என்றாவது ஒரு நாள் சபையை எடுத்துக் கொள்ளப்படுத்தலில் கொண்டு சென்று, நியாயத்தீர்ப்பினுடாக செல்ல உங்களை இங்கே விட்டுச் செல்வார். ஆமென். அதை யோசித்துப் பாருங்கள். நீங்கள் இரக்கத்தை புறக்கணிக்கும் அந்த நாள், எப்படிப்பட்டதாக இருக்கும். அதற்கு இயேசு, "அவர்கள் சொல்வார்கள், உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள்"என்றார். "போய் வாங்கிக்கொள்ளுங்கள்", என்று சொல். அவர்கள் சென்று, ஜெபிக்க முயன்று கொண்டிருக்கையில், மணவாளன் வந்துவிட்டார். அங்கே அழுகையும், புலம்பலும், பற்கடிப்பும் இருக்கும். அந்தக் கூட்டத்தில் இருக்காதீர்கள். வாருங்கள். உடன் செல்லுங்கள், அவர் ஒளியிலிருக்கிறது போல, ஒளியில் நடவுங்கள். மேலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்ளும் போது, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம், எல்லா அநீதியிலிருந்தும் நம்மை சுத்திகரித்து, ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்ள செய்கிறது. 27. அப்போதுதான் மெதடிஸ்ட் உண்மையில் பாப்டிஸ்ட்டுடன் கரங்களை குலுக்க முடியும். உங்களுக்குத் தெரியுமா, நான் இந்த பண்டைய காலத்து மார்க்கத்தை நேசிக்கிறேன், நீங்கள் நேசிக்கவில்லையா? உங்களை எல்லோரையும் நேசிக்கும்படி செய்யும். அது என்ன செய்யும் என்று உங்களுக்குத் தெரியுமா? அது வேலைசெய்யும்பொழுது அணியும் தளர்த்தியான உடை (overalls) அணிந்த ஒருவர் தனது கரங்களை பின்தொங்கலற்ற நீண்ட மேலங்கி (tuxedo) அணிந்துள்ள ஒருவர் மேல் போட்டு, "சகோதரனே, என்று சொல்லும்படி செய்யும். நிச்சயமாக செய்யும். ஆமென். அது ஒரு பட்டு வஸ்திரம் தரித்தவரை, வெண்ணிறப் பருத்தி ஆடையுடன் (calico) வந்தவரை பக்கத்தில் அமர வைத்து, ஒருவர் மேல் ஒருவர் கை போட்டு "சகோதரியே" என்று சொல்லும்படி செய்யும். அது நிச்சயமாக நடுவிலுள்ள அனைத்துச் சுவர்களையும் பிளவுறச் செய்து, கிறிஸ்து இயேசுவில் நம் அனைவரையும் ஒரே விதமாய் ஆக்குகிறது. ஆமென். பிறகு நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொண்டு, நாம் நடக்கும் போது தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம், நம்மை எல்லா அநீதியிலிருந்தும் சுத்திக்கரித்துக் கொண்டேயிருக்கிறது, அந்த ராஜாவின் பிரசன்னத்தில் ஜீவிக்கையில், இயேசு கிறிஸ்துவின் ஷெகினா மகிமையின் கீழ், ஆரோனின் கோல் பூப்பூத்தது. ஆமென். 28. ஆரோனின் கோலை அங்கே வையுங்கள். அது ஒரு பழைய மரித்த வாதுமை மரம். ஆனால் அது ஷெகினா மகிமையின் கீழ் சென்றதனால், சகலமும் அது என்னவாக இருந்ததோ, மீண்டும் திரும்ப அளிக்கப்பட்டது. அப்படியாகவே ஒரு பாவியும் இருக்கிறான், அவன் பரிசுத்த ஆவியின் ஷெகினா மகிமையின் கீழ் செல்லும்போது, அவனுக்கு பின்னால் திரை விழுந்து, அவனிடம் இருந்திருக்க வேண்டிய அனைத்தையும், தேவனுடைய குமாரன் அவனில் மறுபடியும் மலரச் செய்கிறார். ஆமென். நினைவில் கொள்ளுங்கள், ஒரே இரவில் அது துளிர்விட்டு, பூப்பூத்து, அதில் வாதுமைப்பழங்கள் வளர்ந்தது, ஆவியின் கனிகள்: அன்பு, சந்தோஷம், நீடிய பொறுமை, நற்குணம், தயவு, பொறுமை. அந்த மூன்றாம் நிலைக்குள் செல்ல, கிருபாசனத்தின் மேலே தொங்கிக் கொண்டிருக்கும் அந்த சிறிய பரிசுத்த ஒளியில் ஷெகினா மகிமைக்குள் பிரவேசிக்க அதுதான் நமக்குத் தேவையாயிருக்கிறது. பெட்டியிலே வைக்கப்பட்டுள்ள மன்னாவின் கலசம், மன்னா, அதுதான் தங்குவதற்கான இடம். அதுதான் ஜீவிக்க வேண்டிய இடம். திரைச்சீலைகள் உங்களுக்கு பின்னால் விழுந்து விட்டன. நீதிமானாக்கப்பட்டவர்கள் இருக்கும் வெளிப்பிரகாரத்தில், பகல் வெளிச்சம் இருந்தது. சில நேரங்களில் நமக்கு உண்டாயிருப்பது அது அது ஆகாயவிரிவின் வெளிச்சங்களே; அங்கே அவர்கள் எல்லாவிதமான வெளிச்சத்தையும் கொண்டிருந்தனர். அது சில நேரங்களில் இருளாகவும், சில நேரங்களில் பகலாகவும், ஆங்காங்கே ஒளிரும் ஒளியாகவும் (மேகத்தினுடாக சூரிய ஒளி பிரகாசிப்பது - தமிழாக்கியோன்), சீராக இல்லாத நிலை. 29. பின்னர் அவர்கள் இரண்டாவது திரைக்குள் வருகிறார்கள். அங்குதான் மார்ட்டின் லூதர் நீதிமானாக்கப்படுதலை பற்றி பிரசிங்கித்தார். வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதலை பற்றி பிரசங்கித்தார். இரண்டாவது திரை அங்கே பலிபீடம் பாத்திரங்களை பரிசுத்தப்படுத்தியது. மூன்று அறைகள் கொண்ட வீடு... முதலாவதாக, நீங்கள் சமையலறைக்குள் வருகிறீர்கள். நீங்கள் மூன்று அறைகள் கொண்ட வீட்டில் மட்டுமே வசிக்கிறீர்கள். நீங்கள் "என்னுடையது பத்து (அறைகள்) கொண்டது" என்று சொல்லலாம். நல்லது, உங்களிடம் சில கூடுதலாக அறைகளை பெற்றுள்ளீர்கள் பாருங்கள்? மூன்று அறைகள் கொண்ட வீட்டை நீங்கள் பெற்றுள்ளீர்கள்; அவ்வளவுதான், நீங்கள் ஜீவிக்க தேவையானது: சமையலறை, வசிப்பறை மற்றும் படுக்கையறை. நீங்கள் சமையலறையில் சாப்பிடுகிறீர்கள், வசிப்பறையில் உரையாடுகிறீர்கள். படுக்கையறையில் ஓய்வெடுக்கிறீர்கள். ஆமென். அங்கேதான் சபையும் வந்திருக்கிறது. "விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்" இது மார்ட்டின் லூதர் மூலம் வந்தது, வெஸ்லி, இராப்போஜனம், பரிசுத்தமாக்கப்படுதல், தூய்மையாக்குதல். இப்போது நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் இருக்கிறோம்: இளைப்பாறுதல்: "நான் உங்கள் ஆத்துமாவிற்கு இளைப்பாறுதல் தருவேன்." 30. ஒரு மனிதன் இரண்டாவது திரையான, உள் திரைக்குள் சென்றபோது, அவன் உலகத்திலிருந்து மறைக்கப்பட்டான்; திரைச்சீலைகள் அவனைச் சுற்றி விழுந்தது. இயேசு கிறிஸ்துவில் நம்மை நாம் இழக்கும்போது, உங்கள் ஸ்தாபனம் என்ன என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள், அந்த காரியங்கள் உங்களை இனி தொந்தரவு செய்யாது, சரியாக நீங்கள் கிறிஸ்துவுக்குள் இழக்கப்பட்டு உள்ளீர்கள். சுற்றியிருக்கும் ஊளையிடும் கும்பல்கள் என்ன சொன்னாலும் கவலைப்படாதீர்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குள் இழக்கப்பட்டு உள்ளீர்கள். ஆமென். அங்கேதான் ஷெகினா மகிமை, வெளிச்சம், அந்த ஒளிவட்டம், அந்த சிறிய அக்கினி மயமான பந்து, பலிபீடத்திற்குப் பின்னால் வந்து, கீழே இறங்கி, இரத்தம் இருக்கும் இரக்கத்தின் சிங்காசனத்தின் மீது அமர்ந்தது அங்கே அந்த வெளிச்சம் அறையை ஒளிரச் செய்தது. 31. இப்போது, பிரகாரத்தின் வெளிச்சம் ஆகாயவிரிவாக இருந்தது. முதல் திரையின் வெளிச்சம் ஒருகூட்ட விளக்குகளாக இருந்தது. அவைகள் புகையால் கருநிறமேற்றப்பட்டு, கொஞ்சநேரத்தில் அணைந்துவிடும். அவ்விதமாகவே ஒரு எழுப்புதலிலிருந்து இன்னொரு எழுப்புதலுக்கு செல்கின்ற ஒரு மனிதனுடைய வழியும் உள்ளது, அவன் சபையிலே வெறுமனே ஜீவித்துக் கொண்டிருந்தால், எப்போதாவது ஒருமுறை சிறு எழுச்சியை பெறுகிறான். அவன் எழுப்புதலில் அனல் மூட்டப்படுகிறான், ஆனால் சில வாரங்களில் அவர்கள் எங்காவது வேறு ஒன்றைத் தொடங்கவில்லை என்றால், அவன் குறைய தொடங்கி, அணைந்து விடுவான், பாருங்கள்? "ஓ, என் சபையில் இந்த ஒன்று இல்லை, என் சபையில்.. " சகோதரனே, உள் திரைக்குச் செல்லுங்கள். தேவன்தான் அங்கு வெளிச்சமாக இருக்கிறார். அங்கு எப்போதும் வெளிச்சம்தான். ஷெகினா மகிமை அந்த இடத்தை ஒளிரச் செய்தது, வருடங்கள் தோறும், ஒருபோதும் அணைந்து போவதில்லை. அந்த மன்னா ஒருபோதும் பழையதாய்ப் போகவில்லை; அது எல்லா நேரத்திலும் ஒரே விதமாகத்தான் இருந்தது, அதில் நிலையற்றுச் சுழலும் புழுக்களும் இல்லை. ஆனால் நீங்கள் வெளியே சென்று ஒவ்வொரு நாளும் பெற வேண்டியவற்றில் புழுக்கள் இருந்தன. இருக்க வேண்டுமென்று இருப்பவர்கள் எல்லாம்... சற்றே ஒரு முறை கிறிஸ்துவோடு உள்ளே வந்து, திரைச்சீலைகளை மூடி, அவர் உங்களிடம் வரும்வரை ஜீவியுங்கள். ஆமென். 32. மோசே ஒரு கோலை கட்டிக்கொண்டு, முன்னோக்கி சென்றான். தேவனுடைய வெளிச்சமாகிய, அந்த அக்கினியைப் பின்தொடர்ந்த பலத்த காற்றால், செங்கடல் திறந்ததை நாம் கண்டு அறிந்தோம். மனிதர்கள் வெளிச்சத்தில் நடக்கும்போது, அப்பொழுது காற்று பின்தொடர்கிறது. இயேசு, "நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்" என்றார். மேலும் பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து ஒரு முழக்கமுண்டாகும்வரை, அவர்கள் காத்திருந்தார்கள். காற்று வீசத் தொடங்கும் வரை அவர்கள் ஒளியில் நடந்தனர். ஆமென். கிறிஸ்துவுக்கு வெளியே இருப்பவர்களே, இன்றிரவு சற்றே நீங்கள் ஒளியில் அடியெடுத்து வையுங்கள்; பெந்தெகொஸ்தே நாளில் இருந்ததைப் போலவே காற்று மீண்டுமாக வரும். சற்றே ஒளியில் தொடர்ந்து நடந்து கொண்டே இருங்கள்; அது உங்களுக்கு இடையூறாக இருந்த காரியத்தை ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் பிரிக்கும். கவனியுங்கள். இஸ்ரவேல் புத்திரர் செங்கடலைக் கடந்தனர், சேற்றில் மட்டுமல்ல, அவர்கள் வெட்டாந்தரையிலும் இலகுவாக நடந்தனர். அதுதான் இன்று சபையில் உள்ள பிரச்சனை: நீங்கள் இலகுவாக வெளிச்சத்தில் நடக்க முடியாத அளவுக்கு சுமையாக இருக்கிறீர்கள். உங்களிடம் அநேக காரியங்கள் உள்ளன, அநேகம் உங்களை சுற்றித் தொங்கிக்கொண்டிருக்கிறது. பவுல், "பாரமான யாவற்றையும் (நாம் இலகுவாக நடப்பதற்காக), நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம், " என்றான். 33. ஒளியில் விரைந்தோடி நடவுங்கள். நீங்கள் எப்போதாவது தெருவில் பாடிக் கொண்டு நடந்து செல்வீர்களா, ஒவ்வொரு நாளும் என் வழியை அன்பால் நிரப்பும், நான் பரலோக புறாவோடு நடக்கையில்; நான் போகுமட்டும் பாடலுடனும் புன்னகையுடனும் போகட்டும் ஒவ்வொரு நாளும் என் வழியை அன்பால் நிரப்பும், நீங்கள் எப்போதாவது இப்படி நடந்திருக்கின்றீர்களா? விரைந்தோடி? ஏன், எனக்கு நினைவிருக்கிறது ஓர் இரவு நான்... (நான் முதலில் இரட்சிக்கப்பட்டபோது), ஒரு சிறிய பழைய கொட்டகைக்குச் சென்றேன். நான் செய்ததில்லை .. என் ஜீவியத்தில் ஒருபோதும் ஜெபம் செய்ததில்லை. நான் இயேசுவுக்கு ஒரு கடிதம் எழுதி, அவர் அதைக் காண வேண்டுமென காட்டில் இருந்த ஒரு மரத்தின் மேல் ஆணி கொண்டு பொருத்திக்கட்ட நினைத்தேன். எனக்கு எப்படி ஜெபிக்க வேண்டுமென தெரியாது. நான் நினைத்தேன், எப்போதாவது அவர் அந்த மரத்தைக் கடந்து செல்லும் போது, அவரிடம்... நான் எவ்வளவு கீழ்த்தரமானவனாக இருந்தேன். எவ்வளவு இழி நிலையில், எவ்வளவு அபாத்திரன் என்பதை அந்தக் கடிதத்தில் அவருக்கு சொல்வேன். நான் நினைத்தேன், அவர் ஒரு மனிதனாக இருந்தால், அவர் ஒரு மனிதனைப் போல பேசுவார். எனவே எனக்கு எப்படி பேசுவது என்று தெரியவில்லை, நான் ஒரு பழைய ஈரமான கொட்டகையில் ஒரு பழைய புல் சாக்கு மீது மண்டியிட்டு, நான் என்னுடைய விரல்களை பற்றிப்பிடிக்க தொடங்கினேன். நான் சொன்னேன், திருவாளர் இயேசுவே (Mr. Jesus), ஒரு நிமிஷம் இங்கே வருவீரா? நான் உம்மிடம் பேச விரும்புகிறேன். " ஆனால் அவர் வருகிறார். அதுவே முக்கியமான காரியமாயுள்ளது. நாம் இன்று அடுக்கடுக்கான (rhyming) ஜெபம் செய்வதை விட்டுவிட்டு, யாரோ ஒருவரை கிண்டல் செய்வதை விட்டுவிட்டு, ஒரு பழைய பாவி மனந்திரும்புவதைப் போல, நம் இருதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபித்தால், தேவன் நம் ஜெபத்தைக் கேட்பார். ஆமென். இவ்விதமான அநேக காரியங்களை பரிசேயர் கொண்டுள்ளனர். பரிசேயர் என்றால் "ஒரு நடிகன்" என்று பொருள் என்று நான் அன்றொருநாள் உங்களிடம் சொன்னேன். உம் ஹும். அநேக பரிசேயர்கள். போர்த்திக்கொள்வதை நிறுத்துங்கள். எனக்கு அந்த விதமான காரியம் பிடிக்கவில்லை. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்; மூல முதலானதிலே (Original) இருங்கள். எப்படியும், தேவன் நீங்கள் என்னவாக இருக்கின்றீர்கள் என்பதை அறிவார். நீங்கள் வேறு ஒருவருக்கு முன்னால் மட்டுமே நடிக்கிறீர்கள்; உங்கள் மூல முதலானது என்னவென்று அவருக்குத் தெரியும். உம் ஹும். 34. கவனியுங்கள், அவர்கள் விரைந்தோடினர்... கர்த்தர் என்னை மன்னித்ததை நான் நினைவுகூருகிறேன். அது என் முதுகில் இருந்து ஒரு மில்லியன் பவுண்டு சுமை வெளியேறினது போல் உணர்ந்தேன். வீட்டை நோக்கிச் செல்லும் படியைக்கூட நான் தொடவில்லை. கூச்சலிடுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அந்த அனுபவத்தை இப்போது மறுபடியுமாக பெற நான் விரும்புகிறேன். அந்த நேரத்திற்காக நான் என்னை தயார்படுத்துவேன். நான் இருந்தேன் - ஏதோ நடந்ததென என்று எனக்கு தெரிந்தது. நான் உள்ளே சென்று, என் பாட்டுப் புத்தகத்தை எடுத்தேன், தாயார் என்னிடம், "என்ன ஆகிவிட்டது?" என்றார்கள். "எனக்கு தெரியாது" என்று நான் சொன்னேன். நான் என் வேதாகமத்தை கையில் எடுத்தேன். என்னால் அதை வாசிக்க முடியவில்லை; நான் மிகவும் பயந்தவனாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தேன். அவள், "நல்லது, என்ன காரியம்?" என்றாள். "எனக்குத் தெரியாது." நான் நழுவி வெளியேச் சென்றேன் - எங்கள் இடத்திற்குப் பின்னால் ஒரு பெரிய ரயில் பாதை உள்ளது. நான் ரயில் பாதையில் ஓடி, காற்றில் குதித்து, சற்றே என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவாக எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த முயன்றேன். ஓ, என்னே. என்ன ஒரு நேரம்! அது இன்றிரவு இயேசு கிறிஸ்துவின், பாவத்திலிருந்து மன்னிக்கப்பட்டதன் சுதந்திரத்தை, விரைந்தோடி நடப்பதை: அந்த அனுபவத்தை ஒருபோதும் உணராத ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தான். அல்லேலூயா! "அல்லேலூயா" வைக் கண்டு பயப்படாதீர்கள்; "நம்முடைய தேவனைத் துதியுங்கள்" என்பது அதன் பொருள், உங்களுக்கு தெரியுமா. நீங்கள் அவருக்குக் கொடுக்கக்கூடிய எல்லா துதிக்கும் அவர் பாத்திரர். 35. கவனியுங்கள். விரைந்தோடி நடந்தனர். இதோ அந்த பாசாங்கு செய்பவர்கள் அவர்களுக்குப் பின்னால் வந்தனர், இவர்களுடன் கூட வரும், இந்த எகிப்தியர்கள், எல்லாவற்றையும் சுமந்து கொண்டு வந்தனர். அவர்களின் சக்கரங்கள் உடைந்து, அவர்கள் நீரில் மூழ்கியதை நாம் கண்டறிந்தோம். தேவன் என்ன செய்தார் தெரியுமா? அவர்களுடைய குதிரைகளைப் பீதியுறச் செய்தார். தாங்கள் தவறு செய்கிறோம் என்று அவர்களுடைய குதிரைகளுக்கு தெரியும்; அவைகள் பாதையினுடாக ஒரு கூட்ட பாவிகளை சுமந்தன, நமக்கு ஏன் குதிரை பெற்ற உணர்வுத்திறன் கூட இல்லை? அவர்கள் செய்வது தவறு என்று அவைகளுக்கு தெரியும். அங்கே ஒரு முறை ஒரு வயதான கழுதை பின்மாற்றம் அடைந்த தீர்க்கதரிசியை சுமந்தது. அது தேவதூதனைக் கண்டு பயந்தது. தேவதூதனை அதனால் பார்க்க முடிந்தது - பிலேயாம். இந்தக் குதிரைகள் தாங்கள் தவறு செய்கிறோம் என்று அறிந்திருந்தன, மேலும் வேதாகமம் கூறுகிறது... வேதாகமம் அப்படிக் கூறியிருக்குமானால் அதை அது உண்மையாக்குகிறது. அவர் பார்வோனின் குதிரைகளை பயமுறுத்தினார் என்று வேதாகமம் கூறுகிறது. அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் வெகுதூரம் போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் குதிரைகள் அவர்களை விட அதிகமாக அறிந்திருந்தன. ஒளியைப் பின்பற்றினவர்களாய், தேவனைப் பின்பற்றினவர்களாய், இஸ்ரவேலரை கொண்டு சென்ற அதே பாதை, அவர்களை பரிபூரண வெற்றிக்கு கொண்டு சென்றது, தாக்குதல் நடத்திய எகிப்தியர்களைக் கொன்று மூழ்கடித்தது. ஓ, அவர்கள் ஆவியில் அதனுடாக கடந்து சென்றார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். 36. உங்களுக்குத் தெரியுமா, இன்று சபையில் அதுதான் காரியம்; அது போதுமான அளவு ஆவியை பெறவில்லை. நமக்குள் நாமே அதிகமாக இருக்கிறோம். என்னே, நீங்கள் சற்றே போதுமானவரை உங்களை விட்டு வெளியேறினால். நீங்கள் சொல்லலாம், "நல்லது, உங்களுக்குத் தெரியும், எங்கள் சபை..... எங்களிடம் வழக்கமான நடைமுறையொழுங்கு உள்ளது. " ஓ, உங்கள் நடைமுறையொழுங்கைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? நீங்கள் எப்படியாவது இரட்சிக்கப்பட, நடைமுறையொழுங்கை விட்டு வெளியேற வேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன். ஆமென். இரட்சிக்கப்படுங்கள். வழக்கத்திலிருந்து வெளியேறுங்கள். நமக்கு வழக்கத்தைப் பற்றி கவலை இல்லை. ஆவிக்குள்ளாகச் செல்லுங்கள், பின்னர் நீங்கள் காரியங்கள் செய்யப்படுவதைக் காணலாம். ஒரு சமயம் ஒரு வயதான தீர்க்கதரிசி கிளர்ச்சியூட்டப்பட்டான். ஏனெனில் யாரோ ஒருவன் அவனிடம் வந்தான்; அவன் வருவது சரியல்ல. அவன் ஒருவித நியாயமான கடுங்கோபம் கொண்டு, அவன் என்ன செய்தான் தெரியுமா? ஆவியானவர் அவன் மீது வருவதற்கு முன், அவன் சில நல்ல ஆவிக்குரிய பாடல்களைப் பாட வேண்டியிருந்தது. பின்பு அவன் ஆவிக்குள்ளாகி, காரியங்களைக் காணத் தொடங்கினான். அவன் சில தரிசனங்களைக் கண்டான். சகோதரரே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், சபையானது ஆவிக்குள்ளாகும் போது, ஜீவியம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் (அது சரி.), மற்றும் நீங்கள் கொண்டிருக்கிறதான அந்த வழக்கம், தானாகவே வெளியேறுகிறது, ஆமென். 37. அந்த பாரமானவைகளை தள்ளிவையுங்கள். பெண்கள் உதவி சங்கம் அடுத்த வார இரவு உணவை ஆயத்தம் செய்துவிட்டது, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். அந்த காரியங்களை தள்ளி வையுங்கள். பரிசுத்த ஆவி உங்கள் ஆத்துமாவுக்குள் ஊற்றப்படும்வரை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் ஊற்றப்பட, பழைமை நாகரீகமான இருதயப் பூர்வமானவைகளுக்கு நேரத்தை கொடுங்கள். நீங்களே அருகே வந்து விடுவீர்கள். நீங்கள் ஒரு முறை உங்களிடமிருந்து விலகிச் சென்றால், ஒருவேளை நீங்கள் இயேசுவை சேரலாம். ஆமென். நீங்கள் உங்களுடனும் இயேசுவுடனும் இருக்க முடியாது; உங்களுடைய மிகப்பெரிய எதிரி நீங்களே என்பதைக் கண்டறிய வேண்டும். நான் வில்லியம் பிரன்ஹாமை வழியிலிருந்து விலக்க முடிந்தால், இயேசு ஒரு அற்புதமான நேரத்தை கொண்டிருக்க முடியும். ஆனால் நீங்கள் அவனை வழியிலிருந்து விலக்க வேண்டும். 38. ஆகவே நீங்கள் தொடங்கும்போது... பாருங்கள். அவர்கள் அற்புதமாக உணர்ந்து, விரைந்தோட தொடங்கினார்கள். ஏன்? அவர்கள் அக்கினி ஸ்தம்பத்தை பின்தொடர்ந்தனர், தேவன் அவர்களுக்கு முன்னால் சென்றார். அவர் செங்கடலை பிளந்து ஒரு வழியை உண்டாக்கியபோது, அது மதிலாக நின்றது, அவர்கள் மறுபக்கம் சென்று, மீண்டும் நிலத்தை அடைந்தபோது, அவர்களுடைய கால்கள் தரையில் இருந்தன, ஆவியானவர் அவர்களை விட்டுப் சென்றபின் அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தபோது, என்ன நடந்தது என்பதைக் கண்டார்கள். அவர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள். மோசே தன் கைகளை உயர்த்தி ஆவியில் பாடத் தொடங்கும் வரை, அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்கள். மேலும் அவனுடைய சகோதரியான, தீர்க்கதரிசினியானவளான மிரியாம், அந்தக் கூட்டத்தில் பிரபலமானவள் (ஆமென்), அவள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டாள். அவள் ஒரு தம்புரைப் பிடித்து தம்புரை அடித்து நடனமாடத் தொடங்கினாள். அப்பொழுது இஸ்ரவேலின் குமாரத்திகள் அவளைப் பின்தொடர்ந்து கரையில், தம்புரை அடித்து நடனமாடினார்கள். அல்லேலூயா. அது பழைமையான பெந்தெகொஸ்தே கூடாரக் (camp) கூட்டம் இல்லையென்றால், நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் அப்படியான ஒன்றை கண்டதே இல்லை. சகோதரனே, இது பின்மாரியாய் இருக்குமாயின், அது முன்மாரியாய் இருந்திருக்க வேண்டும். அல்லேலூயா. அது என்ன? அதே பரிசுத்த ஆவி, அதே அக்கினி ஸ்தம்பம், அதே மீட்பர். ஒளியில் நடந்துகொண்டு, தொடர்ந்து முன்னேறுவது, என்ன ஒரு நேரம். 39. இப்போது, அவர்கள் கடந்து சென்றபோது உணவு இல்லாமல் இருந்தனர். அவர்களுக்கு எந்த உணவும் லை. அவர்கள் தங்கள் தலையின் மேல் போதுமான பிசைந்த மாவை மட்டுமே சுமந்து வந்தனர். குழந்தைகள் அனைவரும் அப்பம் சாப்பிடுவதற்காக அழுதனர், அதனால் அவர்கள் அதை புசித்தார்கள். அவர்களுக்குத் என்ன தேவையோ அதை தருவதாக தேவன் வாக்குரைத்தார். எனவே அவர்கள் அன்று இரவு ஒருவேளை அப்பம் இல்லாமல் தூங்கச் சென்றிருக்கலாம். மறுநாள் காலையில் அவர்கள் எழுந்தபோது, எந்த சிந்தனையும் கொள்ளாமல், ஏனெனில் அப்பொழுது சபை ஆவியில் இருந்தது; அவர்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தனர். அவர்கள் யேகோவாவின் மகிமையைக் கண்டனர்; அவர்கள் கற்பனைகளைப் பின்பற்றுவது என்னவென்று கண்டார்கள். பிசாசின் வல்லமை முடிவடைவதைக் கண்டார்கள்; விசுவாசத்தின் வல்லமை அவர்களை மீண்டும் வெற்றிக்கு அழைத்து வருவதை கண்டார்கள். இன்றிரவு அதை உங்களால் செய்ய முடியுமா? "சகோதரன் பிரன்ஹாமே, எனக்கு காசநோய் இருப்பதாக மருத்துவர் சொன்னார். எனக்கு இது இருந்தது; அது எனக்கு இருந்தது. " எனலாம். தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசத்தோடு பாருங்கள். அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருந்தனர்: வாக்குத்தத்தத்தை பின்பற்றினர். அவர்கள் பஸ்கா ஆட்டை பலியிட்டார்கள்; விசுவாசத்தோடு பலியை கைக்கொண்டனர், இன்னும் சொல்லப்போனால், அவர்கள் பஸ்கா பண்டிகையைக் கடைப்பிடித்தனர். அவர்கள் விசுவாசத்தினாலே புறப்பட்டு அணிவகுத்து சென்றார்கள். ஏனெனில் தேவன் அப்படித்தான் கூறியிருந்தார். இன்றிரவு உங்களை சுகப்படுத்துவதாக தேவன் வாக்குத்தத்தம் அளித்துள்ளார். "விசுவாசத்தினாலே நான் அதைப் பெறப்போகிறேன். தேவன் அப்படித்தான் கூறியிருந்தார். அவர் கூறிய ஒவ்வொரு வழியையும் நான் பின்பற்றுகிறேன். நான் அதை அப்படியே பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்". 40. அடுத்த நாள் காலையில் அவர்கள் எழுந்து தரையில் பார்த்தபோது, ஹ், தேவன் அளித்திருந்தார் என்பதை நாம் காண்கிறோம். ஆமென். ஒன்றுமே இல்லாத நிலைக்கு நீங்கள் எப்போதாவது சென்றிருக்கிறீர்களா.... எந்த வழியில் செல்வது என்று தெரியாத ஒரு இடத்திற்கு எத்தனை பேர் சென்றிருக்கிறீர்கள், பின்னர் தேவன் அதை அளிப்பார், அதை - அதை அவ்வழியில் தான் அவர் செய்கிறார். பாருங்கள், அதே தேவன்தான். அங்கே அவர்கள் இருந்தார்கள்.. நாள் முழுவதும் கூச்சலிட்டு, அற்புதமான நேரத்தை அனுபவித்து, மகத்தான எழுப்புதலைக் கண்ட பிறகு, அவர்கள் இரவு முழுவதும் ஓய்ந்திருந்தனர். மோசே உண்மையிலேயே ஒரு எழுப்புதலைப் பெற்றிருந்தான். தேவன் அவனையும், பின்தொடர்ந்து சென்ற எல்லா ஜனங்களையும் ஆசீர்வதித்தார், என்ன ஒரு எழுப்புதல். அவ்வாறான ஒன்றை நீங்கள் சிகாகோவில் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். ஆமென். நீங்கள் அதைப் பெற முடியும். நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளவதற்கு விரும்புவதை விட, தேவன் நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளவதற்கு அதிகம் விரும்புகிறார். ஆமென். நீங்கள் சற்றே அவரது கற்பனைகளைக் கைக்கொண்டு, தொடர்ந்து முன்னேறி, ஷெகினா மகிமைக்குள் சென்று, அக்கினி ஸ்தம்பத்தைப் பின்பற்ற வேண்டும். பரிசுத்த ஆவியைப் பின்பற்றுங்கள். சபை என்ன சொல்கிறது, அல்லது இது என்ன சொல்கிறது, அல்லது அது என்ன சொல்கிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டாம்; கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள். கிறிஸ்துவில் ஒளி இருக்கிறது; கிறிஸ்துவில் ஜீவன் உள்ளது. 41. நல்லது. கவனியுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து, அவர்கள் வெளியே போனபோது, தரை முழுவதும் சிறிய மெல்லிய அப்பங்கள் (wafers) கிடந்தன. தேவன் மன்னாவை வானத்திலிருந்து வருஷிக்கப் பண்ணினார். கிறிஸ்துவானவர் தாமே பரலோகத்திலிருந்து மரிக்கும்படியாக பூமிக்கு வருவதையும் பூமியில் அழியும்படியாகவும், அவர் தாமே அழிந்து கொண்டிருகிறர்வர்களை மீட்கும்படியாகவும் வருகின்றதற்கு அது ஒரு மிக அழகான அடையாளமாகும். பரலோகத்திற்குரியவராக இருந்த அவர், பூமியை பரலோகமாக் குவதற்காக பூமிக்குரியவராக ஆனார். நீங்கள் எப்போதாவது அதைப்பற்றி யோசித்ததுண்டா? நான் அவரைப் போல ஆவதற்காக, கிறிஸ்து என்னைப் போலானார். ஓ, என்னே, ஒரு நாத்திகன் எப்போதாவது அதைநோக்கி பார்ப்பானேயானால், அது அவனது இருதயத்தை நடுக்கமடையச் செய்யும். கிறிஸ்து பாவமாகி, ஒரு பாவ பலியாக..., எந்தப் பாவமும் அறியாதிருந்தும், பாவமாக்கப்பட்டு, அவருடைய ஜீவனின் நீதியினாலே, பாவியாகிய நான், மீட்கப்பட்டு மேலும் அவருடைய சாயலில் அவர் பக்கத்தில் நிற்பதற்காக... சகோதரனே, அவ்வளவுதான்; அதுதான் தேவனின் அன்பு. 42. கவனியுங்கள், அது கிறிஸ்துவின் முன்னடையாளமாக உள்ளது. அது ஜனங்கள் தங்கள் பவனியில் நிலைத்திருக்கும் பொருட்டு, அது பூமியின் மேல் வைக்கப்பட்டு, அழியும்படிக்குக் கீழே வந்தது. இப்போது, அவர்கள் பரதேசிகள். ஆம், அவர்கள் பரதேசிகள். அவர்கள் எகிப்திலிருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குப் பிரயாணம் செய்தார்கள், ஆனால் அவர்கள் எகிப்திலோ அல்லது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலோ இருக்கவில்லை, எனவே அவர்கள் பரதேசிகள். இன்றிரவு சபையும் அப்படித்தான் இருக்கிறது; நாம் பரதேசிகள். நாம் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்து; நாம் மகிமையின் பாதையில் இருக்கிறோம். எனவே நாம் எகிப்திலோ அல்லது மகிமையிலோ இல்லை. ஆனால் நாம் பரதேசிகள், மேலும் தேவன் நம்முடன் இருந்து, நமக்குத் தேவையான அனைத்தையும் வழங்கி, நாம் சென்றுகொண்டிருக்கும்போது சபையானது நிலைத்திருக்கும் பொருட்டு கிறிஸ்துவை அனுப்புகிறார். அது பரிசுத்த ஆவியின் அடையாளமாயிருக்கிறது. 43. கவனியுங்கள், இப்போது மோசே ஒரு பெரிய தங்க கலசத்தை உருவாக்கினான், அவன் அங்கு சென்று அதை பல பெரிய கலசங்களில் சேகரித்தான், எல்லா சந்ததிகளும் நினைவுகூரும்படி அதை மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே வைத்தான், ஆசாரியத்துவத்திற்குள் வருகிற ஒவ்வொரு ஆசாரியனும் தொடக்கத்தில் விழுந்த அந்த மூல மன்னாவில் சிறிது புசிக்கும்படியாக வைக்கப்பட்டது. அவர்களுக்குப் பின் வந்த சந்ததியினர், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடையும் வரை பயணத்தில் அது ஒரு நினைவுகூரும் முன்னடையாளமாக இருந்தது; மன்னா நிறைந்த அந்த பெரிய கலசம் ஒருபோதும் அங்கு குறையவில்லை. அவர்கள் ஒரு கைப்பிடியை வெளியே எடுத்தால். மறுநாள் காலையில் அதே கைப்பிடி அங்கு இருக்கும். அது ஒருபோதும் குறைவுபடவில்லை. பயணத்தின்போது தேவனுடைய ஆசாரியனாக வரும் ஒவ்வொருவனும் இந்த மன்னாவைக் புசிக்க வேண்டும் என்பதற்காக அது எல்லாவேளையும் அங்கேயே இருந்தது. 44. இப்போது, அது பரிசுத்த ஆவியின் முன்னடையாளமாக உள்ளது. மோசே எகிப்திலிருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு வனாந்தரம் வழியாக சென்றான். அதே போன்றுதான் சபை உலகத்திலிருந்து வெளியே வந்து, உலகத்திலிருந்து தன்னை வேறுபிரித்துக் கொண்டு, வனாந்தர யாத்திரையில், ஆயிர வருட அரசாட்சியை நோக்கி செல்கிறது. அது பரிபூரணமாய் இருக்க வேண்டும். மேலும் இப்போது, தேவன் அவர்களை இயற்கையில் வழிநடத்தினார், ஏனென்றால் அவர்கள் வனாந்தரத்தில் விடப்பட்டிருந்தனர், மேலும் அவர் அவர்களை இயற்கையில் வழிநடத்தினார். அவர் இன்று ஆவிக்குரிய விதத்தில் நம்மை வழிநடத்துகிறார். இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்திய அதே அக்கினி ஸ்தம்பம், இங்கே அவர் நம்மை வழிநடத்துகிறார், அதே ஒன்று, அதே அக்கினி ஸ்தம்பம், நம்மை வழிநடத்துகிறது, இயற்கைக்கு மேம்பட்ட தேவனின் ஒளி நம்மை வழி நடத்துகிறது, சபையை ஆவிக்குள்ளாக வழி நடத்துகிறது. 45. இப்போது கவனியுங்கள். பிறகு அந்த அப்பம் ஒரு முன்னடையாளமாக உள்ளது. இப்போது, பெந்தெகொஸ்தேயின் போது, ஒரு பிரிதல் இருந்தது. அல்லது அதுதான் சபையின் தொடக்கம் என்று, எந்த ஒரு வேதாகம கல்லூரியில் பயின்ற வேத பண்டிதனுக்கும் தெரியும். பரிசுத்த ஆவியானவர் வானத்திலிருந்து பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல வந்து, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பினார்... அவர்கள் வீதிகளில் சென்று, அந்நிய பாஷைகளில் பேசியும், வெவ்வேறு பாஷைகளில் பேசிக் கொண்டும், தொடர்ந்து அதை செய்துகொண்டும், குடித்து வெறி கொண்டவர்களைப் போல் மற்றவர்களுக்குக் காணப்பட்டனர். அவர்களில் அநேகர், "இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்" என்றார்கள். ஆனால் பேதுரு அவர்கள் நடுவில் எழுந்து, "யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்கள் அல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாய் இருக்கிறதே." என்றான். இது இல்லையென்றாலும், அது வரும் வரையில் இதை அப்படியே பற்றிக் கொண்டிருக்கப் போகிறேன். இதிலே நான் திருப்தி அடைவேன். இதுதான் அது என்று நான் விசுவாசிக்கிறேன். அவர்கள் அதைக் கண்டபோது, இந்த மனுஷருடைய தைரியத்தைக் கண்டு, தன்னுடைய பெயரைக்கூட வாசிக்கத் தெரியாத ஒரு மனுஷனுடைய பிரசங்கத்தைக் கேட்டார்கள், பேதுரு... அவன் பேதமையுள்ளவனாகவும் படிப்பறியாதவனாகவும் இருந்தான் என்று வேதாகமம் கூறுகிறது. ஆனால் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட அந்த மகத்தான வீரனின் பிரசங்கத்தைப் பார்த்து, அவர்கள், "சகோதரரே, இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்றார்கள். அதற்கு பேதுரு, "மனந்திரும்பி, நீங்கள் ஒவ்வொருவரும், பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள், இந்த காரியங்கள் நம்மிடம் வந்திருக்கிறது, இந்த மன்னாவை நாங்கள் புசிக்கிறோம்". "வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது" என்றான். 46. தேவன் அங்கே என்ன கூறினார்? அதே காரியத்தை அவர் மோசேயிடமும் கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "இந்த பரிசுத்த ஆவியான மன்னா, சபையை நிலைநிறுத்த பெந்தெகொஸ்தே நாளில் விழத்தொடங்கியது, மேலும் நாம் ஆயிர வருட அரசாட்சிக்குள் நுழையும்நாள் வரை சபை பரிசுத்த ஆவியால் மட்டுமே ஜீவிக்க வேண்டும்." அல்லேலூயா! அது என்ன? அதே பரிசுத்த ஆவி. இப்போது கவனியுங்கள், அது பழைய ஏற்பாட்டில் ஆசாரியனாக இருந்த ஒவ்வொருவனுக்கும் இருந்தது. புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவனாக ஆகும் ஒவ்வொருவனும், மறுபடியும் பிறந்து, தேவனுக்கு ஆசாரியனாகிறான். நாம் ஆசாரியர்களாகவும் இராஜாக்களாகவும் இருக்கிறோம். ஒரு ஆசாரியன் பலிசெலுத்த வேண்டும். நாம் தேவனுக்கு உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலிகளை செலுத்தி, அவருடைய நாமத்தைத் துதிக்கிறோம். "நான் அதை அப்படி உணரவில்லை" என சொல்லலாம். அதை எப்படியாயினும் செய்யுங்கள். அது ஒரு பலி. அல்லேலூயா, "நான் மிகவும் சோர்வாக உணர்கிறேன்" என சொல்லலாம். உங்களை நரகத்திற்கு கூட்டிச்செல்லும் வரை, பிசாசு அதைச் சொல்வான். அது சரி. தேவனுக்கு ஆசாரியர்களாகவும் இராஜாக்களாகவும், நீங்கள் ஆவிக்குரிய பலியைச் செலுத்த வேண்டும்: அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலியை செலுத்துங்கள். நாம் தேவனுக்கு ஆசாரியர்களாகவும் இராஜாக்களாகவும் ஆக்கப்பட்டோம் என்று வேதாகமம் கூறுகிறது. 47. எதைப் புசிக்கிறோம்? தனியாக ஜீவிப்பது. சில காட்டு புல்லரிசிகளை (wild oats) எடுத்து அவற்றை உடைத்து சில சோள ரொட்டிகளாக செய்ய முயற்சிக்க, இஸ்ரவேலர் வெளியே போகவில்லை. இதுதான் இன்றிரவு சபையின் காரியமாக இருக்கின்றது, அநேக காட்டு புல்லரிசிகள் கிடைத்தது; அதுதான் உங்கள் உணவுமுறை (diet). உங்களுக்கு ஒரு பயனுடைய பழைமையான வேதாகம உணவுமுறை தேவை, அதுதான் உங்களுக்குத் தேவை. போதகர் வேதாகமத்தைப் பற்றிய உண்மையை உங்களுக்குச் சொல்வார். தேவனுக்கு நன்றி, நாம் அவர்களை ஏராளமாக பெற்றுள்ளோம். ஆனால் காட்டு புல்லரிசி உணவுமுறையை கவனியுங்கள். உங்களுக்குத் தெரியுமா ஒரு சமயம் ஒரு கூட்ட பிரசங்கிமார்கள் ஒரு வேதாகமக் வேதாகமக் கல்லூரியில் இருந்தபோது, அவர்களைப் பார்க்க ஒரு தீர்க்கதரிசி வந்தான். உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் கொஞ்சம் கூழ் காய்ச்சும்படிக்கு கொஞ்சம் பட்டாணிகளை கொண்டுவர வெளியே சென்றனர். அதை சமைக்க ஒரு மிகப்பெரிய பானையை வைத்தார்கள். பிரசங்கிகளில் ஒருவன் வெளியே சென்று, அவன் என்ன செய்தான் தெரியுமா? ஒரு மடி நிறைய பேய்க்கொம்மட்டிக் காய்களை எடுத்து வந்து, அதிலே போட்டான், அது பட்டாணிகள் என்று நினைத்தான். இப்போது, பேய்க் கொம்மட்டிக்காய்களுக்கும் பட்டாணிகளுக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு ஆள் (guy), மிகவும் பரிதாபமான நிலை. நான் உங்களுக்குச் சொல்கிறேன், இன்றிரவு ஊழியத்தில் உள்ள சில ஜனங்களுக்கு அதைக்காட்டிலும் மேலானதொன்றும் தெரியாது, அது சரி, பரிசுத்த ஆவியின் வல்லமைக்கும் மதபேதத்திற்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை. ஆமென். அங்கே உண்மையான பரிசுத்த ஆவி இருக்கிறது. நாம் அநேக மூடபக்தி வைராக்கியத்தை பெற்றோம் என்பதை நான் ஒப்புக்கொள்வேன், ஆனால் அது நாமும் ஒரு உண்மையான ஒன்றைப் பெற்றுள்ளோம் என்பதைக் குறிக்கிறது. ஒரு போலியான டாலர் (நோட்டு) உண்மையான டாலரை இன்னும் சிறப்பான விதத்தில் ஆக்குகின்றது. ஆமென். 48. ஆனால் அங்கே இரட்டிப்பான பங்கை பெற்றிருக்கக்கூடிய ஒரு மனிதன் இருந்தான். அவன் என்ன செய்தான் தெரியுமா? அவன் வெறுமனே வெளியே சென்று கைப்பிடியளவு மாவைக் கொண்டுவந்து, அதைப்பானையில் எறிந்தான். அவன் பானையை ஒருபோதும் அழிக்கவில்லை; அவன் பானையில் இருந்த கூழையும் ஒருபோதும் அழிக்கவில்லை; சற்றே ஒரு கைப்பிடியளவு மாவை எடுத்து அதிலே போட்டு, "புசியுங்கள். அந்த பானையில் ஜீவன் உள்ளது " என்று அவன் சொன்னான். அந்த மாவு எதைக் குறிப்பிடுகிறது? அது போஜன பலியிலிருந்து வந்ததாகும், அது ஒரு பலி, கிறிஸ்துவை பற்றி பேசும், அந்த மாவானது போஜன பலியிலிருந்து வந்ததாகும். அவர்கள் அரைத்த அந்த சிறிய சாணைக்கல் (burrs), அவர்கள் ஒவ்வொரு தானியத்தையும் ஒரேவிதமாக அரைக்க வேண்டியதாயிருந்தது, கோணியில் இருக்கிற மாவை அரைப்பதைக் காண்பிக்கிறது, இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை காட்டுகிறது. மேலும் கிறிஸ்து அந்த நாளிலே விஷத்தின் குளறுபடியிலிருந்து ஜீவனை கொண்டு வர முடியுமானால், இன்றும் அதேதான் காரியம்: கிறிஸ்துவை விஷக் கோட்பாட்டின் குளறுபடியில் வைத்தால், அது ஜீவனையும், தெய்வீக சுகமளித்தலையும், உயிர்த்தெழுதலையும், வல்லமையும், ஆதியில் இருந்த பரிசுத்த ஆவியையும் பிறப்பிக்கும். ஆமென். இன்று நமக்குத் தேவையானது கிறிஸ்துவை சபைக்குள் கடந்து செல்ல வைத்து மற்றும் நமக்குக் கிடைத்த இந்த அடுத்தவர்களின் காரியத்தில் தலையிடும் (long nosed) வேத சாஸ்திரம் படித்த நிபுணர்களிடமிருந்து விலகிச் செல்வதுதான். அல்லேலூயா, நான் பித்துப்பிடித்தவன் என்று நினைக்கின்றீர்களா? ஒருவேளை நான் இருக்கலாம், ஆனால் என்னை தனியாக விடுங்கள், நான் நன்றாகவும், பித்துப்பிடித்தவன் போலவும் உணர்கிறேன். எனவே என்னை தனியாக விடுங்கள். கர்த்தாவே, நான் என்னையே இழந்து, தேவனே உம்மில் அதை கண்டறியச்செய்யும். நான் மற்ற வழியில் இருந்ததை விட இந்த வழியில் இன்னும் ஏராளமான மகிழ்ச்சியோடு இருக்கிறேன். 49. எல்லாம் சரி. கவனியுங்கள், மாவு வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அதற்கு அவன், "அதையெல்லாம் இப்போது குவித்து வைக்காதீர்கள். அதே பொருளை எடுத்துக் கொள்ளுங்கள், அது உங்களுக்கு ஜீவனை தரும்." அதைத்தான் கிறிஸ்துவும் செய்கிறார் என்றான். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நீங்கள் உணரும்போது, அது மரணத்தை ஜீவனாக மாற்றுகிறது. புற்றுநோயால் சுகமாக்கப்பட்டு இங்கிருக்கும் இந்த ஜனங்களின் மரணத்தை அது ஜீவனாக மாற்றியது. கடந்த வாரம் இரண்டு பார்வையற்ற ஸ்திரீகள் சுகமடைந்தபோது அது அந்த இருளை வெளிச்சமாக மாற்றியது. அது விழுந்தது... அது ஒவ்வொரு முறையும் மாற்றுகிறது, நீங்கள் விசுவாசித்து கிறிஸ்துவை அங்கே வைக்கும்போது ஒவ்வொரு முறையும் மரணத்திலிருந்து ஜீவனுக்கு மாற்றுகிறது, கிறிஸ்து உள்ளே வரும்போது மரணத்திலிருந்து ஜீவன் வருகிறது என்பதை நீங்கள் கண்டீர்கள். ஆமென். நீங்கள் அதை முழு இருதயத்தோடும் விசுவாசிக்கின்றீர்களா? நீங்கள் அதை விசுவாசித்தால், தேவன் அதற்கு வெகுமதி அளிப்பார். அல்லேலூயா! கிறிஸ்து தள்ளப்பட்டதால் அது மரணத்தை ஜீவனாக மாற்றினது. சகோதரர்களே, குழியில் இருப்பதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? ஆமென். அது உண்மை. ஏனெனில் கிறிஸ்து வந்ததினால் அது மரணத்தை ஜீவனாக மாற்றினது. 50. இப்போது, அவர்கள் சென்று இந்த மன்னாவில் சிலவற்றைக் கொண்டு வந்தனர். உங்களுக்குத் தெரியுமா, தாவீது அதை கொஞ்சம் சுவைத்திருக்க வேண்டும். இந்த ஆவிக்குரிய மன்னாவை நீங்கள் எப்போதாவது சுவைத்ததுண்டா? உதடுகளை நக்கும் வரைக்கும் ஜனங்கள் அதை அதிகமாகப் பெறுவதை நான் கண்டிருக்கிறேன். ஆவிக்குரிய விதமாக கூறுவோமானால், எனக்கு, உண்மையில் ஒரு சுவையான உணவு உண்டுகளிக்கும் குதூகலம் உண்டாயிருக்கிறது. (ஆமென்!), ஓ என்னே! அது உங்களை நிரப்புகிறது. நீங்கள் உண்மையிலேயே பலவீனமடைந்தபின், ஒரு முழு விருந்தை (square meal) சாப்பிடும்போது, நீங்கள் எவ்வளவு நன்றாக உணர்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா, ஒரு நபர் ஒரு மருத்துவரிடம் சென்று, "மருத்துவரே, எனக்கு உடல்நிலை சரியில்லை, நான் பலவீனமாக இருக்கிறேன்" என்று சொன்னால். "என்ன காரியம்?" சொல்லும். "எனக்கு தெரியாது." அவனிடம் கொஞ்சம் உடல் ரீதியான காரியங்களை கேட்கிறார். "நல்லது, ஆமாம், அது பரவாயில்லை." "நல்லது, கடைசியாக நீர் எப்போது சாப்பிட்டீர்? " "நேற்று முன்தினம் பாதி பிஸ்கோத்தை சாப்பிட்டேன். " சகோதரனே, நீ பசியாக இருக்கிறாய்." இன்று சபையில் அதுதான் காரியம்: அது இரத்த சோகை, ஏனென்றால் அவர்களுக்கு போதுமான ஆவிக்குரிய ஆகாரம் கிடைப்பதில்லை. அவர்கள் வேதாகமத்தை எடுத்தால், சகோதரனே, அது கிறிஸ்துவின் இரத்தத்தை விசுவாசியின் நரம்புகளில் செலுத்தும். புதிய ஜீவன், ஜீவன் இரத்தத்தில் இருந்து வருகிறது. ஆமென். சபையின் இரத்த சோகை நிலை, பரிதாபகரமானது, வெளிறிய கன்னங்கள், என்னே, என்னே. நாம் தொடங்குவதற்கு நமக்கு ஒரு பிறிது குருதியேற்றம் (transfusion ஒருவர் இரத்தத்தை இன்னொருவர் நரம்பில் மாற்றுதல் - தமிழாக்கியோன்) தேவை. ஆமென். 51. அதைக் கவனியுங்கள். தாவீது அதைப்பற்றி பேசியுள்ளான். அவன் அதை மிகுதியாகப் பெற்று, என் பாத்திரம் நிரம்பி வழிகிறது" என்றான். ஓ. பாத்திரம் நிரம்பி வழிவதை நான் விரும்புகிறேன், நீங்கள் விரும்பவில்லையா? அதைப்பிடிக்க அநேகம் பேர் நிற்கிறார்கள் (நீங்கள் பார்த்தீர்களா?) அது...மேலும் அவன் கூறினான்... உங்களுக்குத் தெரியுமா, அவன் ஒரு ஆடு மேய்ப்பவன், வழக்கமாக அவன் ஒரு சிறிய இரவலர் பையை (scrip bag) இப்படி தன்னுடைய பக்கவாட்டில் எடுத்துச் செல்வான், அதில் அவர்கள் சிறிது தேனை கட்டி வைத்திருப்பார்கள். ஒரு ஆடு வியாதிப்பட்டால், அவர்கள் தேனை ஒரு பாறையின் மேல் ஊற்றிவிடுவார்கள். ஏனெனில் அவர்கள் ஆடுகள் தேனை மிகவும் நக்கவேண்டுமென்பதற்காக அல்ல, ஆனால் அது இனிப்பானவைகளை விரும்புவதால். எனவே அவைகள் பாறையிலிருந்து சுண்ணாம்பை எடுக்க வேண்டுமென்பதற்காக, ஏனெனில் சுண்ணாம்பில் ஒரு குணப்படுத்தும் மூலக்கூறு இருந்தது. எனவே அவர்கள் தேனை பாறையில் ஊற்றி, வியாதிப்பட்ட ஆடுகளை அந்த தேனை நக்க விடுவார்கள். மேலும் தேனை நக்குவது, ஏன், அவன் அக்கன்மலையைப் பெற்றான். அது எப்போதும் வியாதிப்பட்ட ஆடுகளை குணப்படுத்தியது. நல்லது, சகோதரனே, இன்றிரவு நம்மிடம், இரவலர் பை முழுவதும் நிறைய தேன் உள்ளது. ஆமென். நாம் அதை கிறிஸ்து இயேசுவின் மீது ஊற்றிடுவோம், ஏதோ ஒரு ஸ்தாபனத்தின் மீது அல்ல; நாம் அதை அதற்குரியவராயிருக்கிற கிறிஸ்து இயேசுவின் மீது ஊற்றிடுவோம். வியாதிப்பட்ட ஆடுகளாகிய நீங்கள் இப்போதே உடனே நக்குவதற்குச் செல்லுங்கள். நீங்கள் நலமாக இல்லை என்றால் அதை கண்டுபிடியுங்கள். அது கன்மலையின் தேனைப்போல் மதுரமுள்ளது, ஆமென். நீங்கள் உங்கள் இருதயங்களை திறந்து தேவன் முன் களிகூர செல்லுங்கள், உங்களுக்கு எப்போதாவது ஒரு சிறிய சுண்ணாம்புக்கல் கிடைக்கும். சிறிய கல்லாகிய எது? நித்திய கன்மலையினுடையது. அல்லேலூயா! ஓ. நான் அதை எவ்வளவு நேசிக்கிறேன்! "நித்திய கன்மலை?" என்று நீங்கள் கூறலாம். "ஆம் ஐயா." "சகோதரன் பிரன்ஹாமே, அந்த ஜனங்களை போல நானும் நடப்பேனா?" "ஆம் ஐயா. ஒளியில் நடவுங்கள்:" சரியாக அதை சுற்றியே உங்களை கட்டுவார். உங்களுக்குத் தெரியுமா தேவன் அவர்களைக் கழுகின் செட்டைகளில் அடைத்து வைத்ததாக வேதாகமத்தில் கூறியிருக்கிறார். அதை வேதாகமம் கூறினது. அப்படியானால், இஸ்ரவேல் கழுகின் செட்டைகளில் உட்கார்ந்துகொண்டு கடந்திருக்க.. அவர்கள் எந்த சேற்றிலும் நடக்காததில் ஆச்சரியமில்லை. நீங்கள் எப்போதாவது அந்த கழுகின் செட்டைகளில் ஏறி நடந்திருக்கிறீர்களா? 52. இங்கே சமீபத்தில், நான் மலைகளின் மேல் இருந்தேன். நான் ஒரு கால்நடைகளை மேய்ப்பவன் (Cowpoke) என்பது உங்களுக்குத் தெரியும். நான் அநேக முறை மலைகளில் சவாரி செய்திருக்கிறேன். அடுத்த வாரம் நான் அதே வழியில் செல்லப் போகிறேன். மேலே சென்று, வேட்டையாடுவதற்காக அல்ல, ஆனால் சற்றே இயற்கையை காணும்படியாக. நான் தேவனை நேசிக்கிறேன், இயற்கையில் அவரைப் பாருங்கள். நீங்கள் அவரை ஒவ்வொரு நட்சத்திரத்திலும், ஒவ்வொரு சூரிய ய அஸ்தமனத்திலும், ஒவ்வொரு கிளையிலும், ஒவ்வொரு முறை காற்று வீசும்போதும் காணலாம்: நீங்கள் சுற்றிப் பார்த்தால் அவரை எந்த இடத்திலாவது காணலாம். நான் இருவிழித் தொலைநோக்கி (binoculars) வைத்திருந்தேன்; நாங்கள் வசந்த காலத்தில், கோரல் உச்சியில் (Corral Peaks), சுமார் ஐம்பது அல்லது எழுபத்தைந்து மைல்கள் அல்லது அதற்கும் மேல், ஏறக்குறைய நூறு மைல்கள், டென்வரில் (Denver) இருந்து ராபிட் இயர் பாஸ் க்கு (Rabbit Ear Pass), பெர்தவுட் பாஸ் (Berthoud Pass) மற்றும் ராபிட் இயர் பாஸ் க்கு இடைப்பட்ட இடத்தில், ட்ரபிள்சம் ரிவர் பள்ளத்தாக்கு (Troublesome River Valley), ஹெர்ஃபோர்டு அசோசியேஷனை (Hereford Association) நோக்கிச் சென்றோம் என்று நினைக்கிறேன். நான் அங்கே சில ஆடுமாடுகளை கீழே நடத்திக் கொண்டிருந்தேன், அல்லது சில ஆடுமாடுகளுக்கு உப்பு போட்டுக்கொண்டிருந்தேன். நான் நிறுத்தி, என் குதிரையைக் கட்டி விட்டு, அங்கே நடந்துச்சென்று, உட்கார்ந்தேன், நான் நினைத்தேன், "ஓ. தேவனே, அங்கே தொலைவில் நோக்கிப் பார்க்கையில்" 53. நான் ஒரு சிறு கவிதை எழுதினேன்; அதை ஆரம்பித்தேன். நான் எல்லா நேரங்களிலும் கவிதை எழுதுவதுண்டு. நான் அங்கு சென்று, நான் சொன்னேன், நான் தனிமையில் இருக்கிறேன், ஓ, மிகவும் தனிமையில், தொலைவில் உள்ள வடமேற்கில், நிழல்கள் மலை மார்பின் மேல் ஆழமாக விழும் இடத்தில்; கருஞ்சிவப்புநிற மூடுபனியைச் சுற்றி பதுங்கியிருக்கும் ஓநாய்களை என்னால் காணமுடிகிறது; நீண்ட கொம்புடைய மாடுகள் மேயும் இடத்தில் சிறுத்தைகள் ஓலமிடுதல் சத்தம் கேட்கிறது. ஆனால் எங்கோ பள்ளத்தாக்கின் மேலே, சிங்கத்தின் சிணுங்கலை என்னால் கேட்க முடிகிறது, அரிசோனாத் தொடரிலுள்ள தூரத்து கிரிஸ்டல் மலைகளில். 54. ஓ, இரவில் அந்த கருஞ்சிவப்பு நிற (Purple) கோரைப்புல்லைச் (sedge) சுற்றி, அப்படிப்பட்டதான இராஜ்யத்தில் அந்த மினுமினுக்கும் நெருப்பைப் (campfire) பார்க்க, அதோடு வயதான ஓநாய் உரக்க கத்துவதை கேட்க. நான் அங்கு சென்று, உப்பு போட்டுவிட்டு, சில கட்டைகளை வெளியே வைத்தேன். என் பொதி குதிரைகளை அங்கேயே அடைத்து, அவைகளை கட்டி, மேலே சென்று பொருந்தாணியில் (tack) பொருத்தி, அங்கு நான் மேலே ஏறினேன். நான் நிமிர்ந்து பார்த்து ஒரு காட்சியைக் கண்டேன். "தேவனே உம்மை தொழுதுகொள்ளவா என்னை நீர் இங்கு அழைத்து வந்தீர்" என்று வியந்தேன். நான் என் கைகளை உயர்த்தி, என் கால்களைத் மிதித்துக் கொண்டிருந்தேன், அவர்கள் என்னைக் கண்டிருந்தால், அங்கு ஒரு பித்துபிடித்தவன் இருப்பதாக அவர்கள் நினைத்திருக்கலாம். நான் ஆவியில் களிகூர்ந்து ஒரு நல்ல தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் அதை விரும்புகின்றீர்களா? தேவனோடு மட்டும் தனித்திருங்கள். நான் இருவிழித் தொலைநோக்கியை சேணப்பையிலிருந்து வெளியே எடுத்து, அங்கே நிமிர்ந்து பார்த்தபோது, நான் ஊளையிடும் சத்தத்தை கேட்டேன். நான் அங்கு நிமிர்ந்து பார்த்தேன், ஒரு வயதான தாய்க்கழுகு தனது சிறிய குஞ்சுகளுடன் மிக மோசமான தருணத்தை கொண்டிருந்தது. அது அங்குள்ள உயரமான பாறைகளில், அவைகள் தங்களுடைய கூட்டை எங்கு கட்டுமோ அங்கே இருந்தது. என்னிடம் ஒரு ஜோடி 7×50 இருந்தன (7×50 என்பது பைனாகுலரின் பார்வை அளவீட்டை குறிக்கிறது. தமிழாக்கியோன்), நான் அந்த கழுகை நன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தேன், அதைக் கண்டு பிடித்தேன். அது அந்த கழுகுக் குஞ்சுகளை கூட்டின் மேற்பரப்பிலிருந்து வெளியேற்ற முயன்றது, ஓ. என்னே, அவைகள் தொந்தரவுக்குள்ளாயின. அவ்விதமாகத்தான் தேவன் சிலநேரங்களில் செய்கிறார்: அவரது கழுகுகளைச் சுற்றிலுமுள்ள காரியங்களை வெளியேற்ற முயற்சி செய்கிறார். அவர்கள் நினைக்கிறார்கள்... அவர் அவர்கள் மீது கோபித்துக் கொள்ள முயற்சிக்கிறார் என்று அவன் நினைக்கிறான். அவர் உங்களை இங்கே ஊக்குவிக்கிறார், அங்கு உங்களை ஊக்குவிக்கிறார். அவர் சில சோதனைகளை வைக்கிறார்; அவர் உங்களுக்கு உதவ முயற்சிக்கிறார். 55. மேலும் வயதான தாய்க் கழுகு, அது அவைகளைச் சுற்றி சிறிதளவு அடித்து, உடனே தாமதமின்றி, அது தன் சிறகுகளில் அவைகளை ஏற்றிக்கொண்டது. அது பறந்து சென்றது. அப்படியாக மலைகள் வரைக்கும் சென்று, அங்குள்ள பசுமையான மேய்ச்சல் நிலத்தில் அமர்ந்தது. அது சிறகுகளை விரித்தது, சிறிய கழுகுக் குஞ்சுகள் அவற்றைப் பிடித்துக் கொண்டிருந்தன. அவைகள் அங்கே வெளியே வந்தன; அவைகள் இதற்கு முன் புல்வெளியில் இருந்ததில்லை. அவைகள் கிரீச்சிட்டுக் கொண்டும், ஓடிக் கொண்டும், தலைகீழாகப் பாய்ந்து கொண்டும், ஒன்றின் மீது இன்னொன்று உருண்டு விழவும் தொடங்கின. குஞ்சுகள், வெள்ளை தோற்றமளிக்கும் குஞ்சுகள், ஒன்றின் மீது ஒன்று உருண்டு விழுவதை, நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா? புல்லை அலகினால் கொத்திக்கொண்டு, என்ன ஒரு யூபிலியை கொண்டிருந்தன. நான் நினைத்தேன், "உங்களுக்குத் தெரியுமா, அது அவர்கள் கொண்டிருக்கும் ஒரு பழங்காலத்திய பரிசுத்த ஆவியின் கூட்டம் போல எனக்குத் தோன்றுகிறது. ஏன்", "ஆம், அந்தவிதமாகத்தான் நானும் செய்தேன்" என்றேன். அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. அந்த வயதான தாய்க் கழுகு தன்னுடைய பயணத்தை தொடங்கி பறந்து சென்று பிளவுகளுக்குப் அப்பால் இருந்த ஒரு மிகப்பெரும் கூர்மையான மலைக்குத் திரும்பியது. அது தன் இறகுகளை நிலைநிறுத்தி, தன் ஸ்தானத்தை எடுத்து, இப்படி பார்த்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அந்த சிறிய கழுகுக் குஞ்சுகள் கிரீச்சிட்டுக் கொண்டும், ஒன்றின்மீது இன்னொன்று கிழித்துக் கொண்டும் இருந்தன. ஒரு நல்ல பழைய பாணியிலான பரிசுத்த ஆவியின் கூட்டம் அப்படிதான் செல்லுமென்று நான் நினைத்தேன். இங்கே குதித்துக்கொண்டும், இங்கே கொத்திக்கொண்டும், அவைகளின் சிறிய கால்கள் மென்மையான புற்களின் மீது இருந்தன. அவைகள் அதற்கு முன் புல்வெளியில் இருந்ததில்லை; அவைகள் உயரே பழைய வாந்தி நிறைந்த கூட்டில் இருந்தன. 56. நீங்கள் எப்போதாவது ஒரு கழுகு கூட்டைச் சுற்றி இருந்திருப்பீர்களானால், ஓ. என்னே, அது ஒரு கோரமான காரியம். அங்கே உயரே, அருவருப்பான துர்நாற்றம் வீசின, பழைய நெரிஞ்சில்கள் மற்றும் பொருட்கள் இருந்தன. நான் நினைத்தேன், "அதேவிதமாகத்தான் என்னிடமும் இருந்தது. நான் பழைய விரும்பத்தகாத, வாந்தியினால் நிறைந்த உலகத்தில் இருந்தேன், மேலும் இயேசு ஒரு நாள் என்னை கட்டி வெளியே அழைத்து வந்து, என் கால்களை (அல்லேலூயா!) புல் படர்ந்த, மகிமையிலிருந்து வந்த மகிமையால் நிறைந்த கம்பளத்தின் மீது வைத்தார்". ஜனங்கள், ஏன், பேராயர் அல்லது சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி நான் கவலைப்படவில்லை, நான் எனக்கு ஒரு நல்ல நேரத்தை, சுதந்திரமாக கொண்டிருந்தேன். மேலும் நான் நினைத்தேன், 'அவைகளை எது இவ்வளவு சுதந்திரமாக ஆக்குகிறது? " உங்களுக்குத் தெரியுமா, எப்பொழுதாவது ஒரு முறை ஒவ்வொன்றும், அவைகள் தங்கள் சிறிய தலையைத் திருப்பும். நான் இருவிழித் தொலைநோக்கியில் பார்த்த போது அவைகள் என்னிடமிருந்து வெகு தொலைவில் இல்லை. அது அவைகளை என் பக்கத்தில் கொண்டுவந்தது. அவைகள் தங்கள் சிறிய தலையைத் திருப்பி பக்கவாட்டில் பார்த்தன. நான் நினைத்தேன், "அவைகள் எதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன?" பின்னர் அவைகள் தளர்வாகி, சற்றே கிரீச்சிட்டு, கிரீச்சிட்டு, கிரீச்சிட்டு கொண்டிருந்தன. நான் நினைத்தேன், உங்களுக்குத் தெரியுமா, இப்போது அந்த கூட்டத்தில் நுழையும் ஒரு ஓநாய்க்கு அது சரியான வேட்டையாக இருக்குமல்லவா? அவைகளால் பறக்க முடியாது; அவற்றின் சிறகுகள் மிகவும் சிறியவை" நான் நினைத்தேன், "ஆம், தேவனே, நான் பறக்க முயற்சிப்பேன்; சிலவேளைகளில் நான் அநேகமுறை சிறகடிக்க செய்கிறேன், ஆனால் என்னால் முடியவில்லை... இந்த நாட்களில் ஒன்றில் என் சிறகுகள் வளர்ந்து வெளிவரும்". அது சரி, சபை சிறகுகளை பெறும். 57. பின்பு, ஏன் அந்த சிறிய குஞ்சுகள் தலையை பக்கவாட்டில் வைத்து, அவைகளின் சிறிய கருப்புநிற கண்கள் அவ்வாறாக பார்ப்பதையும் நான் கவனித்தேன். அவைகள் உயரத்தில் தொலைவிலுள்ள தங்களுடைய தாயை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தன. அது ஒரு ஓநாய் வருமோவென உற்று கவனித்துக் கொண்டிருந்தது. என்ன சம்பவிக்கும் என்று கவனித்துக் கொண்டிருந்தது. சிறுவனே, என் இருதயம் உருகத் தொடங்குகிறது. நான் நினைத்தேன், ஆம், நம்மைப் பெற்றெடுத்த நம்முடைய தாயும் கூட, உலகின் பழைய கூட்டிலிருந்து நம்மை வெளியேற்றினார், அவர் மகிமையின் பாதுகாப்பு அரண்களில் (ramparts) ஏறிச்சென்று, மாட்சிமையில் உயரத்தில் அமர்ந்திருக்கிறார். அவருடைய கண் அடைக்கலான் குருவியின் மேல் இருக்கிறது, மேலும் அவர் என்னை கவனிக்கிறார் என்பதை நான் அறிவேன். உலகம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி எனக்கென்ன அக்கறை; இங்கு சுற்றி எந்த தீங்கும் இல்லை. தேவன் தம்முடைய சுதந்தரத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார். ஆமென். 58. ஜூன் மாதத்தின் முதல் பகுதியில், திடீரென்று வடபகுதிய பருவகாலம் தொடங்கியது, ஒரு புயல் வந்தது, அது வரும்போது அங்கே சிறிய மின்னல் கீற்றுகள் காணப்பட்டது. அந்த வயதான கழுகு மூக்கை உயர்த்தியபோது, அவைகள் விரைவாக வந்தன. மேலும் அது அலறல் விடுத்து, இதோ அது தரைக்கு வருகிறது, தன் சிறகுகளை இப்படியாக விரைந்து நீட்டி, வீறிட்டு அலறியது (squall). அது அதைச் செய்ததும், கழுகு குஞ்சுகள் ஒவ்வொன்றும் அதனதன் ஸ்தானத்தை அறிந்தன. ஓ, என்னே. ஒவ்வொன்றும் நேராக சிறகை நோக்கி ஓடின. அந்த சிறகுகள் எதற்காகவென்று அவைகள் அறிந்திருந்தன, ஏனெனில் அவைகள் அதற்கு முன் அதில் பயணித்திருந்தன. ஒவ்வொரு மனிதனும், பரிசுத்த ஆவியானவர் காலத்தின் முடிவில் வரும்போது, அதன் அர்த்தம் என்னவென்று சரியாகத் தெரிந்துகொள்வார்கள்; அவன் முன்பே அங்கு இருந்துள்ளான். அவன் தன் சிறிய பாதங்களைச் சிறகுகளுக்குள் பிடித்து கொண்டு, அதனுடைய சிறிய அலகை மடித்து வைத்து கொண்டு, ஒரு பருத்த வலுவான சிறகைப் பிடித்துக் கொண்டான், மேலும் அந்த வயதான தாய்க் கழுகு அவைகளை சிறகுகளில் சுமந்துகொண்டு சற்று துடித்து, அது அந்த காற்றில் மேல் எழும்பி, அந்தப் பாறையில் இருந்த துளையை நோக்கித் தன் முகத்தை நேராக வைத்தது. அங்கு மணிக்கு ஐம்பது மைல் வேகத்தில் அதனுடாக வீசும் அந்தக் காற்றில், ஒருவேளை, அது காற்றில் மேல் எழும்பி, நேராக பாறைகளுக்குள் பாதுகாப்பாகச் சென்றது. 59. நான் சொன்னேன், "ஓ, அன்புள்ள தேவனே, நாம் கொண்டிருக்கும் இந்த மகத்தான ஜூபிலியில் என்றாவது ஒரு நாளில், இயேசு வருவார், நாம் சிலுவையின் சிறகுகளைப் பிடித்துக்கொண்டு, அங்கிருந்து பாதுகாப்பாக தொலைவிலுள்ள பாறையில் இருக்கும் துளையினுக்கு பறந்து சென்று, என்றென்றைக்குமாய் பாதுகாப்பாய் இருப்போம்." அல்லேலூயா, அவர் கழுகுகளின் செட்டைகளின்மேல் உங்களை கூட்டிச் செல்வார். இன்றிரவு அவர் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். சற்றே நல்ல ஒரு தருணத்தை கொண்டிருங்கள். அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டுமென அவர் விரும்புகிறார். சந்தோஷமாக இருங்கள். மிகவும் சோகமான ஏமாற்றமடைந்த முகத்தோடு செல்ல வேண்டாம், சந்தோஷமாக இருங்கள். ஆவியில் களிகூருங்கள். "கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை." கிறிஸ்து இயேசுவுக்குட் பட்டவர்களாயிருந்து பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை."அவர்கள் பறந்து செல்வார்கள். சரி, இப்பொழுது சற்று சீக்கிரம், நாம் செய்தியை முடிவுக்கு கொண்டு வர விரைவுபடுத்த வேண்டும்; நமக்கு தாமதமாகிவிட்டது. கவனியுங்கள், ஊழியக்காரர்களின் காலை உணவு கூட்டத்திற்கு (ministerial breakfast), நாங்கள் நாளை அதிகாலையில் எழும்ப வேண்டும் 60. நினைத்துப் பாருங்கள், பிறகு அவர்கள் பாதையில் வருகிறார்கள். நீங்கள் அறியவேண்டிய முதல் காரியம், அவர்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாக எல்லாவற்றையும் மறந்து குற்றங்கூறினார்கள். அது சற்றே மனிதனுக்குரியதல்லவா, அந்த விதமாகவே சபையும் செய்கிறதல்லவா? முதல் மகிமையை பற்றின எல்லாவற்றையும் மறந்து அவர்கள் குற்றங்கூற துவங்கினார்கள். தேவன் அவர்களுக்கு ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டியதாயிருந்தது. பாம்புகள் அவர்களுக்கு முன் வந்து அவர்களை கடிக்கத் தொடங்கியது. அவர்கள் அனைவரும் கடிக்கப்பட்டு, அவர்களில் அநேகர் உயிரிழந்தனர். மேலும் மோசே இடைபட்டுப் பரிந்துபேசினான், தேவன் மோசேயைகொண்டு வெண்கல சர்ப்பத்தை செய்வித்து, மோசே அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான். சகோதரனே, ஓ, அதிலிருந்து தங்கக்கட்டிகளைத் தோண்டி எடுக்க நமக்கு நேரம் கிடைக்க விரும்புகிறேன். ஓ, என்னே. பின்பு மறுபடியுமாக அவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டது, மோசே கோலை எடுத்துக்கொண்டு போய் அந்தக் கன்மலையை அடித்தான். அவன் அந்தக் கன்மலையை அடித்தபோது, அதிலிருந்து தண்ணீர் புறப்பட்டது, யோவான் 3:16-க்கு மிக அழகான முன்னடையாளம். கிறிஸ்துவே அந்த கன்மலை. ஜனங்கள் தண்ணீருக்காக மடிந்து கொண்டிருந்தார்கள், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் ஆவியையும், ஜீவ தண்ணீர்களையும் குறிக்கிறது), நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." 61. கவனியுங்கள், அது மோசேயின் கோல் அல்ல; அது தேவனின் நியாயத்தீர்ப்புக் கோல். அதைக்கொண்டுதான் அவர் எகிப்தின் மீதான நியாயத்தீர்ப்பை கொண்டு வந்தார். அவர் நியாயத்தீர்ப்பை கொண்டு வந்தார்.. மேலும் கவனிக்கவும், கன்மலையை அடித்த அது நியாயத்தீர்ப்பின் கோல். மேலும் அது தேவனுடைய நியாயத்தீர்ப்புகளாக இருந்தது, "அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்"அது கிறிஸ்துவை அடித்தது. மரணம், கிறிஸ்துவை அடித்தது, தேவனுடைய நியாயத்தீர்ப்பு, அழிந்துகொண்டிருந்த ஜனங்களுக்கு ஜீவனைக் கொடுத்தது. எவ்வளவு அழகாயுள்ளது, அதை மறந்துவிடாதே. மேலும் இங்கே இன்னுமொரு காரியம். ஒரு முறை அவர்களுக்கு சாப்பிட ஏதோ ஒன்று தேவைப்பட்டது. கன்மலையில் தண்ணீர் இருப்பதைக் கண்ட அவர்கள், அங்கு சென்று பார்த்தபோது, அங்கு தேனீக்கள் தேன் கூடு கட்டியிருப்பதையும், கன்மலையில் தேன் இருப்பதையும் கண்டறிந்தனர். கன்மலையண்டைக்கு விரைவாக ஓடுங்கள். அவர்கள் காதேஸ்பர்னேயாவுக்கு வந்தனர். சுகமாக்கப்படுதலுக்கான ஒரு ஜெபவரிசைக்காக, நாம் இப்போது ஆராதனையை முடிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். கவனியுங்கள், அவர்கள் காதேஸ்பர்னேயாவுக்கு வந்தார்கள். ஒருவேளை நாளை இரவு நாம் அதன் பொருளை இங்கிருந்து எடுத்தால், அதனுடன் இன்னும் சற்று தொடர்ந்து சென்று, ஜனங்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கொண்டுவந்து, அவர்களுடைய ஸ்தானத்தில் வைப்போம். 62. கவனியுங்கள், அவர்கள் காதேஸ்பர்னேயாவுக்கு வந்தார்கள், மேலும் காதேஸ் பர்னேயா ஒரு சமயத்தில் உலகத்தினுடைய நியாயத்தீர்ப்பின் ஆசனமாக இருந்தது அந்த இடத்தில் ஒரு மகத்தான பெரிய கிணறும், பெரிய நீரூற்றுகளும் இருந்தன. மேலும் அநேக சிறிய நீரூற்றுகள் வனாந்தரத்தில் பனைத்தோப்பு போன்று அதிலிருந்தும் வெளிப்பட்டன. என்ன ஒரு அழகான இடம், ஒரு முன்னடையாளம், தேவனுடைய மகத்தான நியாயாசனம் - பரலோகத்தில் அங்கே தேவனுடைய வார்த்தை ஒரு நியாயப்பிரமாணப் புத்தகமாகவும் மற்றும் பரலோகத்தின் வெள்ளை சிங்காசனத்தில் நியாயத்தீர்ப்பும் இருக்கும். ஒவ்வொரு சிறிய நீரூற்றும் ஒரு சபையை பிரதிநிதித்துவப்படுத்தியது, அங்கிருந்துதான் நியாயத் தீர்ப்பு பிரசங்கிக்கப்பட்டு, தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் புறப்பட்டுச் செல்கின்றன. மேலும் அவர்கள் அங்கு வந்தபோது, அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தின் எல்லையில் இருந்தார்கள். அல்லேலூயா! எல்லையில், அங்குதான் அவர்கள் பெரிய தவறொன்றை செய்தனர். அவர்கள் எல்லையில் நின்றனர். நான் இன்றிரவு இதை உங்களுக்குச் சொல்லட்டும், என் சகோதர திருச்சபைக் குருமார்களே; உங்களை பழிக்கும் படி அல்ல, நான் உங்களை நேசிக்கிறேன், அது உங்களுக்குத் தெரியும். ஆனால் இன்று அநேக எல்லைக் கோட்டு பிரசங்கிமார்கள் இருக்கிறார்கள். ஆமென். எல்லையிலேயே தரித்திருப்பது, தேவன் உங்களை எல்லையில் இருக்க விரும்பவில்லை. கடந்து செல்லுங்கள். ஆமென். வாக்குத்தத்தம் அதற்கு அப்பால் உள்ளது. 63. எனவே அவர்கள் சில வேவுகாரர்களை அனுப்பினார்கள், ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் பன்னிரண்டு பேரை கடந்துபோகச் செய்தனர். அவர்கள் திரும்பி வந்தபோது, எத்தகைய ஒரு செய்தி! அவர்களில் பத்து பேர், "நம்மால் அதை செய்யவே முடியாது; நம்மால் அதை செய்யவே முடியாது என்றனர். ஓ, என்னே, மிகப்பெரிய எதிர்ப்பு உள்ளது." ஆனால் அங்கே நின்ற சற்று வயதுசென்ற காலேபும் யோசுவாவும், "நம்மால் அதை செய்ய முடியும்" என்றார்கள். ஆமென். "ஓ, மதில்கள் உயரமாக இருக்கிறது. அது ண்மைதான். அவர்கள் அரணிப்பான ஜனங்கள், அவர்கள் நம்மைப் பார்ப்பதற்கு வெட்டுக்கிளிகளைப் போல் இருக்கும் அளவிற்கு மிகப் பெரியவர்களாய் இருந்தனர், அது உண்மைதான்." ஆனால் நீங்கள் பாருங்கள், அவர்களில் பத்து பேர் வேதாகம கல்லூரியில் பயின்ற வேத பண்டிதர்கள். அவர்கள் அறிவுப்பூர்வமாக என்ன பார்க்க முடியும் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் காலேபும் யோசுவாவும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை நோக்கிக் கொண்டிருந்தார்கள். "அதை உனக்கு ஏற்கனவே கொடுத்து விட்டேன்; போய் அதை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்" என்று தேவன் கூறினார். அல்லேலூயா! 64. அதுதான் இன்றிரவு தெய்வீக சுகமளித்தல் மற்றும் எல்லாவற்றிலும் ஜனங்களிடம் காணப்படும் காரியமாகும். அது உங்களுடையதாக இருக்கிறது, போய் அதை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். அல்லேலூயா! சகோதரர்களே, நீங்கள் நடக்க தேவன் உங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார், நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? நீங்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். தேவன் உமக்கு ஜீவனை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். சகோதரனே; நீர் அதை விசுவாசிக்கின்றீரா? அதை எடுத்துக்கொள்ளுங்கள். தேவன் மகிழ்ச்சியை உமக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார், சகோதரனே, நீர் அதை விசுவாசிக்கின்றீரா? அதை எடுத்துக் கொள்ளும். தேவன், "நான் அதை உங்களுக்குத் தருகிறேன். அது உங்களுடையதாக இருக்கிறது" என்று கூறினார். இப்போது தேவன் சென்று எல்லா காரியங்களையும் செய்வதுச் சரியாக இருக்காது. அவர் அவர்களுக்கு அந்த தேசத்தைக் கொடுத்தார்; அவர்கள்தான் சுத்தம் செய்ய வேண்டும். ஆமென். அது உங்களுடையதாக இருக்கிறது, ஆனால் அவர் வந்து அதை உங்களிடம் வலுக்கட்டாயமாக திணிக்கப் போவதில்லை. தேசத்தை நீங்களே எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் அதை உங்களுக்குக் கொடுத்தார், மேலும் அது உங்களுடையதாக இருக்கிறது; எழுந்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். அல்லேலூயா! அது உங்களுடைய தெரிந்து கொள்ளுதல். மற்ற பத்து பேரைப் போலவே நீங்களும் முறுமுறுக்க விரும்பினால், நீங்கள் இன்னும் நீண்ட காலம் வனாந்தரத்தில் அலைந்து திரிவீர்கள், நாளை இரவு வரை, இன்னும் சுகவீனமாக இருப்பீர்கள். ஆனால் இன்றிரவு அதை பெற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருந்தால், அது உங்களுடையதாக இருக்கிறது. நீங்கள் என்ன மாதிரியான தெரிந்து கொள்ளுதலை செய்யப் போகிறீர்கள்? நான் இயேசுவையும் அவருடைய வாக்குத்தத்தத்தையும் எடுத்துக்கொண்டு, பிசாசிடம் அவன் ஒரு பொய்யன் என்று சொல்வேன். ஆமென். 65. தேவன் "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்று கூறினார். யோசுவா "இது ஒரு நல்ல தேசம்" என்றான். "இது ஒரு அற்புதமான தேசம்". யோசுவாவும், நீங்களும் மற்றும் காலேபும், இது ஒரு அற்புதமான தேசம் என்று சந்தோஷப்படுகிறீர்கள் அல்லவா? நான் சந்தோஷப்படுகிறேன். ஆமென். யோசுவாவும் காலேபும் அங்கே ஏதோ ஓரிடத்திற்கு சென்றிந்தனர் என்பதற்கான சில ஆரம்ப ஆதாரங்களைக் கொண்டு வந்தனர். நான் இன்றிரவு சபையில் சாட்சிகளைப் பெற்றிருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், எங்கோ சென்றிருந்து, ஏதோ ஒன்றைப் பெற்றிருந்து, பெந்தெகொஸ்தே நாளின்போது இறங்கிய பரிசுத்த ஆவியானவர் இன்றிரவும் மாறாதவராயிருக்கிறார் என்ற ஆதாரங்களோடு திரும்பி வந்தனர். அல்லேலூயா! உங்கள் தெரிந்து கொள்ளுதலைச் செய்யுங்கள். "நல்லது, எங்களால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது, நாங்கள் வெஸ்லியின் காலத்தினுடாக வந்தோம்; நாங்கள் இதினுடாக வந்தோம், ஆனால் மற்றொரு மதபேதத்திற்காக எங்களால் ஒருபோதும் நிற்க முடியாது; எங்களால் ஒருபோதும் நிற்க முடியாது" என்று கூறும் வேதாகம கல்லூரி பயின்ற வேத பண்டிதர்களோடு நிற்கப் போகின்றீர்களா. இது போன்ற காரியங்களை விட்டு விலகியிருங்கள். இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று தேவன் சொன்னார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். அதை நாம் எடுத்துக் கொள்ளலாம்; அது நம்முடையது; நம்மால் முடியும். மகிமை! அல்லேலூயா! இன்றிரவு நமக்குத் தேவைப்படுவது அதைச் செய்வதுதான். அல்லேலூயா! அது உங்களுடையது, வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், சிகாகோவில் உள்ளவர்களுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் யாவருக்கும் உண்டாயிருக்கிறது. தெரிந்துகொள்ளும் சுயாதீனம். எனக்கு அவர் மாறாதவர். எனக்கு அவர் வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொள்வார். எனக்கு - என்னுடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, என்னுடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; எனக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமானேன். அல்லேலூயா! 66. நான் விசுவாசிக்கிறேன். அல்லேலூயா! நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? இப்போது அது உங்கள் தெரிந்துகொள்ளுதல். நாம் தேசத்தின் எல்லையில் இருக்கிறோம். நாம் பல ஆபத்தான பாடுகள் மற்றும் கண்ணிகளை கடந்து வந்துள்ளோம். நான் ஏற்கனவே வந்திருக்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்ட பழைய வேதாகமத்தை பின்பற்றி, கிருபைதான் என்னை இவ்வளவு தூரம் பாதுகாப்பாகக் கொண்டு வந்தது. கிருபையே என்னை மேலும் கொண்டு செல்லும். ஆமென். இன்றிரவு நாம் தேசத்தின் எல்லையில் இருக்கிறோம், இது ஒரு வாக்குத்தத்தம். வேதாகமம் கூறுகிறது, "நீ எல்லாவற்றிலும் வாழ்ந்துசுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்." அது உங்களுடையதாக இருக்கிறது. தேவன் அதை வாக்குத்தத்தம் செய்தார். உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தம் இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்ததை போலவே இருக்கிறது. அவர், "அந்த தேசத்தை நான் உங்களுக்குக் கொடுத்தேன். நான் என் தூதனை அனுப்புவேன், இந்த அக்கினி ஸ்தம்பம், உங்களை அந்த இடத்திற்கு வழிநடத்த உங்களுக்கு முன்பாக செல்லும்" என்றார். தெய்வீக சுகமளித்தல் உங்களுடையதாக இருக்கிறது, தேவன் அதை உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்தார். அவர் அனுப்பிய பரிசுத்த ஆவியானவர், உங்களை இந்த இடத்திற்கு வழிநடத்தினார். அதை எடுத்துக் கொள்வோம். ஆமென்! அது நம்முடையது. 67. இஸ்ரவேலுக்கு வாக்குத்தத்தம் செய்த அதே தேவன், உங்களுக்கும் செய்தார், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் அதே அடையாளங்களையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் அனுப்புகிறார். இப்போது, அவர் வந்து அதை உங்களுக்குள் புகுத்தப் போவதில்லை. நீங்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அதை உரிமைகோரியவுடன், அங்கே ஒரு பழைய எமோரியன் நிற்பான்; அவனை உதைத்து வழியிலிருந்து வெளியேற்றுங்கள். பழையவன், "இப்போது, ஒரு நிமிஷம் பொறு; நீ உணர்ச்சிவசப்படுகிறாய்." எனக்கூறலாம். அது ஒரு பழைய நபர். இப்போது, அவனை உதைத்து வழியிலிருந்து வெளியேற்றுங்கள். நீங்கள் சிறு குழந்தையை கையிலெடுக்கும்போது, அவன் சொல்கிறான்... "நல்லது," உங்கள் தாயார் கூறலாம், "நல்லது, அவன் அவ்வளவு அளவுகடந்த அழகாயிருக்கிறான், நான்.... அவன் அவனது தகப்பனைப் போன்றே இருப்பான்." என்று. அவனை உதைத்து வெளியே தள்ளுங்கள். இந்த தேசம் உங்களுக்கு உரியதாயிருக்கிறது. "நல்லது, டாக்டர் இன்னார் இன்னார் அப்படிப்பட்ட நேர்த்திமிக்க ஜெபத்தை ஏறெடுக்கலாம்." அது எந்தவித வித்தியாசத்தையும் உண்டுபண்ணுவதில்லை; தேவன் உங்களுக்கு வாக்குத்தத்தம் கொடுத்துள்ளார். அவிசுவாசி தேவனுடைய வார்த்தைக்கு எதிராக இருந்தால், அதை உதைத்து வழியிலிருந்து வெளியேற்றுங்கள். வாக்குத்தத்தம் உங்களுடையது, அல்லேலூயா! 68. அது பார்ப்பதற்கு எவ்வகையில் குற்றமில்லாமலும் கண்ணுக்கினியதாக இருந்தாலும் கவலையில்லை. நீங்கள் கூர் கோபுரங்களையும், மற்றும் தேவாலயங்களையும் கொண்டிருக்கலாம். மேலும் ஒரு மரிக்க போகின்ற கன்றுக்குட்டியைப் போல "ஆ-மென்" என்று சொல்லலாம், ஆனால் அது தேவனுடைய வார்த்தையை மாற்றாது நம்மால் அதை எடுத்துக்கொள்ள முடியும் என்று தேவன் சொன்னார். அது உங்களுடையதாக இருக்கிறது. வாக்குத்தத்தம் நம்முடையது. அல்லேலூயா. ஓ, நான் பக்தியுணர்வு அடைகிறேன். என்னே! பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இஸ்ரவேல் புத்திரரை வனாந்தரத்தினுடாக வழிநடத்தி, அவர்களோடு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்ற, அதே அக்கினி ஸ்தம்பம், இங்கே இன்றிரவு அவர் நம்முடன் இருக்கிறார், மீண்டும் மீண்டுமாக எடுக்கப்பட்ட அவரது படமும் கூட, அதே அடையாளங்களையும் அதிசயங்களையும் காட்டுகிறது. நாம் எதைக் குறித்து பயப்படுகிறோம்? விசுவாசத்தினால். ஒன்றிற்கும் கவலைப்படாமல், நான் காலேபை போல உணர்கிறேன், நான் அந்த கூட்டத்தை அவ்விடத்தில் பெற்றுக் கொள்ளட்டும். ஆமென். 69. "ஓ, அவர்கள் மிகவும் பெரியவர்களாக இருக்கிறார்கள்" என்றார்கள். அது எந்தவித வித்தியாசத்தையும் உண்டு பண்ணுவதில்லை. கோலியாத்தும் கூட அவனுடைய தற்பெருமையினால் கொதித்திருப்பான், ஆனால் ஒரு நாள் அவனும் ஒரு தாவீதை சந்தித்தான். ஆமென், "அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன" என்று பிசாசு சொல்லி, பிரசங்கிமார்களுக்குள் நுழைந்து, அதை நாடெங்கும் பிரசங்கித்தான், ஆனால் சமீபத்தில் ஒரு தாவீது எழுந்தான். ஆமென். இப்போது அவனுடைய தலை துண்டிக்கப்பட்டது, மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், இஸ்ரவேலின் இராணுவம் வடக்கிலிருந்து மேற்காக அதை தாக்குகிறது, கிழக்கிலிலும் தெற்கிலும், மற்ற எல்லா இடங்களிலும், உலகெங்கிலும் நடக்கும் மகத்தான சுகமளிக்கும் கூட்டங்கள் இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார், அவர் ஒரு சுகமளிப்பவர் என்பதை நிரூபிக்கிறது. அல்லேலூயா! பரிசுத்த ஆவியானவரே நம்முடைய தாவீது ஆவார். ஆமென். அவர்தான் இந்தக் குழுவின் தலைவர்; நாம் அவரை விசுவாசிக்கிறோம். நாம் தலைகளை தாழ்த்தியவாறு ஒரு நிமிடம் அவரிடம் பேசுவோம். 70. "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது, அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள் என்றுரைத்த பிதாவே. இந்த உலகமானது காணக் கூடாதவைகளினாலே உருவாக்கப் பட்டிருக்கிறது," என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எப்படியாக தேவன், இங்கே ஒரு பூமி கூட இருப்பதற்கு முன்பு, வார்த்தையைப் பேசி, தேவன் சொன்னதால் மண், சேறு, பாறைகள் மற்றும் துருக்கள் உண்டானது. அவருடைய வார்த்தை அவரது உதடுகளிலிருந்து பறப்பதையும், அங்கே அந்த இருளினுடாக செல்வதையும், அணுக்கள் உடையத் தொடங்குவதையும், உலகம் உண்டாவதையும் என்னால் காண முடிகிறது. அதே தேவன் தாமே அங்கே கல்வாரியின் சிலுவையில் தொங்கி மரித்தார்: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, அவருடைய தழும்புகளால் குணமாணோம்." தேவனே, இந்தக் கட்டிடத்தில் இருக்கும் ஒவ்வொரு சந்தேகத்தின் பிசாசையும் கடிந்து கொள்கிறோம். இன்றிரவு அந்த நிழலை அகற்றிவிட்டு, ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இயேசு தங்களை சுகமாக்கப்போகிறார் என்று தங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்து இங்கே வருவார்களாக. இயேசு அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்பதையும், வாக்குத்தத்திற்கு அவர் உண்மையுள்ளவர் என்பதையும் அறிந்து, அவர்கள் இன்றிரவு ஆகாயத்தை நோக்கியவாறு தங்களுடைய கரங்களை உயர்த்தி, சத்தமிட்டு, தேவனைத் துதித்து இந்த மேடையை விட்டு வெளியேறுவார்களாக. இதை அங்கீகரியும் பிதாவே, அந்தகாரத்தையும் சந்தேகத்தையும் நீக்கி, பரிசுத்த ஆவி உங்களை முற்றிலும் ஆளுகை செய்வாராக. ஒவ்வொருவரையும் சுகமாக்கவும், ஒவ்வொருவரையும் இரட்சிக்கவும், அதை கிறிஸ்துவின் நாமத்தினாலே நாங்கள் கேட்கிறோம். ஆமென். 71. இன்றிரவு இது ஒரு முன்கண்டறியாத காரியம். நான் இதை முதல் முறையாக செய்து நீண்ட காலமாகிவிட்டது அதாவது, ஆவியை பகுத்தறியாமல் இங்கே வந்து வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க முயற்சிக்க போகிறேன். நான் முயற்சிக்கிறேன். எத்தனை பேர்.... அவர்களிடம் ஜெப அட்டை I மற்றும் K அல்லது I மற்றும் J ) இருப்பதாக பில்லி கூறியதை நான் நம்புகிறேன்? (அது என்ன? 1 மற்றும் K அல்லது J ? I மற்றும் K . நீங்கள் முதலில் கொடுத்தது எது? I- யா) எத்தனை பேர் ஜெப அட்டை I-யை வைத்துள்ளீர்கள்? கரங்களை உயர்த்துங்கள். I. சரி. (அப்படியானால் எது வரைக்கும் கூப்பிட்டி ருந்தோம்?) சரி. நாங்கள் கூப்பிடுவோம்.. வெறுமனே கூறினேன்...நாம் ஒரே நேரத்தில் சிலரைக் கூப்பிடலாம். நான் உங்களுக்கு சொல்கிறேன். யார் 1- ஐ வைத்துள்ளீர்கள், எண் 1? யாரிடமாவது எண் 1 இருக்கிறதா? எண் 2? 10 கிடைத்ததா? I - 10? 1 - 15? 1- 15?, 1 - 20?, 1-1... சகோதரியே, உங்களுடைய எண் என்ன? 1-ஐ வைத்துள்ளீர்களா? என்ன 47? சரி, நாம் அப்போது அதற்கு மேலே கூட சென்றிருக்கலாம். 1 - 40? 1 நாற்பது யாராவது வைத்துள்ளீர்களா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அந்த வரிசையில் நாம் எவ்வளவு தூரம் மேலே சென்றிருந்தோம்? நாங்கள் அவர்களுக்காக ஒரு வாரமாக இங்கு ஜெபம் செய்து வருகிறோம். யாரிடமாவது I 40 இருந்தால் கரங்களை உயர்த்துங்கள். அங்கே இருக்கும் சகோதரனே அதை பெற்றுள்ளீர்களா? உங்கள் ஜெப அட்டை எண் 1 - 40? நல்லது பாருங்கள், 1 - வரிசையை வைத்துள்ளவர்கள் குறைவான இலக்கங்களிலிருந்து முதலில் தொடங்கட்டும், வாயில்காப்போர், சகோதரன் உட், நீங்கள் அங்கு சென்று எனக்கு உதவ முடியுமா? ஜெப அட்டைகள் 1 வரிசை உள்ளவர்கள், இங்கே வரிசையாக நிற்கவும். இப்போது நாம் வரும்போது 1 - வரிசை ஜெப அட்டைகளோடு மட்டும் வருவோம். சரி சகோதரனே, "நம்பிடுவாய்" என்று பாடுவோம். ஆனால் "நம்பிடுவாய்" என்று பாட வேண்டாம். "இப்போது நான் விசுவாசிக்கிறேன்" என்று பாடுவோம். இப்போது எத்தனை பேர் விசுவாசிக்கின்றீர்கள்? சரி, எல்லோரும் சேர்ந்து, நீங்கள் விரும்பினால், இப்போது நான் விசுவாசிக்கிறேன், ஓ, இப்போது நான் விசுவாசிக்கிறேன், யாவும் கைகூடிடும், இப்போது நான் விசுவாசிக்கிறேன்; ஓ, இப்போது நான் விசுவாசிக்கிறேன்... (? உங்களுக்கு நாற்காலிகள் கிடைத்ததா...?... சரி, அவள் எங்கே இருக்கிறாள்? சரி. நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள்? அவர்களை அங்கே பக்கவாட்டை சுற்றி வரிசைப்படுத்துகின்றீர்களா...?... தொடர்ந்து சென்று அதை அதையெல்லாம் அங்கே முடிந்த அளவிற்கு எல்லாரையும் வரிசைப்படுத்துங்கள்.) 72. இப்போது, கிறிஸ்தவர்களே, அவர்கள் ஜனங்களை வரிசைப்படுத்திக் கொண்டிருக்கையில், ஒவ்வொருவரும் அவரவர் இலக்கங்களுக்கேற்ப, அவர்களைத் தங்கள் இடத்திற்கு கொண்டு வந்து, மேடைக்கு வர முயற்சிக்கும்போது, உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். சுகப்படுத்த என்னில் எதுவும் இல்லை; உங்களுக்கு அது தெரியும். ஆனால் சுமார் பத்து வருடங்கள் அமெரிக்காவில் கடந்த பிறகு, ஒவ்வொரு இரவிலும், தேவனின் இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையின் செயல்பாட்டைக் கண்டு, தேவன் சுகப்படுத்துகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். விசுவாசிக்கவில்லையா? மேலும் அந்த தேவதூதன், நாம், இங்கே, மற்றொரு இரவு, ஜெர்மன் கேமராக்கள் கூட அதை படம்பிடித்து காட்டியது, அது இங்கே உள்ளது, இங்கே, அது உறுதிகூறப்பட்டது, அது அடையாளங்களையும், அதிசயங்களையும் மற்றும் அற்புதங்களையும் செய்கிறது, அவைகள் தேவனால் உண்டானதென்றும், அது தேவனால் ஆனதென்று நிரூபிக்கப்பட்டதும், தேவனின் பிரிக்க முடியாத உண்மையாய் இருக்கிறது என்றும் நாம் அறிந்திருக்கிறோம். இன்றிரவு, நான் சுயாதீனமாக விஷயங்களை மதிப்பிடும் மற்றும் தொடங்கும் பாகத்தை எடுத்து, தேவனுடைய வேதாகமத்தின் தகுதியாக்கிய பண்புகளால், முதலாவதாக இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலும், மற்றும் என்னிடம் வந்து "ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்தால், நீ உத்தமத்தோடு ஜெபித்தால், ஜெபத்திற்கு முன்பாக ஒன்றுமே நிற்காது" என்று கூறிய ஒரு தேவதூதனின் சாட்சியினாலும் உரிமை கோருகிறேன். அதை சிகாகோவிலிருந்து தொடங்கி, தேவதூதன் எனக்குக் கொடுத்த அதே செய்திக்கு நான் மீண்டும் செல்கிறேன். நான் பத்தில், ஒரு சுகப்படுத்துதலை கொண்டுள்ளேன். என்னால் முடியாது. நான் பார்க்கும்போது... இப்போது ஜெர்மன் மக்கள், சுவிஸ், ஆப்பிரிக்கர்கள், சரியாக நின்று அவர்கள் அதைப் பெற முடியும். ஆனால் அமெரிக்க மக்களால் அதை எண்ணிப்பார்க்க முடியாது, அவ்வளவுதான். அவர்களால் அதைப் முடியாது. அவர்கள் மேல் கைகள் வைக்கப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் அதை எனக்குத் தெரியப்படுத்தினார். எனவே நீங்கள் விசுவாசித்தால்... கவனியுங்கள், ஜெப வரிசையில் நின்று கொண்டு, நீங்கள் இதை விசுவாசிக்கவில்லை என்றால், வரிசையில் நிற்க வேண்டாம், சற்று வெளியே செல்லுங்கள். இயேசு கிறிஸ்து என்னை அனுப்பினார் என்றும், மேலும் அந்த அடையாளங்களையும் நீங்கள் விசுவாசித்தால்... இந்த கூட்டத்தில் இருக்கும் நீங்கள் எத்தனை பேர் ஆவியை பகுத்தறிதலை பார்த்திருக்கிறீர்கள். ஜெப வரிசையிலுள்ள நீங்கள், உங்கள் கையை உயர்த்துங்கள். சரி. இப்போது நீங்கள் அதை பார்த்திருந்தால், நீங்கள் அதை விசுவாசித்து, அது தேவனிடமிருந்து வந்தது என்று விசுவாசித்து, நினைவில் கொள்ளுங்கள், பத்து ஆண்டுகளுக்கு முன் நான் கூறிய அதே ஒன்று, பத்து ஆண்டுகளுக்கு முன் முன்னறிவித்த அதே ஒன்று, இன்றும் அது முற்றிலும் அதேவிதமாக தான் காரியங்கள் நடக்க போகின்றன,. அந்த ஒருவர் சொன்னார், "நீ வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க பிறந்தாய்; நீ அவர்களுக்காக ஜெபம் செய்து, உத்தமமாய் இருந்து, அவர்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்தால், ஜெபத்திற்கு முன்பாக ஒன்றுமே நிற்காது." பாருங்கள், நான் அதை வேறுவிதமாக செய்தேன், நான் திருப்பினேன், ஏனென்றால் எல்லா ஜனங்களும் இயற்கைக்கு மேம்பட்டதைக் காண அணிதிரண்டதால், நான் எல்லாவற்றையும் இயற்கைக்கு மேம்பட்டதாகவே வைத்துவிட்டேன். பரிசுத்த ஆவியானவர், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, மற்றொரு நாள் காட்டில் என்னுடன் பேசி. "அந்த ஜனங்களுக்காக ஜெபி. நான் செய்ய சொன்னதை நீ செய்யவில்லை" என்றார். தேவனே இப்போது கவனித்துக் கொண்டிருப்பவரே, பரலோக பிதாவே, இரண்டு வாரங்களுக்கு முன்பு, சாலேமிலிருந்து ஐந்து மைல் தொலைவில், சீயோன் மலைக்கு அருகில், சாலை எண் 153ல், காட்டில் என்னுடன் பேசிய சத்தத்திற்கு பதிலளிக்கும்விதமாக, இன்றிரவு இதைத்தான் நான் செய்கிறேன், இன்றிரவு நான் கைகளை வைத்து ஜெபிக்கும் ஒவ்வொருவரையும் நீர் ஆசீர்வதிக்க, நான் இப்போது உம்மிடம் என்னை ஒப்படைக்கிறேன். நாளை இரவு அவர்கள் இங்கே திரும்பவும் வந்து, சகோதரன் போஸேவிடமும் மற்றவர்களிடமும் வியாதி நீங்கியது என்று சாட்சி சொல்லுவார்களாக. கர்த்தாவே, அது உம்முடைய ஊழியக்காரனின் இருதயத்தை உற்சாகப்படுத்தும். மேலும் ஒவ்வொரு ஆராதனையிலும், அதைச் செய்ய நீர் எனக்கு பெலன் தருவீரானால், வருகிற ஒவ்வொருவருக்காகவும் நான் ஜெபிப்பேன். இயேசுவின் நாமத்தில். ஆமென். 73. நல்லது, ஸ்திரீயே, இயேசு உன்னை சுகப்படுத்துவார் என்று நீ விசுவாசிக்கின்றாயா? அதை முழு இருதயத்துடன் செய்கின்றாயா? உன்னிடம் என்ன கோளாறு இருக்கிறதென்பதை, நான் உன்னிடம் எதுவும் கூற வேண்டியதில்லை, வெறுமனே கேள், நான் சத்தியத்தை சொன்னேன் என்று நீ விசுவாசி. ஒரு நிமிடம் இங்கே வரவும். இப்பொழுது எங்கள் இரக்கமுள்ள பரலோகப் பிதாவே, நான் இங்கே எங்களுடைய சகோதரியின் மேல் கைகளை வைத்து, அவள் குணமடையும்படி கேட்டுக்கொள்கிறேன். பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதம் இங்கே இருக்கையில், அந்த ஸ்திரீ என்ன கேட்டாளோ அவள் அதைப் பெற்றுக்கொள்வாளாக. அவள்மேல் கைகளை வைக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென். இப்பொழுது நாளை இரவு நீ வந்து சகோதரன் போஸேயிடம் சாட்சியமளிக்கவும் என்ன நடந்ததென்பதை அவரிடம் கூறுவும் நான் விரும்புகிறேன். சகோதரியே, நீ வருவாயா? இப்பொழுது நீ உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கின்றாயா? நான் உனக்காக எதையாவது செய்யக் கூடுமானால், நான் அதைச் செய்வேன். ஒரு ஊழியக்காரனாய் எனக்குத் தெரிந்த ஒரே காரியம், உனக்காக ஜெபம் செய்வது மட்டுமே. தேவன் உன்னை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கின்றாயா? நீ காட்டக்கூடிய ஏதாவது சம்பவிக்கக் கூடுமானால் மகிழ்ச்சியடைவாயா, இந்த காரியங்களைச் செய்ய பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்துகிறார் என்பதை நான் அறிந்துகொள்வதற்காக நீ வந்து சகோதரன் போஸேயிடம் சொல்லுவாயா? நீ அதை செய்வாயா? எங்கள் பரலோக பிதாவே, நான் என் சகோதரியின் மேல் கைகளை வைத்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளுடைய சரீரத்தில் என்ன கோளாறு இருந்தாலும் இன்றிரவு நின்றுபோகும்படியாக, மேலும் அவள் நாளை வரும்போது தேவனுடைய வல்லமையைக்குறித்து சாட்சிகொடுக்க இயேசுவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறேன். ஆமென். சகோதரியே, இப்போது தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. கர்த்தாவே, வியாதிப்பட்டவரை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த கைக்குட்டையை நீர் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன். ஆமென். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்போது நாம் கேட்போம். சகோதரியே, இதை செய்வாயா? நான் விசுவாசிக்கிறேன், இப்போது நீ அவரை விசுவாசிக்கின்றாயா? ஒவ்வொருவரும் ஆவியை மட்டும் பற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் ஜனங்கள் வருவதை காணும்போது, "தேவனே, நீர் அவர்களைக் குணப்படுத்தப் போகிறீர், நீர் அவர்களை சுகப்படுத்தப் போகிறீர்." என்று கூறுவீர்களாக, நீங்கள் இப்போது இதில் ஒரு பாகமாக இருக்கிறீர்கள், நாம் அனைவரும் ஒரே குழுவாக. இது யாருடைய தாயாகவோ இருக்கலாம்; அது உங்களுடைய தாயாக இருக்குமானால்? சகோதரியே, தேவன் உன்னை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கின்றாயா? தேவனே, எங்கள் சகோதரியை சுகப்படுத்த ஜெபிக்கிறேன். நான் இந்த பரிதாபத்துக்குரிய சிறு தாயாரின்மேல் கைகளை வைக்கும்போது, தேவனின் ஆசீர்வாதங்கள் அவள் மேல் தங்கி, அவளுடைய இருதயத்தின் விருப்பத்தை அவளுக்குக் கொடுக்க நான் ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியே, உம்முடைய கட்டளையின்படியாக இதைச் செய்கிறேன், இயேசுவின் நாமத்தில். ஆமென். இப்போது, உனக்கு என்ன நடந்தது என்பதை நாளை கேட்போம். சகோதரியே, நீ வருகின்றாயா? நீ இப்போது வருகையில் உன்னுடைய முழு இருதயத்துடன் விசுவாசிக்கின்றாயா? தேவன் இன்றிரவு உனக்கு இயற்கைக்கு மேம்பட்ட வழியில் ஏதாவது செய்தால்; நான் கூறினதையும், நான் தேவனுக்கு வாக்களித்ததையும் நீ கேட்டிருக்கிறாய், நான் நூறு முதல் ஒன்றுவரை வர முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன், பாருங்கள்?. நீ இப்போது போதுமான அளவு பார்த்தாய் என்று விசுவாசி. அவர் ஆவியை பகுத்தறிதலைக் கொடுப்பதை நீ எப்போதாவது பார்த்திருக்கின்றாயா? உனக்குத் தெரியுமா, இப்போது உன்னிடம் என்ன கோளாறு இருக்கிறதென்பது எனக்கு தெரியும், ஆனால் நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை; நான் செய்தால் அது தொடங்கும், ஆனால் அதே அபிஷேகம் இப்போது இங்கே இருக்கிறது என்று, என் இருதயத்தின் ஆழத்திலிருந்து உனக்குச் சொல்லி, நான் உன் மேல் கைகளை வைத்தால், நீ அதை விசுவாசிப்பாயா? பரலோக பிதாவே, நான் அவள்மேல் கைகளை வைத்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்தப் பிசாசை அந்த ஸ்திரீயிடமிருந்து வெளியே வரும்படி கட்டளையிடுகிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென். இப்போது, நாளை கேட்கலாம். பாருங்கள்? 74. சரி, சகோதரியே, நீ இப்போது உன்னுடைய முழு இருதயத்துடன் விசுவாசிக்கின்றாயா? இப்போது, பரலோக பிதாவே, நான் எங்கள் சகோதரியின் மேல் கைகளை வைத்து, இந்த சாட்சியைக் கொடுத்த பரிசுத்த ஆவியின்படி இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை மன்றாடி, இதை செய்த பிசாசுக்கு கட்டளையிடுகிறேன். இயேசுவின் நாமத்தில் ஆமென். இப்போது, உனக்கு என்ன நடக்கும் என்பதை நாளை கேட்கலாம்; சகோதரன் போஸேயிடம் கூறுவாயாக. சரி. சகோதரியே, அழாதே, இப்போது, நீ ஒரு - நீ இப்போது தேசத்தின் எல்லையில் இருக்கின்றாய், நாம் கடக்கப் போகிறோம். நீ அதை விசுவாசிக்கின்றாயா? சரி. நீ தேவனின் சமூகத்தில் இருக்கின்றாய் என்பது உனக்குத் தெரியும், இல்லையா? உன் சகோதரனுடைய அல்ல, தேவனுடைய சமுகத்தில். அது சரியா? சரி. இப்போது நான் அவரைக் கேட்டுக்கொண்டால், அவர் செய்வார் என்று நீ விசுவாசிக்கின்றாயா? அவர் என்னிடம் சொன்னதாக நான் கூறியவற்றை அவ்வாறேச் செய்ய அவர் எந்த நேரத்திலாவது தவறி இருக்கிறாரா? ஒருபோதும் இல்லை, எப்போதும் சரியாயுள்ளது. இப்போது, அன்று ஒருநாள் அவர் என்னிடம் ஜனங்களுக்காக ஜெபம் செய்து, அவர்கள்மேல் கைகளை வைக்கும்போது அவர்கள் சுகமாவார்கள் என்று கூறினார். நீ அதை விசுவாசிக்கின்றாயா? நீ அதை விசுவாசித்தால், அதை நீ பெற்றுகொள்ளுவாய், என்று உனக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். அது சரி. ஆமாம். இயேசுவே, நான் வந்து, இந்த ஸ்திரீயின் மேல் கைகளை வைத்து, அந்த பிசாசைக் காண்கையில், அது அந்த ஸ்திரீயிலிருந்து வெளிவரும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவனுக்கு கட்டளையிடுகிறேன். அவன் இப்போது செல்லட்டும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம். ஆமென். இப்போது, அவருக்கு நன்றி கூறி, மகிழ்ச்சியுடன் களிகூர்ந்து செல்லுங்கள். 75. இப்போது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருங்கள்; நீங்கள் ஜெபிக்கப்படும்போது, "அன்புள்ள தேவனே, நன்றி" என்று கூறிச் செல்லுங்கள். சரி, சகோதரியே, இப்போது இயேசு உன்னை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கின்றாயா? பரலோக பிதாவே, தேவகுமாரனாகிய இயேசுவின் நாமத்தினாலே அவள் மேல் கைகளை வைக்கும்போது, இந்தப் பொல்லாங்கானதை இந்த ஸ்திரீயை விட்டுப் பிரியும்படியாகவும், இது ஒரு புதிய நாளாக இருக்கவும் ஜெபிக்கிறேன். இன்றிரவு அவள் கடந்து சென்று, நாளை சான்றுகளைக் கொண்டு வரட்டும். இயேசுவின் நாமத்தில். ஆமென். சரி. தாயே, நீ வரும்போது, நீ விசுவாசிக்கின்றாயா? இயேசு உன்னை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கின்றாயா? நான் அவரைக் கேட்டுக்கொண்டால் அவர் இப்போது அதைச் செய்வார் என்று விசுவாசிக்கின்றாயா? எங்கள் பரலோக பிதாவே, இந்த அருமையான இளம் ஸ்திரீ இங்கே நிற்கும்போது, நான் அவள் மேல் என் கைகளை வைத்து, அதனோடு ஆயிரக்கணக்கான ஜனங்கள் அவளுக்காக இப்போது ஜெபித்துக் கொண்டிருக்க, பிசாசு அந்த ஸ்திரீயை விட்டு வெளியேறவும், மேலும் நாளை அவள் சான்றுகளுடன் திரும்பி வந்து இங்குள்ள போதகரிடம் நடந்ததைச் சொல்லவும் நாங்கள் கேட்கிறோம். இயேசுவின் நாமத்தில், தேவனின் மகிமைக்காக. ஆமென். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே, இப்போது போகலாம். இதோ அதைச் செய்வதற்கான வழி. "நன்றி இயேசுவே. நன்றி, இயேசுவே. ஓ, நான் உமக்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், என்னை நீர் குணமாக்கினீர்." என்று கூறிக்கொண்டே செல்லுவாயாக. 76. சகோதரியே, இப்போது நீ விசுவாசிக்கின்றாயா? எங்கள் பரலோக பிதாவே, நான் அவள் மேல் கைகளை வைத்து மேலும் விசுவாசத்தினால், விசுவாசத்தை நம்புவதன் மூலம், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறதை, ஆனால் தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொண்டார் என்று நம்புவதன் மூலம்; அவளும் கூட இன்றிரவு மகிழ்ச்சியுடன் இந்த மேடையை விட்டுச் செல்ல கேட்டுக் கொள்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே, அவள் சுகமடையும்படி கேட்டுக் கொள்கிறேன். ஆமென். சகோதரியே இப்போது மகிழ்ச்சியுடன் செல்லுவாயாக. நீ வருகின்றாயா? நீ என்னை விசுவாசிக்கின்றாயா...? (அந்த சகோதரி சகோதரன் பிரன்ஹாமுடன் பேசுகிறார்.) சரி. சரி, சகோதரியே, நாம்.... அன்புள்ள தேவனே, அவளுடைய தோழிக்கு, நீர் அவளை சுகப்படுத்த வேண்டுமென நாங்கள் ஜெபிக்கிறோம். .... இன்றிரவு அவள் கிறிஸ்துவ வழியில் நிற்கிறாள். கிறிஸ்து நம் அனைவருக்காகவும் நின்றார், அந்த ஸ்திரீயால் தனக்காக நிற்க முடியவில்லை, எனவே இவள் கிறிஸ்தவளாக அவளுக்காக நிற்க வந்திருக்கிறாள்; அவள் சுகமடைந்து, இங்கே வந்து தேவனுடைய மகிமைக்குச் சாட்சிகொடுக்கும்படி, நாங்கள் உம்மிடம் பரிந்துபேசுபவர்களாக ஜெபத்தை ஏறெடுக்கிறோம். ஆமென். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ அதைப் பெறுகிறாய் என்று இப்போது விசுவாசி. 77. நீ சற்றே விசுவாசிக்க முடிந்தால், இது மிகவும் எளிது. சரி, சகோதரியே, இது வேறொருவருக்காகவா? [அந்த சகோதரி சகோதரன் பிரன்ஹாமுடன் பேசுகிறாள்.] நல்லது, ஒரு முடமான ஸ்திரீ. பரலோக பிதாவே, இந்த கைக்குட்டையை நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன், அது முடமான ஸ்திரீயின் மேல் வைக்கப்படும்போது, அவள் நடக்கட்டும், இதை அளியும் பிதாவே. இப்போது, நீரே தேவன் என்று நிரூபியும். மேலும் பிதாவே, இதைக் கொண்டு வந்த இந்த ஸ்திரீயையும் நான் ஆசீர்வதிக்கிறேன். அவளையும் சுகமாக்கும். பிதாவே, இயேசுவின் நாமத்தில். ஆமென். அங்கே அவள் ஒரு முடமான ஸ்திரீயை சுட்டிக் காட்டினாள். தொலைவிலிருந்து வந்து சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஸ்திரீக்கு புற்றுநோய் உள்ளது; அதனால்தான் நீ முடமாக இருக்கின்றாய். நீ மரிக்கப் போகின்றாய், இல்லையா? மரிக்க போகின்றாய் என்று அவர்கள் சொல்கிறார்கள், அவர்கள் உன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு முறையும் உன்னைத் தட்ட வேண்டும், இல்லையா? அது சரியா? எழுந்து வீட்டுக்குச் செல்லுவாயாக, இன்றிரவு அதை விசுவாசித்து வீட்டுக்குச் செல்லுவாயாக. அதுதான் காரியம், தேவனை விசுவாசித்து வீட்டுக்குச் செல்லுவாயாக. உனக்கு கைக்குட்டை தேவையில்லை. அல்லேலூயா! 78. பாருங்கள், நான் இதை கூறவில்லை, பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். அவன் எங்கே இருக்கிறான்? பையனே, இங்கே வா. இனிமையான பையனே நீ விசுவாசிக்கின்றாயா? பிரியமுள்ள பரலோக பிதாவே, இது என்னவென்று அறிந்துக்கொள்ளக்கூடிய விசுவாசத்தைப் பெற இந்த குழந்தை மிகவும் சிறியவனாக இருக்கிறான். அதனால் வேதாகமத்தை புரிந்து கொள்ள முடியாது, ஏனென்றால் அதற்கு போதுமான வயது இல்லை, தந்தை அவனை கொண்டு வருகிறார். ஆனால், அன்பின் தேவனே, நீர் சிருஷ்டிப்பின் தேவன்; நீர் எல்லா வல்லமையின் தேவன், சர்வவல்லமையுள்ளவர்; நீர் சுகப்படுத்த முடியும். இயேசுவின் நாமத்தில் நீர் அதைச் செய்வீர் என்று நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஒவ்வொரு தலையையும் தாழ்த்தவும், ஒவ்வொரு இருதயத்தையும் தாழ்த்தவும், ஒவ்வொரு கண்களையும் மூடவும் நான் விரும்புகிறேன். "உங்கள் தலைகளை உயர்த்துங்கள்" என்று நான் கூறுவதைக் கேட்கும் வரை தலையை தாழ்த்திக்கொண்டிருங்கள். தந்தையே, நீர் முழு இருதயத்தோடு விசுவாசிக்கப் போகிறீரா? அன்பின் தேவனே, நான் இந்தச் சிறுவனை ஆசீர்வதித்து, அவனது ஒவ்வொரு இம்மியளவும் முழுமை பெறச் செய்யுமாறு கேட்கிறேன், நான் என் கைகளை வைக்கையில் தேவனுடைய வல்லமை அவன்மேல் வந்து, அவனுக்கு இந்த ஆசீர்வாதத்தை அருளும்; நான் என் கைகளை அவனது சிறிய சரீரத்தில் மேலும் கீழும் வைக்கையில், அவன் திரும்பி வந்து, தேவனின் மகிமைக்கு ஒரு சாட்சியை அளிக்க, நீர் அவனை நாளை திரும்பவும் வர அனுமதிக்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். சாத்தானே, இயேசுவின் நாமத்தினால், நீ துரத்தப்படுகிறாய்.. இப்போது, தொடர்ந்து சென்று..?... நீர் நாளை இரவு திரும்பி வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்....? நீர் அதை செய்வீரா? 79. சகோதரியே, நீ என்ன நினைக்கின்றாய்? பரலோக பிதாவே, வானங்களையும் பூமியையும் உண்டாக்கினவரே, நட்சத்திரங் களையும் சந்திரனையும் உருவாக்கினவரே, நான் இயேசுவின் நாமத்தினாலே இந்த ஸ்திரீயினிடத்திலிருந்து பொல்லாங்கானதை புறம்பேதள்ளி, அவள் களிகூர்ந்து திரும்பி வர கேட்கிறேன். ஆமென். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஐயா, நீர் என்ன நினைக்கின்றீர்? நீர் குணமடையப் போகின்றீரா? நீர் அவரது சமூகத்தில் இருக்கின்றீர் என்று விசுவாசிக்கின்றீரா? பரலோக பிதாவே, நான் அந்த மனுஷன்மேல் கைகளை வைத்து, பரிசுத்தவான்கள் ஜெபம் பண்ணுகிறபோது, இயேசுவின் நாமத்தினாலே பொல்லாங்கானதை அவரிடமிருந்து புறம்பே தள்ள கேட்கிறேன். ஆமென். ஐயா, நீர் விசுவாசிக்கின்றீரா? விசுவாசத்தோடே செல்லுவீராக. 80. சரி, ஐயா, நீர் விசுவாசிக்கின்றீரா? சர்வவல்லமையுள்ள தேவனே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, ஒவ்வொரு நல்ல வரங்களையும் தருபவரே, நான் ஆசீர்வதிக்கும் மனிதனுக்கு உம்முடைய ஆசீர்வாதங்களை அருளும், இயேசுவின் நாமத்தில். இன்றிரவு அவர் சுகமாகி இங்கிருந்து செல்லட்டும். ஆமென். சகோதரனே, இப்போதே விசுவாசித்து, மகிழ்ச்சியுடன் செல்லுவீராக. பையனுக்காகவா? இயேசு அவனை சுகப்படுத்துவார் என்று நீர் விசுவாசிக்கின்றீரா? அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் இந்தக் குழந்தையிடம் ஒரு வித்தியாசத்தைக் காண்பீர், நீர் வந்து அதைப் பற்றி எங்களிடம் சொல்லுவீரா? சர்வவல்லமையுள்ள தேவனே, குழந்தையின் மேல் கைகளை வைத்து, அந்த சாபம் விலகும்படி கேட்டுக் கொள்கிறேன். நாளை இரவு இந்த தந்தையும் தாயும் வந்து கொடுக்கும் சாட்சியானது இந்த முழு சபையும் வியப்படையச் செய்யும்படியும், கர்த்தாவே, விசுவாசத்தில் முன்னோக்கி செல்பவர்கள் வெட்கமடைய மாட்டார்கள் என்பதை அறிந்துக் கொள்ளும்படியும் செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். சந்தேகப்பட வேண்டாம்; நாளை இரவு கேட்போம். 81. சகோதரியே வா. நீ விசுவாசி. பரலோக பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் சகோதரியின் மேல் கைகளை வைத்து அவள் சுகமடைவதற்காக நான் ஜெபிக்கிறேன், மேலும் அவளின் சுகம் வரும்படியாக கேட்டுக் கொள்கிறேன். ஆமென், இப்போது, சகோதரியே விசுவாசி; நடந்ததென்று எங்களிடம் சொல்ல திரும்பி வா. சகோதரியே, நீ என்ன நினைக்கின்றாய்? நாசரேனாகிய இயேசுவே, தேவனுடைய குமாரனே, இந்த ஸ்திரீ தன் கைகளை கட்டி நிற்கையில், அங்கே என்றாவது ஒரு நாள், இயேசு வரத் தாமதிக்குமானால், அமைதியான மரணத்தில் மடிந்து போவாள். தேவனே, அவள் உயிரோடு இருக்கும்போதே. அவள் சரியான மனநிலையைப் பெற்றிருக்கும்போதே, அவள் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் அந்த பழைய மேகத்திற்கு அப்பால் அவள் பார்க்கட்டும், இயேசுவின் நாமத்தினால் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் சுகப்படுத்தும் தேவனைக் கண்டு சுகமடையட்டும். ஆமென். 82. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, நீ விசுவாசி. அல்லேலூயா! நான் அந்த ஸ்திரீயின் மேல் என் கைகளை வைத்து அவள் - அவள், விசுவாசத்தினாலே, அந்த குருடாக்கும் கண்களிலிருந்து கண்ணாடியை எடுக்கவும், தேவன் பார்வையை மீட்டுத் தரும்படியாகவும் கேட்டுக் கொள்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே அவள் அதைப் பெறட்டும். ஆமென். என்ன நடக்கிறதென்று எங்களுக்கு சொல்லுவாயாக. இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே என் கைகளை நம் சகோதரியின்மேல் வைத்து, இயேசுவின் நாமத்தினாலே, அவளிடமிருந்து வெளியே வா என்று பிசாசுக்கு சவால் விடுகிறேன். ஆமென். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நான் சகோதரியின்மேல் கைகளை வைத்து, அவிசுவாசத்திற்கு சவால் விடுகிறேன். அந்த ஸ்திரீயிடமிருந்து வெளியே வா, அவள் போய் சுகமடையட்டும். ஆமென். உம் தாயார். பரலோக பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, தன் தாய்க்காக நிற்கும் ஒரு பையனின் மேல் நான் கைகளை வைத்து, அவளுடைய கால்கள் சுகமடையும்படி கேட்டுக் கொள்கிறேன். ஆமென். 83. சரி, சகோதரியே, நீ சிரமப்படுகிறாய்; நீ... சரி. பரலோக பிதாவே, தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தையின் அதிகாரத்தினாலும், பரிசுத்த ஆவியின் சாட்சியினாலும், நான் அவள் மேல் கைகளை வைத்து, இந்த ஸ்திரீயின் நிலைமை நலமடைய வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே அவள் வேண்டுமென்று ஜெபிக்கிறேன். ஆமென். (பில்லி, அது என்ன? ஆம். சரி... ?) (நீ இந்த கைக்குட்டை அவருக்காக வைத்திருக்கிறீரா?) பரலோக பிதாவே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, இந்த கைக்குட்டையின் மேல் கைகளை வைக்கிறேன்; தேவன் பவுலோடு இருந்ததை அவர்கள் கண்டதால், அவர்கள் பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களை எடுத்ததாக வேதத்தில் கற்பிக்கப்படுறோம். இப்போது, நாங்கள் பவுல் அல்ல, ஆனால் நீர் இன்னும் இயேசுவாகவே இருக்கிறீர், மேலும் தேவனே இந்த ஸ்திரீயின் தகப்பனின் காலை வேதனைப்படுத்தும் பிசாசையும், மற்றும் இந்த - இந்த ஸ்திரீயின்மேல் இருக்கும் சுகவீனத்தின் ஆவியையும் நீர் கடிந்துகொள்ளவும், மேலும் அவர்கள் சுகமடைய நான் ஜெபிக்கிறேன், இயேசுவின் நாமத்தில். ஆமென். சகோதரியே, நாளை தெரியப்படுத்துவாயாக; என்ன நடக்கிறது என்று பாருங்கள். 84. தேவனே, இந்த பையன் தன் சகோதரிக்காக நிற்கையில், அவர்கள் சிறு குழந்தைகளாக ஒன்றாக விளையாடினர்கள், அவளது நரம்புகள் செயல் இழந்து விட்டன, ஆனால் இயேசு ஜீவிக்கிறார். அந்த ஸ்திரீ நாளை இரவு திரும்பிவந்து மகிமையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பற்றிச் சாட்சிகொடுக்கும்படி இயேசுவின் நாமத்தில் இந்த கைக்குட்டையை அனுப்புகிறேன். ஆமென். என் சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. இந்த முதுகுத் தொல்லையிலிருந்து தேவன் உம்மைக் சுகமாக்குவார் என்றும், உங்களைக் நலமடைய செய்வார் என்றும் நீர் விசுவாசிக்கின்றீரா? சகோதரனே, நான் அதைச் செய்ய முடிந்தும், செய்யாமற்போனால், நான் ஒரு கொடுமையானவனாக இருப்பேன். ஆனால், எனக்கு வாக்குத்தத்தம் கொடுத்த அந்த ஒருவர், "ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்" என்று கூறியதை நான் அறிவேன். "அவர்கள் விசுவாசிக்க மாட்டார்கள் ஏனென்றால் நான் கல்வியறிவு இல்லாதவன்" என்றேன். "இந்த அடையாளங்களை அவர்களுக்கு முன் நிகழ்த்து, அவர்கள் அதை விசுவாசிப்பார்கள்" என்று கூறினார். அதை இப்போது செய்வீரா? எனவே தேவனே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, அந்த மனுஷனுடைய சாட்சியின்படி, எல்லா மனுஷருடைய இருதயத்தையும் அறிந்தவரே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், இந்த முதுகுத் தொல்லை, அது அவனை விட்டு விலகும்படி மற்றும் அவன் உடலின் மற்ற எல்லா வியாதிகளும் விலகும்படி நான் கடிந்துகொள்கிறேன். ஆமென். நீர் முழு இருதயத்தோடு என்னை விசுவாசிக்கின்றீரா? அங்கு சென்று உம் பாதங்களைத் தொடுங்கள்.... உம் கைகள் பாதங்களைத் தொடும் வரை. 85. சகோதரனே, நீர் விசுவாசிக்கின்றீரா? தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, இந்த மனுஷன் சகல வியாதிகளிலிருந்தும் குணமடைய இயேசுவின் நாமத்தில், கேட்டுக் கொள்கிறேன். ஆமென். சகோதரனே என்ன நடக்கிறதென்பதை பாரும்? நீர் இப்போது சுகமாகிவிட்டீர்; எல்லாம் முடிந்துவிட்டது பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். பரலோக பிதாவே, நான் என் சகோதரியின் மேல் கைகளை வைத்து, இயேசுவை கல்லறையிலிருந்து எழுப்பிய தேவனுடைய வல்லமை, அவளுடைய சரீரத்தை இப்போது உயிர்ப்பித்து, அவளை நலமாக்க இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். சகோதரியே, நீ விசுவாசிக்கின்றாயா? அது அதை கூறுகிறது, "நன்றி கர்த்தாவே" என்று சொல்லி களிகூர்ந்து செல்லுவாயாக. 86. அந்த குழந்தை, ஓ, என்னே! பிறவி வளைபாதம் (club- footed). சகோதரியே, தேவன் இந்த பிறவி வளைபாதங்களை நேராக வரும்படிச் செய்தால், நீ நீ ...நீ அவரை ஸ்தோத்திரிப்பாயா? விசுவாசத்தின் ஜெபத்தை ஜெபிக்க தேவன் என்னை அனுப்பினார் என்று நீ விசுவாசிக்கின்றாயா? இந்த குழந்தையின் பாதத்தை நான் என் கையில் பிடித்திருக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார், நான் பேசிய அதே தேவதூதன் இங்கே நின்று கொண்டிருக்கிறார். நான் என் கைகளை அவன் மேல் வைத்து, இயேசுவின் நாமத்தினால் அவனது பிறவி வளைபாதம் இயல்பாக மாற கேட்டுக் கொள்கிறேன். நாளை இரவு அவனை கொண்டுவந்து, தேவனுடைய மகிமையைக்குறித்துச் சாட்சி கொடுப்பாயாக. நீ அவனை உன் இருக்கையில் இறக்கியதும், அமர்ந்து அவனது கால்களுக்கு என்ன நடந்ததென்பதை பார். இயேசு நாமத்தில், சகோதரிக்காகவும். இதை அங்கீகரியும், கர்த்தாவே. பரலோக பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் சகோதரியை ஆசீர்வதிக்கிறேன், தேவனுடைய மகிமைக்காக நான் அதைக் கேட்டுக் கொள்கிறேன். ஆமென். 87. பரலோக பிதாவே, நான் இயேசுவின் நாமத்தினாலே எங்களுடைய சகோதரியின் மேல் கைகளை வைத்து, அவளுடைய சரீரத்தின் இந்த வியாதியைக் கடிந்துகொள்கிறேன். ஆமென். சகோதரியே, இப்போது விசுவாசி. பரலோக பிதாவே, இந்த பரிதாபத்துக்குரிய சிறு தாயின் மேல் கைகளை வைக்கையில், இயேசுவின் நாமத்தினால், நீர் பொல்லாங்கானதை துரத்திவிடும்படியாக நான் ஜெபிக்கிறேன். ஆமென். இப்போது, நண்பர்களே, நான் - நான் கடுமையாக இருக்க முயற்சிக்கவில்லை - இல்லை, ஆனால் நீங்கள் நீங்கள் பிசாசுகளிடம் குழந்தையிடம் நடந்துகொள்வது போன்று நடந்துகொள்ள முடியாது. அது சரி. யார் முதலாளி என்பதை நீங்கள் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நாம் இப்போது முதலாளியாக இருக்கிறோம். ஏனென்றால் நம்முடைய மூத்த சகோதரர் இயேசு இங்கே இருக்கிறார் (ஆமென்.) நம்முடைய மீட்பின் சகோதரர் இங்கே இருக்கிறார். அல்லேலூயா! சரி, தாயே, பிறவி வளைபாதக் குழந்தையுடன் இருக்கும் நீ, உன் குழந்தையின் பாதங்களைப் பார். 88. சரி. சகோதிரியே, நீ விசுவாசிக்கின்றாயா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தேவனுடைய மகிமை அந்த ஸ்திரீயின் மேல் வர நான் கேட்டுக் கொள்கிறேன், அவள் சுகமடைவாள். ஆமென். பரலோக பிதாவே, என் சகோதரனை, நான் ஆசீர்வதிக்கிறேன். இயேசுவை கல்லறையிலிருந்து எழுப்பிய தேவனின் மகிமை இப்போது ஒளி வடிவில் இங்கே நிற்கும் மகத்தான உயிர்ப்பிக்கும் ஆவி, என் ஆத்துமாவுக்குள் எரிந்து கொண்டிருக்கிறது, நான் அவர் மேல் கைகளை வைத்து, இயேசுவின் நாமத்தினால் அவரை விட்டுச் செல்லும்படி இந்த பிசாசுக்கு கட்டளையிடுகிறேன். ஆமென். ஐயா, இதை நீர் விசுவாசிக்கின்றீரா? நீர் விசுவாசித்தால் அதைப் பெற்றுக்கொள்ளலாம்; அவ்வாறே இயேசு கூறினார். ஆமென். 89. சகோதரியே, நீ விசுவாசிக்கின்றாயா? தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, அபிஷேகம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவர் இங்கே பலிபீடத்தில் ஜனங்களிடையே அசைவாடிக் கொண்டிருக்கும் போது, நான் இந்த ஸ்திரீயின் மேல் கைகளை வைக்கிறேன். அவள் நலமடைய வேண்டுமென நான் இயேசுவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறேன். ஆமென். சரி, தகப்பனே. இப்போது முழு இருதயத்தோடும் விசுவாசியும். ஓ, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், சாத்தானே வெளியே வா, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையினாலே அவர் நலமடைய வேண்டும். ஆமென். நீர் இப்போது சரியாக கேட்க முடியும் என்று உமக்குத் தெரியும். நல்லது, இப்போது நீர் தொடர்ந்து சென்று களிகூரும். நல்லது. பரலோக பிதாவே, என் சகோதரியை, யேசுவின் நாமத்தில் நான் ஆசீர்வதித்து, மேலும் தேவனுடைய வல்லமை அவளுடைய உச்சந்தலையிலிருந்து அவள் கால்விரல்கள் வரை (உள்ளங்கால்கள்வரை தமிழாக்கியோன்) அவளது உடலை எழுச்சியூட்டும் படியும் மற்றும் நலமடையும் படியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறேன். ஆமென். சகோதரியே, அதுதான் வழி. பாருங்கள், பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்ய ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கும் போது, அவர் ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கும் போது அவர் நேரடியாக அந்த வழிக்குள் செல்கிறார். ஆமென். நீங்கள் அதை விசுவாசிக்கும்போது அது முடிந்துவிட்டது, ஆனால் நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். அவர் உங்களிடம் திணிக்கப் போவதில்லை; நீங்கள் திறத்து கொடுக்க வேண்டும், அப்போது அவர் இங்கே வர முடியும். அல்லேலூயா! 90. சகோதரியே. நீ விசுவாசிக்கின்றாயா? ஒவ்வொரு வழியையும் திறந்துக் கொடுக்கத்தயாரா? இயேசுவின் நாமத்தினால், பரிசுத்த ஆவியானவர் எங்களுடைய ய சகோதரியிடம் வந்து அவளை சுகப்படுத்த நான் ஜெபிக்கிறேன். ஆமென். பரலோக பிதாவே, நான் என் சகோதரியை ஆசீர்வதித்து, மேலும் பரிசுத்த ஆவியானவர் அவளுடைய உச்சந்தலையிலிருந்து அவள் கால்விரல்கள் வரை (உள்ளங்கால்கள்வரை - தமிழாக்கியோன்) சுகப்படுத்தும்படி நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தினால் பிசாசை பின்னாலே போக சவால் விடுகிறேன். ஆமென். சகோதரியே, நீ விசுவாசிக்கின்றாயா? அப்படியானால் தேவனை துதித்துக் கொண்டே செல்லுவாயாக. சகோதரியே, நீ என்ன நினைக்கின்றாயா? அவரால் கூடுமென்று நீ விசுவாசிக்கின்றாயா? எல்லா தடைகற்களையும் நகர்த்துகிறாயா? இயேசுவின் நாமத்தினால், அல்லேலூயா. கர்த்தாவே, நீர் அவள் சுகமடைய, அவளை ஆசீர்வதியும். கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்ததால் நான் மகிழ்ச்சிக் கொள்கிறேன்; அற்புதமான இயேசு! 91. தேவனே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால், இங்கே எல்லா வழிகளையும் திறந்தருளும், அதனால் இந்த பாய்ந்துகொண்டிருக்கும் பரிசுத்த ஆவி இங்குள்ள ஒவ்வொரு ஆத்துமாவிலும் பலமாக விரைந்து பாய்ந்து, சந்தேகத்தின் இடத்தில் விசுவாசத்தை எழும்பி, அந்த நபரை ஒளிரச் செய்து, அவளின் சரீரத்தை உயிர்ப்பியும், இயேசுவின் நாமத்தில். என் சகோதரனே, விசுவாசத்தோடே செல்லும். சகோதரியே, நீ விசுவாசிக்கின்றாயா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் என் கைகளை அவள் மேலும், மற்றொன்றை கைக்குட்டையின் மேலும் வைத்து, இயேசுவின் நாமத்தினாலே இரண்டையும் ஆசீர்வதிக்கிறேன், அவள் தன் இருதயத்தைத் திறந்து பரிசுத்த ஆவியின் வல்லமை அவளுக்குள்ளாக செல்வதை உணருவாளாக. தேவனே, நீர், "ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்து, நீ ஜெபிக்கும் போது உத்தமமாய் இருந்தால், ஜெபத்திற்கு முன்பாக ஒன்றுமே நிற்காது" என்று கூறினீர். நான் அதைச் செய்கிறேன், தேவனே. அந்த ஸ்திரீ ஒவ்வொரு சந்தேகத்தையும் பின் தள்ளட்டும், மேலும் பரிசுத்த ஆவியானவர் அவளைக் சுகப்படுத்தட்டும். ஆமென். 92. நீங்கள் இங்கே விசுவாசிக்கின்றீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்று வேதாகமம் உரைக்கிறது. தேவனே, இது உம்முடைய வாக்குத்தத்தம், என்னுடையது அல்ல. நான் உமக்கு கீழ்ப்படிகிறேன். இயேசுவின் நாமத்தினால், அவர் குணமடையட்டும். களிகூர்ந்து செல்லும், கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், என் சகோதரனின் சரீரம் சுகமடைய அவரை ஆசீர்வதிக்கிறேன், இயேசுவின் நாமத்தில். ஆமென். சகோதரனே, விசுவாசத்தோடே செல்லும். சகோதரனே, நீர் விசுவாசிக்கின்றீரா? இயேசுவின் நாமத்தினால், நான் என் சகோதரன் சுகம்பெற ஆசிர்வதிக்கிறேன். ஆமென். சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நீர் விசுவாசிக்கின்றீரா? 93. இயேசு உம்மை சுகமாக்குவார் என்று நீர் விசுவாசிக்கின்றீரா? அந்த குழந்தையிடம் வித்தியாசத்தை கண்டால் நீங்கள் அடுத்த... நீங்கள் இப்போது முதல் அடுத்த எட்டு அல்லது பத்து மணி நேரம் வரை கவனித்தால், அது வரை... நான் கூறுகிறேன், நாளை பிற்பகல் ஐந்து மணிக்கு, நீங்கள் அந்த குழந்தையிடம் உள்ள வித்தியாசத்தைக் காண்பீர்கள். தேவன் ஒரு மங்கோலிய குழந்தையை சுகப்படுத்த முடியும் என்று நான் உயிர்தெழுந்த ஜீவிக்கின்ற இயேசு கிறிஸ்துவினாலே உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? இயேசு, "வியாதியஸ்தர்மேல் வைத்தால், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்றார். அந்த குழந்தையிடம், அடுத்த சில மணி நேரத்தில் வித்தியாசத்தை நீங்கள் கவனித்தால், நீங்கள் சாட்சி கொடுக்க வருவீர்களா? இந்தக் குழந்தையை ஆசீர்வதிக்கிறேன்: பரிசுத்த ஆவியானவர், இங்கே நிற்கும் அந்த மகத்தான தேவதூதன், என் பக்கத்தில் நின்று, "வியாதியஸ்தர்மேல் கைகளை வைக்கையில் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்", என்றார். நான் இந்த பிசாசை கடிந்துகொள்கிறேன். தாயின் கருப்பைக்குள் இருந்த இந்த குழந்தைக்கு நீ தீங்கு விளைவித்தாய், ஆனால் இப்போது அவன் தேவனுடைய சமூகத்தில் இருக்கிறான். பிசாசே அவனிடமிருந்து வெளியே வா. இயேசுவின் நாமத்தினாலே, அவன் சுகம்பெறட்டும். அடுத்த சில நாட்களில் குழந்தைக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள். 94. பிதாவே, நீர் அவர்களைக் சுகமாக்கும்படிக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, கைக்குட்டை, துணி இரண்டையும் மற்றும் மனுஷனையும் ஆசிர்வதிக்கிறேன், ஆமென். என் சகோதரனே, விசுவாசத்தோடே செல்லும். சகோதரியே, நீ விசுவாசிக்கின்றாயா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, என் கைகளை அவள்மேல் வைத்திருக்க, அவளை வியாதிக்குள்ளாக்கும் இந்தப் பிசாசுக்கு சவால் விடுகிறேன், அவனால் அவளைப் பற்றிக்கொள்ள முடியாது என்று உரிமை கோருகிறேன். இயேசு மரித்தார், அவர் மீண்டும் ஜீவிக்கிறார். மேலும் இப்போது அந்த மரணத்தின் மூலம், பரிசுத்தவான்களுக்கு ஜீவனைக் கொடுக்க, தம்முடைய ஜீவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குள் உறிஞ்சப்பட வந்த அந்த மன்னா அவரே. அதன்பின்பு மன்னா உள்ளே இருந்தால் (அல்லேலூயா), கிறிஸ்து விசுவாசியில் இருக்கிறார். இயேசுவின் நாமத்தினால், சாத்தானே, நீ அவளை விட்டு விலகு. ஆமென். கர்த்தருடைய கற்பனைகள்..... 95. நல்லது. தேவனே, அவர்கள் இருவரையும் சுகப்படுத்த நான் ஜெபிக்கிறேன். இங்கே கைகோர்த்து நின்றுகொண்டிருக்கும் இந்த இரண்டு ஸ்திரீகள் மேல் நான் கைகளை வைத்து, மகிமையிலிருந்து வெளியே வரும் மன்னாவைப் போல பரலோகத்திலிருந்து பரிசுத்த ஆவியானவர் கீழிறங்கி, அவர்களின் ஆத்துமாக்களை போஷிக்கும்படியாகவும், அவர்கள் சந்தேகத்தின் ஒவ்வொரு நிழலையும் அகற்றும்படியாகவும், இந்த மணி நேரத்திலிருந்து அவர்கள் குணமடைய தொடங்கும் படியாகவும், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். விசுவாசியுங்கள். இப்போது, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்து, நாளை இரவு, அவளை உங்களுடன் இங்கு, சாட்சிக்காக அழைத்து வாருங்கள். ஆமாம், சரி, இப்போது விசுவாசியுங்கள், உங்கள் மகளுக்காக விசுவாசங்கொள்ளுங்கள் (பாருங்கள்?). ஐயா, நீர் விசுவாசிக்கின்றீரா? இயேசுவின் நாமத்தினால் பிசாசு என் சகோதரனை விட்டுப் பிரியும்படியாகவும், அவன் தேவனுடைய மகிமைக்கு நலமாக்கப்படவும் கேட்கிறேன். ஆமென். சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, நீ விசுவாசிக்கின்றாயா? தேவனுடைய குமாரனாகிய, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, பிசாசின் வல்லமை இப்போது இந்த ஸ்திரீயை விட்டு விலக வேண்டுமென இயேசுவின் நாமத்தினால் கேட்கிறேன். ஆமென். ஓ, இது மிகவும் அற்புதமானது. நாம் முக்கியமான பகுதியை அடைந்துள்ளோம் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆமென். தேவனின் வல்லமை எங்கள் சகோதரியை இப்போது நலமாக்க இயேசுவின் நாமத்தினால் கேட்கிறேன். ஆமென். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 96. தேவன் கண்புரையை அகற்றுவார் என்று நீங்கள் விசுவாசிக்கின்றாயா? பரலோக பிதாவே, நான் இந்த ஸ்திரீயை இயேசுவின் நாமத்தினால் ஆசீர்வதிக்கிறேன், இந்த கண்புரைகளை, இந்த குருட்டு ஆவிகளை நான் கடிந்துகொள்கிறேன், நீ மரிக்க வேண்டும். சாத்தானே, வெளியே வா. நீ மரணத்தின் வல்லமையை கொண்டிருக்கிறாய், ஆனால் ஜீவனின் வல்லமை இங்கே இன்றிரவு இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ளது, ஸ்திரீயை விட்டு விலகு. ஆமென். இப்போதே இயேசுவின் நாமத்தினால் பெற்றுக் கொண்டு செல்லுவாயாக. ஆமென். ஸ்திரீயே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவனே, இப்போது நீர் அந்த ஆக்ஸிஜன் கூடாரத்தின் (சரீரத்தின் - தமிழாக்கியோன்) உள்ளே பார்க்கிறீர்; இங்கே ஒரு தந்தை மரிக்கும் தருவாயிலுள்ள தன் குழந்தைக்காக நிற்கிறார். நான் மரணத்தின் பிசாசைக் கடிந்து கொண்டு, மேலும் அந்த கூடாரத்தின் உள்ளே ஜீவன் வரவேண்டுமென கேட்கிறேன், மகா பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்யும் அந்த ஷெகினா மகிமை, இந்த தந்தையின் விசுவாசத்தைக் கருத்தில் கொண்டு இன்றிரவு அந்த ஆக்ஸிஜன் கூடாரத்தின் உள்ளே செல்லட்டும், இயேசுவின் நாமத்தில் ஆமென். இப்போது என்ன நடக்கிறது என்று நாம் கேட்போம். 97. அதைக் குறித்து என்ன சகோதரியே, நீ விசுவாசிக்கின்றாயா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், என் கைகளை சகோதரியின் மேல் வைத்து, விசுவாசமுள்ள ஜெபம் என் உதடுகளிலும் மற்றும் என் இருதயத்திலும் இருக்க, வாக்குத்தத்தத்தைக் கொடுத்த தேவனை நோக்கி நகர்ந்து, அவளைக் சுகப்படுத்த கேட்கிறேன், இயேசுவின் நாமத்தில் ஆமென். 98. சகோதரனே, நீர் விசுவாசிக்கின்றீரா? ஆயத்தமாக இருக்கிறீரா? வழிகள் விலகிவிட்டனவா? பரிசுத்த ஆவியானவர் வந்து கிரியைச் செய்ய நீர் தயாராக இருக்கிறீரா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, பிதாவே, நான் விசுவாச ஜெபத்தில் கேட்கிறேன், இந்த மனிதனின் சாட்சியின்படியும், அவரது இருதயம் திறக்கப்பட்ட படியினாலும், பரிசுத்த ஆவியானவர் அவரை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்கள்வரை சுகமாக்க நான் ஜெபிக்கிறேன், தேவனே. ஆமென். அவரை துதித்துக் கொண்டே செல்லும். 99. சகோதரியே, நீ விசுவாசிக்கின்றாயா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, என் சகோதரியின் மேல் கைகளை வைத்து, இந்த வியாதி அவளை விட்டு நீங்க ஜெபிக்கிறேன், இயேசுவின் நாமத்தில், ஆமென். சகோதரியே, களிகூர்ந்து செல்லுவாயாக, சந்தோஷமாயிருப்பாயாக. நீ விசுவாசிக்கின்றாயா? இயேசுவின் நாமத்தினாலே நான் என் சகோதரியின்மேல் கைகளை வைத்து, பரிசுத்த ஆவியானவர் அவள்மேல் வந்து, அவளை சுகமாக்க, அவளை நலமாக்கும்படி கேட்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென். 100. இயேசுவின் நாமத்தினாலே நான் இந்த ஸ்திரீயின் மேல் கைகளை வைத்து, அவள் தேவனுடைய மகிமைக்காக முழுமையாய் செல்லட்டும். ஆமென். சாத்தானே, நீ ஒரு பொய்யன், இயேசுவின் நாமத்தினாலே, எங்கள் சகோதரி நலமாக்கப்பட நாங்கள் விசுவாசத்தை பற்றிப் பிடிக்கிறோம். ஆமென். சரி, சகோதரியே, இப்போது நீ விசுவாசிப்பாயாக. தேவனே, இயேசுவின் நாமத்தினால் நான் இந்த முடமான ஸ்திரீயின் மேல் கைகளை வைத்து, இப்பொழுதிற்கும் நாளை இரவிற்கும் இடையில் எப்பொழுதாவது இந்த கக்கதண்டம் மேடையில் மேல் வைக்கப்படும் படியாகவும், அவள் நலமடையவும் கேட்கிறேன். நான் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். இப்போதே விசுவாசித்து செல்லுவாயாக. சரி, சகோதரியே, நீயும் அதையே விசுவாசிக்கின்றாயா? இப்பொழுதிற்கும் நாளை இரவிற்கும் இடையில் எப்பொழுதாவது, இந்த கக்கதண்டங்கள் மேடையில் வைக்கப்படவும், நீ தேவனுக்கு துதி செலுத்தவும், நாங்கள் தேவனிடம் சாட்சியைக் கேட்டுள்ளோம். நீ அதை விசுவாசிப்பாயா? 101. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, இந்த பரிதாபத்திற்குரிய ஸ்திரீ, அவள் வயதாகி, நரைத்த தலைமுடியுடன் இருப்பினும், ஆனால் கர்த்தாவே, என் மனம் எண்பத்தாறு ஆண்டுகள் சக்கர நாற்காலியில் இருந்த காங்கிரஸ்காரர் உப்ஷாவை (Upshaw) நோக்கிச் செல்கிறது, உயிர்த்தெழுதலும் ஜீவனும் நீரே; நீர் எலும்புகளில் கால்சியத்தை வைக்க முடியும், அவளைக் சுகப்படுத்த ஜெபிக்கிறேன், மேலும் நாளை இரவு கக்கதண்டங்கள் இங்கே கிடக்கும், இயேசுவின் நாமத்தில். ஆமென். சகோதரியே வருவாயாக. இயேசுவின் நாமத்தினாலே, இந்த இளம் ஸ்திரீயை குணமாக்க நான் கேட்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே, தேவனுடைய வல்லமை அவளுக்குள்ளாக சென்று அவளை சுகப்படுத்தட்டும். ஆமென். நீ இந்த சாட்சியை கொடுப்பாயாக. நீ விசுவாசி. உனது தொந்தரவு என்ன? ஓ, உருத்திரிபு (deformity)? நீ விசுவாசிக்கின்றாயா? ஓ, என்னே. இந்த உருக்குலைந்த கால்கள் நேரானால் நீ வந்து சாட்சி சொல்வீரா? தேவனே, நான் இந்த குழந்தையின் மீது என் கைகளை வைத்து, குழந்தையை உண்டாக்கினவர் நீரே என்றும், நடப்பட்ட தேவனுடைய வித்தை பிசாசு தடை செய்திருக்கிறான் என்பதை அறிந்து, இப்போது இயேசு வந்து சாத்தான் செய்த எல்லா தவறுகளையும் சரிசெய்தபடியினால், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே குழந்தையை விட்டு வெளியே வர, கல்வாரி வாக்குத்தத்தத்தின் இரத்தத்தால், இயேசுவின் நாமத்தில் இந்த பிசாசுக்கு நாங்கள் கட்டளையிடுகிறோம். ஆமென். இப்போது, ஒரு சாட்சியோடு, நாளை இரவு குழந்தையைப் பார்க்க விரும்புகிறேன். 102. ஐயா, நீர் விசுவாசிக்கின்றீரா? தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, நான் இந்த மனுஷன்மேல் கைகளை வைத்து, வேதனையின் பிசாசு அவரை விட்டுச் விலகும்படி கேட்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவரிடமிருந்து வெளியே வா. சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, இப்போதே விசுவாசித்து செல்லும். சகோதரியே, நீ விசுவாசிக்கின்றாயா? தேவனே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனின் ஆக்கியோனே, ஒவ்வொரு நல்ல வரங்களையும் தருபவரே, இந்த ஸ்திரீயை இயேசுவின் நாமத்தினாலே, அவள் சுகப்பட ஆசீர்வதிக்கிறேன். சாத்தானே, வெளியே வா. ஆமென். எவ்வளவு அற்புதமானது. சகோதரனே, சகோதரியே, அது இதுதான் என்று நான் விசுவாசிக்கிறேன். இதைப் பற்றி நான் அற்புதமாக உணர்கிறேன். " 103. இயேசுவே, தேவகுமாரனே, இந்த ஸ்திரீக்காகவும் அவள் கையில் இருக்கும் இந்த கைக்குட்டைக்காகவும் நான் ஜெபிக்கிறேன். தேவனே, எல்லா சந்தேகங்களும் உருண்டோடட்டும்; ஒவ்வொரு பிசாசும் நின்று, "நல்லது, உனக்கு அது கிடைக்காது" என்று சொல்லட்டும். அந்த ஸ்திரீயின் மேல் இப்போது தொங்கிக் கொண்டிருக்கும் அந்த பழைய அலைக்கழிக்கும் பிசாசு, அவன் நகர்வதை உணர்ந்தும், அவளை விசுவாசிக்கக்கூடாமல் செய்ய முயற்சிப்பதையும் நான் அறிவேன். சாத்தானே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் உனக்கு கட்டளையிடுகிறேன். இயேசுவின் நாமத்தினாலே இந்த ஸ்திரீயிலிருந்து வெளியே வா. இப்போது, உனது கையை உயர்த்தி அவரை ஸ்தோத்தரி. களிகூர்ந்து மேடையை விட்டு செல்லுவாயாக. உன் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக; நீ சரியான இடத்தில் இருக்கிறாய்; நீ சரியாக நீரூற்றில் இருக்கிறாய். இயேசு இப்போது உன்னை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கின்றாயா? சர்வ வல்லமையுள்ள தேவனே இந்த சிறு பையனின் ஒவ்வொரு மீறுதலையும் மன்னியும். இயேசுவின் நாமத்தினாலே என் கைகளை அவன்மேல் வைத்து, அவனைத் துன்புறுத்திய பிசாசு யுத்தத்தில் தோற்றுப்போய்விட கேட்கிறேன். இயேசுவே, அந்தப் பையன் உம்மிடம் வர விரும்புகிறான். இயேசுவின் நாமத்தினாலே, நீர் அவனை வரச்சொல்லுகிற சிங்காசனத்திற்கு முன்பாக விசுவாசக் கரங்களோடு நான் அவனைக் கொடுக்கிறேன். ஆமென். நீ இப்போது அவரை உன் இரட்சகராக ஏற்றுக் கொள்கின்றாயா? உன் சுமைகள் அனைத்தும் போய்விட்டன என்று நீ விசுவாசிக்கின்றாயா? இதுமுதல் நீ அவருக்காக வாழ்வாயா? மகிழ்ச்சியுடன் மேடையை விட்டு இறங்கி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். ஆமென். 104. என் சகோதரனே, நீர் விசுவாசிக்கின்றீரா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, என் சகோதரனை இயேசுவின் நாமத்தினாலே ஆசீர்வதிக்கிறேன், அவருடைய கண்களைத் திறக்க செய்து, அவர் பார்க்கும்படிச் செய்யும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, அவரை ஆசீர்வதிக்கிறேன். ஆமென். என் சகோதரனே, இப்போதே விசுவாசித்து செல்லுங்கள். என் சகோதரியே, நீ விசுவாசிக்கின்றாயா? நான் பிசாசுக்கு கட்டளையிடுகிறேன், சந்தேகத்தின் பிசாசு, அங்கே இருக்கும் ஒரே பாவம், அவிசுவாசம் மட்டுமே. மேலும் நான் அவிசுவாசம் துடைத்தெறியப்பட, இருதயத்திலிருந்து ஒவ்வொரு சுமையும் பின் தள்ளப்பட, மேலும் தேவனின் ஒளி இருளைக் கடந்து அவளுடைய ஆத்துமாவில் பிரகாசித்து, புதிய ஜீவன் வரும்படியாக கேட்கிறேன். எங்கள் ஜீவனையும் மற்றும் இளமையையும் கழுகு போல புதுப்பிப்பேன் என நீர் கூறியிருக்கிறீர். ஓ, எப்படி அந்த கழுகு, இன்னும் வயதாகிவிட்ட நிலையிலும், ஒவ்வொரு சில மணி நேரமும் தனது இளமையை புதுப்பிக்கிறது. அல்லேலூயா! இயேசுவின் நாமத்தினாலே இதை அங்கீகரியும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செல்லுங்கள். 105. சர்வ வல்லமையுள்ள தேவனே, இன்றிரவு இங்கே இருக்க முடியாத பலர் இருக்கிறார்கள், அவர்கள் கைக்குட்டைகளை அனுப்பியுள்ளனர், நான் எனது கரங்களைப் பற்றிப் பிடித்துக் கொள்கிறேன்; என்ன ஒரு மோசமான பேரமைப்பு, ஒரு மனிதன் தன் கைகளைப் பற்றிப் பிடிப்பது எவ்வளவு பரிதாபத்திற்குரிய காரியம், தகுதியற்ற, பாவம் நிறைந்த, ஆனால் தேவனே, பரிசுத்தமான கைகளை நீர் எங்கே காண்பீர்? அவர்கள் பரலோகத்தில் மட்டுமே உள்ளனர். ஆனால் நீர் செய்யச் சொன்னதினால், நான் செய்கிறேன். கர்த்தாவே, உம்முடைய கட்டளையின்படியே, நான் ஒவ்வொரு பிசாசையும் கடிந்துகொள்கிறேன், இந்த கைக்குட்டைகள் தேவனுடைய மகிமைக்காக, வைக்கப்படும் ஒவ்வொரு வியாதியஸ்தரையும் சுகப்படுத்தட்டும், இயேசுவின் நாமத்தில். ஆமென். 106. இந்த கூட்டத்தில், ஜெப அட்டை இல்லாமல், இயேசு கிறிஸ்து உங்களை சுகப்படுத்த இங்கே இருக்கிறார் என்று விசுவாசிக்கும் உங்களுக்கு, இப்போதே இயேசு உங்களை சுகமாக்குவார் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? நான் அந்த ஆவியை எதிர்த்துப் போராட முயன்றேன்... அது சரி, உங்கள் காலில் நில்லுங்கள். நாம் இங்கே இருக்கிறோம். நாம் தேசத்தின் எல்லையில் இருக்கிறோம். இதோ அந்த வாக்குத்தத்தம்; அதை பெற்றுக்கொள்வோம். தேவன் வாக்குத்தத்தம் செய்தார். எல்லா சந்தேகத்தையும் அகற்றுங்கள். பரிசுத்த ஆவியானவர் உள்ளே வரட்டும், தேவனுடைய வல்லமை. தேவனே, நான் இப்போது ஜெபிக்கிறேன். நான் "தேசம் நன்றாய் இருக்கிறது. நாங்கள் அதை பிடிக்கும்படி பின்தொடர்ந்து செல்கிறோம்" என்று பள்ளத்தாக்கில் நின்ற யோசுவா சொன்னதுபோல, கர்த்தாவே; இதோ நாங்கள் இயேசுவின் நாமத்தினாலே வருகையில், நான் அவிசுவாசத்தின் ஒவ்வொரு ஆவியையும் விரட்டியடிக்கவும், தேவனுடைய மகிமைக்காக, பலவீனமானவர் விட்டுப்போகாதபடியும் கேட்கிறேன். ஆமென். ஜனங்கள் அவரை ஸ்தோத்திரித்து, அவரை மகிமைப்படுத்துங்கள், அல்லேலூயா.